Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
அழகுப் பராமரிப்பில் விளக்கெண்ணெயினால் கிடைக்கும் நன்மைகள்!!!
சிறுவயதில் இருக்கும் போது, பெரும்பாலான பிரச்சனைக்கு வீட்டில் உள்ள பாட்டிமார்கள் விளக்கெண்ணெய் பயன்படுத்துமாறு வலியுறுத்துவார்கள். ஏனெனில் விளக்கெண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர் அழகை பராமரிக்க எண்ணெய்களைத் தான் பயன்படுத்தி வந்தார்கள்.
இந்த க்ரீம்கள் எல்லாம் சமீபத்தில் வந்தவை தான். அதற்கு முன்பெல்லாம் கடலை மாவு, தயிர், மஞ்சள், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு தான் தங்களின் அழகைப் பராமரித்து வந்தார்கள்.
இப்போது அவற்றில் ஒன்றான விளக்கெண்ணெயினால் கிடைக்கும் அழகு நன்மைகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சரும சுருக்கத்தைப் போக்கும்
தினமும் இரவில் படுக்கும் போது விளக்கெண்ணெயை முகம், கை மற்றும் கால்களில் தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், சருமமானது நீர்ச்சத்து பெற்று, சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் நீங்கி, சருமம் மென்மையாகவும், இளமையுடனும் காட்சியளிக்கும்.

முகப்பரு
விளக்கெண்ணெயில் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும் ரிசினோலியிக் அமிலமானது அதிகம் உள்ளது. ஆகவே முகத்தை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி துடைத்த பின், விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம். இந்த முறையை தினமும் இரவில் படுக்கும் போது செய்து, காலையில் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

சிறந்த மாய்ஸ்சுரைசர்
விளக்கெண்ணெயில் உள்ள ஃபேட்டி ஆசிட்டினால், சருமத்தில் ஏற்படும் வறட்சியானது தடுக்கப்படும். அதற்கு சில துளிகள் விளக்கெண்ணெயை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வறட்சி நீங்குவதுடன், சருமமும் மென்மையாகும்.

தழும்புகள்
பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்க விளக்கெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள ஃபேட்டி ஆசிட்டனாது, பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கும். இதனால் முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மெதுவாக மறையும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்
சிலருக்கு தொடை மற்றும் வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருக்கம். இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க வேண்டுமானால், தினமும் விளக்கெண்ணெயைக் கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

கூந்தல் வளர்ச்சி
விளக்கெண்ணெய் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு வாரம் இரண்டு முறை விளக்கெண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து, தலையை பிளாஸ்டிக் கவரால் செய்யப்பட்ட தொப்பியை அணிந்து தூங்கி, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன், முடி வெடிப்புக்களும், முடி உடைதலும் தடுக்கப்படும். மேலும் கூந்தலும் வறட்சியின்றி இருக்கும்.

அடர்த்தியான புருவம் பெற...
உங்கள் புருவத்தின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், விளக்கெண்ணெயை தினமும் புருவத்திற்கு தடவி வாருங்கள். அதுமட்டுமல்லாமல் கண் இமைகளுக்கும் தடவலாம். இதனால் கண் இமைகளும் அடர்த்தியாக இருக்கும்.

பொடுகுத் தொல்லை
பொடுகுத் தொல்லையால் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள், வாரம் இரண்டு முறை விளக்கெண்ணெயை பயன்படுத்தி நன்கு ஸ்கால்ப்பில் மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை ஸ்கால்ப்பில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுக்களை நீக்கிவிடும்.

கருமையான கூந்தல்
கருமையான கூந்தலைப் பெற நினைத்தால் விளக்கெண்ணெய் பயன்படுத்துங்கள். ஏனென்றால் விளக்கெண்ணெய்க்கு கூந்தலை கருமையாக்கும் சக்தி உள்ளது. எனவே வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய் குளியல் மேற்கொள்வது கருமையான கூந்தலைப் பெற உதவும்.



Click it and Unblock the Notifications
