Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
பிட்டத்தில் உள்ள பருக்களை அகற்ற எளிமையான டிப்ஸ்...
லிப்ஸ்டிக்குகள், தலைமுடி பாதுகாப்பு, பௌன்டேஷன், கன்சீலர், நக பாதுகாப்பு என பல்வேறு அழகுசார் விஷயங்கள் பற்றிப் பேசி நமக்கு மிகவும் களைப்பாகி இருக்கும். எனினும், இந்த வகையில் சற்றே அதிகம் கவனிக்கப்படாத இடமான பிட்டத்தில் வரும் பருக்களை (pimple on your butt) களைவதன் மூலம் அதன் பராமரிப்பைப் பற்றி பார்ப்போமா! எந்தவொரு புகழ் பெற்ற மனிதராவது பிட்டத்தில் பரு உள்ளதை காட்டும் விளம்பரங்களில் வந்துள்ளாரா? இந்த கேள்வியின் விடை உடனே 'இல்லை' என்று வரும். மேலும், பருக்கள் முகத்தில் மட்டுமே வரும், உடலின் பிற பாகங்களில் வராது என்பது ஒரு பொதுவான கருத்தாக உள்ளது.
எப்படியாயினும், உங்கள் உடலில் உள்ள கவர்ச்சியான இடங்களில் மூன்றாவது இடம் உங்களுடைய பிட்டத்திற்கே என்பதையும் மற்றும் அதில் எளிதில் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது என்றும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது! அனைத்து வகையான பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை வளர்க்கும் பாசறை இதுதான். முகத்தில் பருக்கள் உள்ளவர்களின் உடலின் பிற பாகங்களிலும் பருக்கள் வரும், பிட்டம் உட்பட. முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு, முகத்திலுள்ள சிறு சிறு துளைகள் அடைத்துக் கொண்டிருப்பது காரணமாக இருப்பது போலவே, பிட்டத்திலும் ஏற்படுகிறது.
பிட்டத்தின் பருக்களுக்காக நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறலாம். எனினும், தோலில் ஏற்படும் அரிப்பை நீங்கள் சற்றே கவனிக்க வேண்டும். தோல் எரிச்சல்கள் அசௌகரியமாக இருப்பதுடன், இருக்கும் நிலையை மேலும் மோசமாக்கி விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டியதே! நீங்கள் பிட்டத்தில் உள்ள பருக்களை அகற்ற வசதியாக இங்கே சில ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.

இயற்கை வைத்தியம்
தேங்காய் எண்ணெயை பிட்டத்தில் ஏற்படும் பருக்களை அகற்றும் அதிசய பொருளாக பலரும் நம்புகின்றனர். ஏனெனில், பிட்டத்தில் உள்ள பருக்களை அகற்றக் கூடிய எல்லா குணங்களும் உடைய பொருளாக தேங்காய் எண்ணைய் இருக்கிறது.

தேன்
மிகவும் இனிப்பான தேன் சாப்பிடும் பொருளாக இருப்பதுடன், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகவே காயங்களை குணப்படுத்தவும், பிட்டத்தின் பருக்களை அகற்றவும் தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் சோடா
கேக் மற்றும் பிஸ்கட்கள் தயாரிக்க முக்கியமான பொருளாக இருக்கும் சமையல் சோடா, பிட்டத்தின் பருக்களை அகற்றவும் செய்யும் என்பதை நம்புங்கள். இது பிட்டத்தின் பருக்களை மிகவும் திறமையுடன் சுத்தப்படுத்தவும் மற்றும் சரி செய்யவும் வைக்கிறது.

எலுமிச்சை ஜுஸ்
எல்லோருக்கும் பிடித்த ஜுஸ் எலுமிச்சை ஜுஸ். இது குளுமையானது மட்டுமல்ல, மருத்துவ குணமும் மிக்கது. எலுமிச்சை ஜுஸை சற்றே எடுத்து பிட்டத்தின் பருக்களில் ஊற்றுங்கள்-பின் விளைவு தெரியும்-நல்ல வகையில்! இது மாயமில்லை!

தோலை உரிக்கும் சிகிச்சை (Exfoliation Treatment)
உடலில் உள்ள துளைகள் அடைத்துக் கொள்ளப் படுவதால் பிட்டத்தில் பருக்கள் ஏற்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே, மேலேயுள்ள அடைத்துக் கொண்டிருக்கும் தோலை சற்றே சுரண்டி உரித்து விடுவது உங்கள் தோலை சற்றே நிதானமாக மூச்சு விட வைக்கும். இந்த உரித்தல் (நீக்கும்) செயல் மூலமாக ஏற்கனவே இருக்கும் குழாய்கள் மென்மையடைவதுடன், பின்னாளில் அடைத்துக் கொள்வதும் தவிர்க்கப்படுகிறது

அந்த பகுதியை சுத்தமாக வைத்திருங்கள்
பருக்கள் வர முக்கிய காரணம் பாக்டீரியாக்கள். எந்த வகையான பொருட்களிலும் உயிர் வாழக்கூடிய பாக்டீரியாக்களுக்கு, மூச்சு விட ஆக்ஸிஜனும் தேவையில்லை. அது சருமத்தில் வளர்ந்து, வேகமாக பரவுகிறது. எனவே அந்த பகுதியை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைக்க வேண்டும்.

உள்ளாடைகளை கவனிக்கவும்
பாக்டீரியாக்கள் எந்த வகையான பொருட்கள் மூலமாகவும் பரவலாம் என்ற நிலை உள்ளதால், உங்களுடைய உள்ளாடைகளை நீங்கள் சற்றே கவனிப்பது நலம். எப்பொழுதும் சுத்தமான உள்ளாடைகளையே அணியுங்கள். எனவே, உங்களுடைய உள்ளாடைகளை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். முயற்சி செய்து பாருங்கள்.

அரிப்பை தடுக்கும் பொருட்களை முயற்சி செய்து பார்க்கவும்
பிட்டத்தின் பருக்களை அகற்றும் முயற்சியில் உங்களுக்கு உதவக்கூடிய பொருளாக இருப்பது சாலிசிலிக் அமிலமாகும். அது தோலை உரிப்பதுடன், அரிப்பையும் பெருமளவு குறைத்து விடுகிறது. பேன்ஸோய்ல்-பேராக்ஸைடில் செய்யப்பட்ட பொருட்களை ஆங்காங்கே ஸ்பிரே செய்தால் பிட்டத்தின் பருக்கள் குறையக் கூடும்.

பிட்டத்தின் பருக்களின் அரிப்பை குறைக்க சில டிப்ஸ்...
* பருத்தி ஆடைகளை அணியவும். இந்த ஆடைகள் உங்கள் தோலை காற்றோட்டமாக வைத்து, மூச்சு விட வைக்கும்.
* ஆடைகளை அவ்வப்போது மாற்றவும். அதன் மூலம் வியர்வை சேர்ந்து, உடலின் துளைகள் அடைத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.
* சுத்தமாக வைத்துக் கொள்ளவும் (ஒரு நாளைக்கு 3-4 முறை கழுவவும்)
* தோலில் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களை கவனித்து, அவற்றை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.
* அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை உணர்ந்து, அவற்றை தவிர்த்து வந்தாலே பிற பிரச்சனைகளை எளிதில் தவிர்க்க முடியும்.



Click it and Unblock the Notifications