குதிகால் வெடிப்பைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்குமே தம்மை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக பல செயல்களை செய்வோம். பொதுவாக அழகாக காணப்பட நாம் ஒவ்வொருவரும் முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் தான் பல பராமரிப்புக்களை மேற்கொள்வோம். ஆனால் அழகு என்று வரும் போது, அதில் கால்களும், பாதங்களும் இடம் பெறும்.

நாம் போதிய பராமரிப்புக்களை பாதங்களுக்கு கொடுக்காததால், பாதங்களில் வெடிப்புக்கள் வந்து, பாதங்களின் அழகே கெட்டுப் போய்விடுகிறது. எனவே உங்களுக்கு குதிகால் வெடிப்பு வரக்கூடாதென்றாலோ அல்லது குதிகால் வெடிப்பு போக வேண்டுமென்றாலோ, கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முயற்சித்துப் பாருங்கள். இதனால் நிச்சயம் பாதங்கள் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ் வாட்டர் மற்றம் கிளிசரின்

ரோஸ் வாட்டர் மற்றம் கிளிசரின்

ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை சரிசமமாக எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் வறட்சியடையாமல் வெடிப்புக்களும் வராமல் இருக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி

எலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி

எலுமிச்சை சாறு குதிகால் வெடிப்பை விரைவில் சரிசெய்யும் குணம் கொண்டது. அதற்கு எலுமிச்சை சாற்றினை நேரடியாகவோ அல்லது பப்பாளியுடன் சேர்த்து கலந்தோ, பாதங்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள அதிகப்படியான அசிடிக் அமிலம், பாதங்களில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் நீக்கிவிடும்.

எண்ணெய் மசாஜ்

எண்ணெய் மசாஜ்

குளிர்காலத்தில் வறட்சி அதிகம் ஏற்படுவதால், குதிகால் வெடிப்புக்கள் வர வாய்ப்புக்களும் அதிகம். ஆகவே அந்த காலத்தில் தினமும் இரவில் பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் பாதங்களில் வெடிப்புக்கள் வருவதைத் தடுக்கலாம்.

பாதங்களுக்கான ஸ்கரப்

பாதங்களுக்கான ஸ்கரப்

குதிகால் வெடிப்பை போக்க, ஓட்ஸ் பொடி, அரிசி மாவு மற்றும் தேன் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து, அத்துடன் பாதாம் எணணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20-25 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேன்

தேன்

தேனில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று தான் குதிகால் வெடிப்பை போக்குவது. அதற்கு ஒரு கப் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் பாதங்களை 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை அன்றாடம் செய்து வந்தால், விரைவில் குதிகால் வெடிப்பு நீங்குவதுடன், பாதங்கள் மென்மையாக இருக்கும்.

 வாழைப்பழ பேக்

வாழைப்பழ பேக்

குதிகால் வெடிப்பு நீங்க, நன்கு கனிந்த 2-3 வாழைப்பழத்தை மசித்து, அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனை பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

கற்றாழை, மஞ்சள் தூள் மற்றும் துளசி

கற்றாழை, மஞ்சள் தூள் மற்றும் துளசி

துளசி இலைகளை அரைத்து, அதில் கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை பாதங்களில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Tips To Cure Cracked Heels

Take a look at some simple tips for cracked heels that you can bank on for maximum benefit.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter