மூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

குதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான பராமரிப்பைக் கொடுத்தால், அதனால் நிலைமை தீவிரமாகி இரத்தக்கசிவு, கடுமையான வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம். குதிகால் வெடிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், 15 நாட்களுக்கு ஒருமுறை பெடிக்யூர் செய்ய வேண்டும்.

மேலும் தினமும் இரவில் படுக்கும் முன், பாதங்களுக்கு ஒருசில பொருட்களைத் தடவி மசாஜ் செய்து வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்குவதோடு, பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, குதிகால் வெடிப்பு மறையும்.

சரி, இப்போது குதிகால் வெடிப்பை விரைவில் மறையச் செய்யும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் மேற்கொண்டு வந்தால், மூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெட்ரோலியம் ஜெல்லி (வேஸ்லின்)

பெட்ரோலியம் ஜெல்லி (வேஸ்லின்)

தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி வந்தால், பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் கூட மாயங்களைச் செய்யும். அதற்கு இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து வர மூன்றே நாட்களில் மாற்றத்தை நீங்கள் காணலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயும் பாத வறட்சியை நீக்கி, குதிகால் வெடிப்பை மறைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், உங்கள் பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக இருக்கும்.

மீன் பெடிக்யூர்

மீன் பெடிக்யூர்

உங்களால் மீன் பெடிக்யூர் செய்ய முடியுமானால், அதனை மேற்கொள்ளுங்கள். இது மிகவும் அற்புதமான வழி. இதனால் குதிகால் வெடிப்பு நீங்குவதோடு, பாதங்களும் நன்கு அழகாக இருக்கும். அதற்கு இந்த பெடிக்யூரை 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளுங்கள்.

பெடிக்யூர்

பெடிக்யூர்

வாரத்திற்கு இரண்டு முறை வீட்டிலேயே பெடிக்யூர் செய்யுங்கள். அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, சிறிது ஷாம்பு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அதில் கால்களில் 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். பின் கால்கள் உலர்ந்ததும், மாய்ஸ்சுரைசர் ஏதேனும் தடவ வேண்டும். இப்படி செய்வதால் குதிகால்களில் உள்ள இறந்த சருமம் வெளியேற்றப்பட்டு, வெடிப்பு நீங்கி, குதிகால் அழகாக இருக்கும்.

தேன் மசாஜ்

தேன் மசாஜ்

உங்கள் பாதங்கள் வறட்சியுடனும், அரிப்பையும் ஏற்படுத்துகிறதா? அப்படியெனில் இந்த முறையைப் பின்பற்றுங்கள். அதற்கு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் 20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் கால்களை வெளியே எடுத்து உலர்ந்ததும், தேன் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து, மீண்டும் வெதுவெதுப்பான நீரில் கால்களை 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இம்முறையினால் நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பிலை பேஸ்ட்

வேப்பிலை பேஸ்ட்

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பாத பிரச்சனைகள் விரைவில் அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Remedies To Have Cracked Free Feet

Follow these 8 Remedies To Have Cracked Free Feet. If you want to look after and pamper the sole of your foot, here is what you need to do immediately.
Story first published: Monday, April 18, 2016, 12:09 [IST]