டியோடரண்ட் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கோடை ஆரம்பமாகிவிட்டது. பலரும் வியர்வை பிரச்சனையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் பலர் நறுமணமிக்க டியோடரண்ட்டுகளை வாங்கி பயன்படுத்துவார்கள். பலருக்கும் டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்ப்ரே என்றால் என்னவென்ற குழப்பம் இருக்கும். டியோடரண்ட் என்பது சருமத்தில் தடவுவது, பாடி ஸ்ப்ரே என்பது உடையின் மேல் அடிப்பது. கோடையில் வியர்வை துர்நாற்றத்தைத் தடுக்க பலரும் டியோடரண்ட் வாங்க நினைப்பார்கள்.

அப்படி டியோடரண்ட் வாங்கும் முன், அதனைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு அந்த டியோடரண்ட் பற்றிய ஒருசில சுவாரஸ்யமான பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டியோடரண்ட் வியர்வையை நிறுத்தாது

டியோடரண்ட் வியர்வையை நிறுத்தாது

டியோடரண்ட் பயன்படுத்துவதால் பலரும் வியர்வை வெளிவராது என்று நினைக்கின்றனர். ஆனால் டியோடரண்ட் மூலம், வியர்வை வெளிவருவதை முற்றிலும் நிறுத்த முடியாது. உங்களுக்கு அதிகம் வியர்வை வெளியேறினால், டியோடரண்ட் போட்டுக் கொள்வதுடன், காட்டன் உடைகளை அணிவதே நல்லது.

மஞ்சள் கறைகள் தெரியும்

மஞ்சள் கறைகள் தெரியும்

டியோடரண்ட்டினால் துணிகளில் மஞ்சள் கறைகள் படியும் என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், அலுமினியம் கலந்த பொருட்கள் சருமம், வியர்வை, துணி போன்றவற்றுடன் வினை புரியும் போது, அவை மஞ்சள் கறைகள் ஏற்படுத்தும் என்ற கோட்பாடு உள்ளது. ஆகவே உங்கள் துணிகளில் மஞ்சள் கறைகள் படக்கூடாதெனில், அலுமினியம் கலக்காத டியோடரண்ட்டுகளை பயன்படுத்துங்கள்.

யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

டியோடரண்ட்டுகளில் ஆண்களுக்கு பெண்களுக்கு என எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏனெனில் இரண்டிலுமே ஒரே மாதிரியான பொருட்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது டியோடரண்ட்டை மாற்றவும்

அவ்வப்போது டியோடரண்ட்டை மாற்றவும்

எப்போதும் ஒரே நறுமணமுள்ள டியோடரண்ட் பயன்படுத்தாமல், அவ்வப்போது அதிலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது டியோடரண்ட்டை மாற்ற வேண்டும்.

இரவில் படுக்கும் முன் தடவுவது தான் சிறந்தது

இரவில் படுக்கும் முன் தடவுவது தான் சிறந்தது

டியோடரண்ட்டை பகல் நேரத்தில் தடவுவதை விட, இரவில் படுக்கும் முன் தடவுவது சிறந்தது. இதனால் வியர்வையுடன் கலக்காமல், நீண்ட நேரம் உடலில் நறுமணம் நீடிக்கும்.

துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும்

துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும்

உண்மையில் வியர்வை வாசனையற்றது. ஆனால் சிறிது உப்பு கலந்தது. அதனால் அது சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் சேரும் போது, துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே டியோடரண்ட் பயன்படுத்தினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, வியர்வை நாற்றத்தை ஓரளவு தடுக்கும்.

பாத பிரச்சனைகளைத் தடுக்கும்

பாத பிரச்சனைகளைத் தடுக்கும்

டியோடரண்ட்டுகளை பாதங்களின் பக்கவாட்டில் தடிவிக் கொண்டு பின் ஷூ போட்டால், காலில் வியர்க்கும் போது வெளிவரும் துர்நாற்றம் தடுக்கப்படுவதோடு, பாத பிரச்சனைகளும் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Things You Should Know About Deodrant

There are things you can do with the deodorant, aside from applying it to your armpits to prevent body odor. You might be surprise on some of its uses. Read below to find out! 
Story first published: Wednesday, March 11, 2015, 15:55 [IST]
Subscribe Newsletter