அழகுக்காக போடும் டாட்டூஸ் உயிரை பலி வாங்குமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஆண்களும் பெண்களும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அதில் தற்போது டாட்டூஸ் போடுவது மிகவும் பிரபலமாக உள்ளது. ஆண்கள் பெண்கள் என இருபாலரும் டாட்டூஸ் போடுவதை விரும்புகின்றனர்.

இதில் இரண்டு வகை உண்டு பர்மனென்ட் மற்றும் டெம்ரவரி. பெர்மனென்ட் டாட்டூஸ், வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும். டெம்ரவரி டாட்டூஸ் ஒரு வாரத்தில் அழிந்துவிடும். அனைவருக்கும் விருப்பமான இந்த டாட்டூஸ் போடுவதால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது என்பதை பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாட்டூஸ்..!

டாட்டூஸ்..!

ஊசி போன்ற ஒரு கருவியில் ரசாயண மை நிரப்பி, உடலில் வரைவதே 'டாட்டூஸ்'. இதை பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் போட்டுக்கொள்ளலாம். பர்மனென்ட் டாட்டூஸ் வாழ்நாள் முழுவதும் உடலில் நிலைத்திருக்க போவதால், யோசித்து தேர்வு செய்வது அவசியம்.

தரமான இங்க்

தரமான இங்க்

டெம்ரவரி டாட்டூஸ் போடுவதால் வலிகள் ஏற்படுவதில்லை. ஆனால் பர்மனென்டாக போடும் போது கட்டாயம் வலி இருக்கும். டாட்டூஸ் போட்ட பின் அந்த இடத்தில் பத்து நாட்களுக்கு அரிக்கும். தரமான நிபுணர்களிடம் போட்டால் அவர்கள் நல்ல இங்க் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி உங்களது சருமத்திற்கு எந்தவித இங்க் பொருந்தும் என்பதை அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக அறிந்திருப்பார்கள்.

கவனம் தேவை

கவனம் தேவை

பர்மனென்ட் டாட்டூஸ் போட்ட இடத்தில் 20 நாட்களுக்கு சூரியஒளி படமால் பார்த்துக்கொள்ள வேண்டும். டாட்டூஸ் மீது தண்ணீர் படலாம். ஆனால் சோப்பு போன்ற எந்த வித கெமிக்கல்களும் படக்கூடாது. தேங்காய் எண்ணெய் போடுவது மற்றும் நேரடியாக ஷவர் பாத் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இறந்த செல்கள்

இறந்த செல்கள்

டாட்டூஸ் போட்ட இடத்தில் உள்ள இறந்த செல்கள் பத்து நாட்களில் தானாக உறிந்து விடும். அதற்கு முன் நீங்கள் அதை எதுவும் செய்யக்கூடாது.

உடல் உழைப்பு வேண்டாம்

உடல் உழைப்பு வேண்டாம்

டாட்டூஸ் போட்ட கைகளுக்கு அதிக உடல் உழைப்பு இருக்க கூடாது. ஜிம்மிற்கு போவது, நீச்சல் அடிப்பது போன்றவை வேண்டாம்.

எய்ட்ஸ் பாதிப்பு

எய்ட்ஸ் பாதிப்பு

டாட்டூஸ் போடுவதால் இரத்தம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. எய்ட்ஸ் உள்ள ஒருவருக்கு பயன்படுத்தும் ஊசிகளை உங்களுக்கு பயன்படுத்தினால், எய்ட்ஸ் பரவும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுத்தமற்ற ஊசிகள்

சுத்தமற்ற ஊசிகள்

தரமற்ற டாட்டூஸ் போடும் இடங்களுக்கு சென்று டாட்டூஸ் போடுவது நிச்சயம் தவிர்க்கபட வேண்டியது அவசியம். அங்கே சுத்தமற்ற ஊசிகளை அவர்கள் பயன்படுத்தினால், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம்.

நிபுணர்கள் அவசியம்

நிபுணர்கள் அவசியம்

டாட்டூஸ் போடுவது ஆரோக்கியத்துடனும் சம்பந்தபட்டது. எனவே தரமான இடங்கள் மற்றும் நல்ல நிபுணர்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

இதனால் தீங்கு இல்லை

இதனால் தீங்கு இல்லை

தற்காலிக டாட்டூஸ்கள் காய்கறிகளின் சாறுகளில் இருந்து கிடைக்கும் நிறங்களால் போடப்படுவதால், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Careless Tattoo Mistake Led to a Person Death

here are the some Careless Tattoo Mistake Led to a Person Death