For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பக்கத்துலயே வர முடியாத அளவு தூர்நாற்றமா? இத சாப்பிட்டா சரி ஆகிறும்!

உடலில் வீசும் துர்நாற்றத்தை போக்க சாப்பிட வேண்டியவை

By Lakshmi
|

உடல் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை. பலர் இந்த உடல் துர்நாற்ற பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த உடல் துர்நாற்றமானது ஹார்மோன் மாற்றங்கள், அதிக வியர்வை படிதல், ஆரோக்கியமற்ற டயட், சுத்தமின்மை போன்றவற்றால் உண்டாகிறது. இந்த உடல் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, இதனால் உங்களது தன்னம்பிக்கை மரியாதை போன்றவை பாதிப்படைகிறது.

நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது, லிப்ட்டில் பயணம் செய்யும் போது, அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது உங்களது உடல் துர்நாற்றம் காரணமாக ஒருவர் உங்களை விட்டு விலகி ஓடினால் உங்களுக்கு அது எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கும் என யோசித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாசனை திரவியங்கள்

வாசனை திரவியங்கள்

உடல் துர்நாற்றத்தை போக்க என்ன தான் வாசனை திரவியங்கள் இருந்தாலும் கூட, இவை எல்லாம் உங்களது உடல் துர்நாற்றத்தை மறைக்கிறதே தவிர, அவற்றை போக்குவது இல்லை. உங்களது உடலில் இருந்து வரும் துர்நாற்றத்தை குறைக்க நீங்கள் உங்களது உணவு முறைகளை சரியாக அமைத்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த பகுதியில் உடல் துர்நாற்றத்தை போக்க நீங்கள் என்னென்ன சாப்பிடலாம் என்பதை பற்றி காணலாம்.

1. எலுமிச்சை

1. எலுமிச்சை

எலுமிச்சை உடலில் நறுமணம் வீச வைக்க மிகவும் சிறந்தது. எலுமிச்சையில் ஆண்டி பாக்டீரியல் தன்மை உள்ளது இது உடல் துர்நாற்றத்தை விரட்ட வல்லது. இது பாக்டீரியாவினால் வரும் வாய் துர்நாற்றத்தையும் போக்க வல்லது. இதில் உள்ள அசிட்டிக் தன்மையானது உங்களது உடலில் உள்ள பி.எச் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதனால் உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் வாழ்வது கடினமாகிவிடுகிறது.

தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிந்து உங்களது நாளை தொடங்குவது சிறப்பாக அமையும். உங்களது உடலில் அக்குள் பகுதி, கால்கள் போன்ற இடங்களில் துர்நாற்றம் வீசுவது தெரிந்தால், எலுமிச்சையை அந்த இடத்தில் தேய்த்து, காய்ந்ததும், நன்றாக குளிக்கவும். இதனால் உங்களது உடல் துர்நாற்றம் விலகும்.

2. தக்காளி

2. தக்காளி

உடல் துர்நாற்றத்துடன் எதிர்த்து போராடும் மற்றுமொரு பொருள் தக்காளி. தக்காளியில் இயற்கையான ஆன்டி பாக்டீரியல் தன்மை இருப்பதால் இது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஒழிக்கிறது.

தக்காளி ஜூஸை பருகுவதால் உங்களது உடலின் வெப்பநிலையானது சமநிலைக்கு வருகிறது. தினமும் அரை கப் புதிதாக தயாரிக்கப்பட்ட தக்காளி ஜூஸை பருகலாம் அல்லது புரூட் சாலட் வெஜிடபிள் சாலட்களில் தக்காளியை சேர்த்து சாப்பிடலாம்.

குளிக்கும் முன்னர் தக்காளியின் சாறை உடலில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இதனால் உங்களது உடலில் துர்நாற்றம் வீசாது.

