For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உச்சி முதல் உள்ளங்கால் வரை பல நன்மைகளை வழங்கும் பெட்ரோலியம் ஜெல்லி!!!

By SATEESH KUMAR S
|

நாம் அனைவருமே அழகான தோற்றம் பெற விரும்புகிறோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறோம். நம் அழகிற்கு அழகு சேர்க்க எண்ணற்ற அழகு குறிப்புகளையும் பின்பற்றுகிறோம். அந்த வகையில் அதிக பலன்களை நிறைவாக தரும் பெட்ரோலியம் ஜெல்லியை குறித்து காண்போம்.

* பெட்ரோலியம் ஜெல்லி ஒரு உதட்டு தைலமாக செயல்படுகிறது. தினமும் உதட்டில் தடவி ஈரப்பதமான மென்மையான உதடுகளை பெறலாம். சிறந்த பலனை பெற, இரவு படுக்கைக்கு செல்லும் முன் சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை கொண்டு ஒற்றி எடுக்கும் போது, மறுநாள் காலையில் உதடுகள் பளபளப்பினையும், மென்மையையும் பெறுகிறது.

Several Ways To Use Petroleum Jelly

* நமது பழைய உதட்டு சாயத்துடன், பெட்ரோலியம் ஜெல்லி சேர்க்கும் போது, லிப் க்ளாஸ் கிடைக்கிறது. சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை நாம் உதட்டில் ஒற்றி எடுத்து, அதனை லிப் க்ளாஸாகப் பயன்படுத்தலாம்.

* பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு ஈரமூட்டியாக (exfolilator) பயன்படுத்த முடியும். மென்மையான பல் தூரிகையில் சிறிதளவுப் பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்துக் கொண்டு உதட்டில் தேய்க்கும் போது, உதட்டில் உள்ள தோலின் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் உதட்டினை பளபளப்பாகவும், ஈரப்பதத்துடனும் வைத்து கொள்கிறது.

* நுட்பதிறன்மிக்க நமது கண் இமைகளை குளிர்ந்த காற்றிலிருந்து, பாதுகாக்க பெட்ரோலியம் ஜெல்லி சிறந்த தேர்வாகும். இரவு படுக்கையை அடையும் முன், கண் இமைகளில் ஒரு மெல்லிய அடுக்காக பெட்ரோலியம் ஜெல்லியைப் பரவ செய்யலாம்.

* நம் புருவத்தினை ஒரு குறிப்பிட்ட அமைப்பில் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் போது, சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை புருவத்தின் மீது தடவி விட்டு விடலாம். இது புருவத்தின் மீது எந்த ஒரு செயலையும் புரியாதபோதும், நன்மையை மட்டுமே செய்யும்.

* கன்னத்தில் எலும்புகள் இருக்கும் பகுதியிலும் மற்றும் புருவத்தின் மேல் பகுதியிலும், பெட்ரோலிய ஜெல்லியை தடவி வர, முகம் புத்துணர்வு மிக்க பளபளப்பான தோற்றத்தினை பெறும். பெட்ரோலியம் ஜெல்லியை சில நொடிகள், இரவிற்கான முக பூச்சாக உபயோகிக்கலாம். தொடர்ந்து உபயோகிக்கும் போது, சுத்தமான, மென்மையான சருமத்தினை கொடுக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் மாற்று நாட்களில் (ஒருநாள் விட்டு ஒருநாள்) பயன்படுத்தலாம்.

* விரல் நுனியில் சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை, எடுத்து அதை பாதம் முழுவதும் தடவி, பின் காலுறை அணிந்து இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட வேண்டும். இது மிருதுவான கால்விரல்களையும், பாதத்தினையும் பெறுவதற்கு தீர்வாக அமையும். பெட்ரோலியம் ஜெல்லி உலர் தன்மை கொண்ட பாதத்தின் மீது ஒரு மாய வேலை புரிந்து அதனை வறட்சியற்ற ஈரப்பதமான பாதமாக மாற்றுகிறது. இதனை கைகளுக்கும் முயன்று பார்க்கலாம். பெட்ரோலியம் ஜெல்லியை கைகளில் தடவி பருத்தியினாலான கையுறைகளை அணிந்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட, மறுநாள் கையில் உள்ள தோலின் புதிய தோற்றத்தினை காணலாம்

* விரல் நகங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவும் போது, மிருதுவான வளையும் தன்மை கொண்ட நகங்களை பெறலாம். ஒரு நாளில் இருமுறைக்கு மேல் இதனை செய்யும் போது தோலின் மேல் பகுதியை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைத்து கொள்ளும். எளிதில் உடையும் நகம் கொண்டவர்கள், இந்த குறிப்பினை முயன்று பார்த்து ஆரோக்கியமான் நகங்களை பெறலாம்.

* பிளவுபட்ட நுனிகளை கொண்ட தலைமுடிக்குத் தீர்வாக பெட்ரோலியம் ஜெல்லியை தலை முடியின் நுனியில் தேய்க்கலாம். இதனை தினசரி பயன்படுத்தும் போது, கேசம் ஆரோக்கிய தோற்றத்தினை பெறும்.

* பெரும்பாலான வாசனை திரவியங்கள் குறைந்த நேரத்திற்கு மட்டுமே மணம் வீசும். வாசனை திரவியம் பயன்படுத்தும் முன் பெட்ரோலியம் ஜெல்லியை நம் உடலில் தடவி பின் வாசனை திரவியத்தை பயன்படுத்தலாம். இதனால் வாசனை திரவியம் நீண்ட நேரத்திற்கு மணம் வீசும்

ஆகவே உச்சி முதல் உள்ளங்கால் வரை இத்தனை பலன் தரும் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தி பலன் பெறுவோம்.

English summary

Several Ways To Use Petroleum Jelly

Did you know there are several ways to use petroleum jelly. Here we listed some of the petroleus jelly uses.
Story first published: Saturday, March 1, 2014, 17:08 [IST]
Desktop Bottom Promotion