For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைகளில் அசிங்கமாக சதை தொங்குதா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க..

இங்கு கைகளில் அசிங்கமாக தொங்கும் தசைகளை இறுக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

உங்கள் கைகளில் தசை தொங்குவதால், உங்களால் ஸ்லீவ்லெஸ் உடையை அணிய அசிங்கமாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையின் மூலம் அதற்கு ஒரு நல்ல தீர்வைக் காணலாம். அதுவும் இயற்கை வழியில் கைகளில் தொங்கும் சதையை எப்படி இறுக்குவது என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Embarrassed Of Saggy Arm Skin? Try These Miraculous Remedies!

பொதுவாக வயதான காலத்தில் தான், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலாஜன் உற்பத்தி குறைந்து, தசைகள் தொங்க ஆரம்பிக்கும். ஆனால் இளமையிலேயே இந்நிலை ஏற்பட்டால், அது நிச்சயம் பலருக்கும் சங்கடத்தை தான் ஏற்படுத்தும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கைகளில் அசிங்கமாக தொங்கும் தசைகளை இறுக்க உதவும் சில வழிகளைக் கொடுத்துள்ளது. அவற்றை பின்பற்றி நன்மைப் பெறுங்கள். முக்கியமாக எந்த ஒரு முறையைப் பின்பற்றும் முன்பும், அவற்றை சருமத்தின் ஒரு பகுதியில் தடவி சோதித்து ஏதேனும் பக்க விளைவு உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல் உப்பு ஸ்கரப்

கல் உப்பு ஸ்கரப்

1 டீஸ்பூன் கல் உப்பை நீர் சேர்த்து கலந்து, கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்யுங்கள். பின் குளிர்ந்த நீரில் கைகளைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், கைகளில் உள்ள தசைகள் இறுக்கமடையும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் மாஸ்க்

ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் மாஸ்க்

ஒரு கையளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து தேன் சேர்த்து நன்கு அரைத்து, தசைகள் தொங்கும் கைகளில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, சருமம் இறுக்கமடையும்.

கடுகு எண்ணெய் மசாஜ்

கடுகு எண்ணெய் மசாஜ்

2 டீஸ்பூன் கடுகு எண்ணெயை தசை தொங்கும் கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், விரைவில் ஓர் நல்ல பலன் கிடைக்கும்.

ஆளி விதை மற்றும் எலுமிச்சை

ஆளி விதை மற்றும் எலுமிச்சை

ஒரு கையளவு ஆளி விதையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கைகளில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை இரவில் படுக்கும் முன் கைகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கைகளில் தொங்கும் தசைகள் இறுக்கமடையும்.

அவகேடோ மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ்

அவகேடோ மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ்

நன்கு கனிந்த அவகேடோ பழத்தின் கனிந்த பகுதியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, கைகளில் உள்ள தொங்கும் தசைகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

பட்டை மற்றும் மஞ்சள் தூள்

பட்டை மற்றும் மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

முட்டை

முட்டை

2 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதை தசை தொங்கும் கைகளில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி நன்கு காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், கைகளில் உள்ள சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, சருமம் இறுக்கமடையும்.

காபி மற்றும் இஞ்சி எண்ணெய்

காபி மற்றும் இஞ்சி எண்ணெய்

1 டீஸ்பூன் காபி பவுடரில், சில துளிகள் இஞ்சி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, கைகளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு ஒருமுறை செய்வது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

தினமும் பாதாம் எண்ணெயை கைகளில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து வந்தால், கைகளில் தொங்கும் தசைகள் இறுக்கமாகும்.

ஆப்பிள் ஜூஸ் மற்றும் தர்பூசணி ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ் மற்றும் தர்பூசணி ஜூஸ்

ஆப்பிள் மற்றும் தர்பூசணி ஜூஸை சரிசம அளவில் எடுத்து கலந்து, கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் நன்கு காய வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், கைகளில் உள்ள தொங்கும் தசைகளைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Embarrassed Of Saggy Arm Skin? Try These Miraculous Remedies!

Want to get rid of saggy arm skin? Then these are the best home and natural treatments for the sagging skin on the arms.
Story first published: Friday, May 19, 2017, 13:26 [IST]
Desktop Bottom Promotion