3. க்ரீன் டீ

3. க்ரீன் டீ

க்ரீன் டீயில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன இது வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. மேலும் உடலில் உண்டாகும் துர்நாற்றத்தையும் இது போக்குகிறது.

தினமும் க்ரீன் டீயில் தேன் கலந்து மூன்று முதல் நான்கு கப் வரை குடித்து வந்தால் உடலில் உண்டாகும் அனைத்து வகையான துர்நாற்றங்களும் நீங்கும்.

4. தேங்காய் எண்ணெய்

4. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உங்களது உடலில் நல்ல மனம் வீச வைக்க உதவியாக இருக்கிறது. இதில் ஆன்டி மைக்ரோ பையல் தன்மை உள்ளது. இது உடலில் உள்ள துர்நாற்றம் வீச காரணமாக உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது.

சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்களது வாயில் ஊற்றி, அது வாயின் அனைத்து பகுதிகளுக்கும் படுமாறு செய்ய வேண்டும். அதற்காக தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாய் கொப்பளிக்க கூடாது. நீங்கள் துர்நாற்றம் வீசும் இடங்களில் தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யலாம்.

5. ரோஸ் மெர்ரி

5. ரோஸ் மெர்ரி

ரோஸ் மெர்ரி உடலில் வீசும் துர்நாற்றத்தை போக்க வல்லது. உடலில் உள்ள அனைத்து துர்நாற்றம் உருவாக காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களையும் போக்க வல்லது. ரோஸ் மேர்ரி அடங்கியுள்ள டீயை குடிப்பதன் மூலம் உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

6. பட்டை

6. பட்டை

பட்டை ஒரு மிகச்சிறந்த மசாலா பொருளாகும். இது சமையலுக்கு மட்டுமல்ல, உடலுக்கு மனமூட்டவும் சிறந்தது. தினமும் ஒரு முறையாவத் பட்டை கலந்த டீயை பருகுவது சிறந்தது. டீயில் சிறிதளவு பட்டையை போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த டீயை ஆற வைத்து பின்னர் பருகலாம்.

7. வெந்தயம்

7. வெந்தயம்

வெந்தயம் ஒரு மிகச்சிறந்த சமையலறையில் உள்ள மருத்துவ பொருளாகும். இதில் அதிகளவு விட்டமின்கள், மினரல்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகியவை உள்ளன. இது உடலில் துர்நாற்றம் வீச உதவியாக இருக்கிறது. இரவே வெந்தயத்தை நன்றாக ஊற வைத்து விட வேண்டும். பின்னர் காலையில் அந்த வெந்தயத்தையும் அரைத்து அந்த நீரை பருக வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.

8. அருகம்புல்

8. அருகம்புல்

அருகம்புல் ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த அருகம்புல் ஜூஸை தினமும் குறைந்தது ஒருமுறையாவது குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலில் நறுமணம் வீச ஆரம்பிக்கும்.

9. வெங்காயம்

9. வெங்காயம்

உணவில் அதிகமாக வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்ப்பதால் உடலில் துர்நாற்றம் வீச தொடங்கும். எனவே போதுமான வரை இவற்றை தடுப்பது நல்லது.

10. சல்பர் உணவுகள்

10. சல்பர் உணவுகள்

சல்பர் உள்ள உணவுகளை அதிகமாக சேர்ப்பது உடலில் துர்நாற்றம் வீச காரணமாக அமையும். ஆல்கஹால், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

11. இறுக்கமான உடைகள்

11. இறுக்கமான உடைகள்

இறுக்கமான காலணிகள், இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும். தினசரி குளியல், ஒருமுறை ஆடைகளை உடுத்தியதும் துவைத்த பின்னர் மீண்டும் அணிதல், காட்டன் உடைகளை அணிவது போன்றவை உடல் துர்நாற்றத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

foods you should eat for stop body smell

foods you should eat for stop body smell
Story first published: Tuesday, October 24, 2017, 16:51 [IST]
Desktop Bottom Promotion