For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைகளை மென்மையாக்கும் சூட்சமம்!

By Super
|

கைகள் நம் அன்றாட வேளைகளை செய்வதற்கு முக்கியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட கைகளை அழகாக வைப்பதென்பது நம் கடமை. கைகளை சுத்தமாக வைப்பதுடன் அழகாகவும் வைத்தால்தான் நல்லது.

கைகளை பாதுகாக்க சிலர் அனைத்து சரும புத்துணர்ச்சிக்கான சிகிச்சையையும் எடுத்து கொண்டு, அனைத்து விதமான ஒப்பனைகளையும் செய்து கொள்ளலாம் என்பர். ஆனால் எதை செய்தாலும் கைகள் வயதை காட்டி விடும். எல்லா நேரங்களிலும் இப்படி இல்லாவிட்டாலும் ,சிலருக்கு இந்த குறைபாடு கண்டிப்பாக இருக்கும். முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது, கைகளையும் மென்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சில வழிகள் உண்டு. அவை என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கையுறைகள்

கையுறைகள்

வெளி இடங்களில் வெப்பநிலை குறைந்தால், கைப்பையில் ஒரு ஜோடி கையுறைகளை எடுத்து வைக்கவும். அவை தேவை இல்லை என்று நினைக்கலாம். ஆனால் குளிர் காற்று சருமத்தை கடினமாக்கி வெடிப்பை ஏற்படுத்தும் என்பதால் கையுறைகள் அவசியம். மேலும் வீட்டை சுத்தும் செய்யும் போதும், பாத்திரம் தேய்க்கும் போதும் பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் கைகளை கடினமாக்குவதுடன், காயங்களையும் ஏற்படுத்தும். எனவே கையுறைகள் அணியாமல் சுத்தம் செய்ய வேண்டாம்.

தண்ணீர்

தண்ணீர்

அழகிய மென்மையான சருமத்திற்கு நீர் மிகவும் அவசியம். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். முடியவில்லை என்றால் கஷ்டப்பட்டு குடிக்க வேண்டாம். தாகம் நேராமல் பார்த்து கொள்வதுடன், அருகில் தண்ணீர் குவளையை வைத்து அடிக்கடி நீர் அருந்தி வரவும்.

ஈரப்பதம்

ஈரப்பதம்

உடலுக்கு உள்ளே தண்ணீர் எவ்வளவு அவசியமோ, அதை போன்று வெளியேயும் தேவை. கைகளுக்கு க்ரீம்களை அடிக்கடி தடவி கொள்வது தவறு. ஒருநாளைக்கு காலை மாலை என்று இருமுறை தடவினாலே போதுமானது.

சுடு நீருக்கு நோ!

சுடு நீருக்கு நோ!

சூடான நீர் சருமத்தை பாதித்து கைகளை கடினமாக்குவதுடன், ஈரப்பதத்தையும் இழக்கச் செய்யும். அதுவும் சுடுநீருடன் அதிக கெமிக்கல் அடங்கிய சோப்பையும், ஒதுக்க வேண்டும்.

சோப்பு

சோப்பு

சரும தன்மைக்கேற்ற சோப்பை வாங்கவும். எந்த நேரத்திலும் அதிக கெமிக்கல் அடங்கிய சோப்பை வாங்க வேண்டாம். ஈரப்பதம் கொடுக்கக்கூடியது என்றும், மென்மையான சருமத்திற்கு என்றும், எந்த சோப்பின் மீது எழுதப்பட்டிருக்கின்றதோ அதை வாங்கவும்.

பேக்ஸ் (Packs)

பேக்ஸ் (Packs)

ஈரப்பதம் தரக்கூடிய க்ரீம்கள் ஒத்து வரவில்லையென்றால், பேக்ஸை தேர்வு செய்யவும். அதிலும் சருமத்திற்கு ஏற்ற பேக்ஸை இரவில் படுக்கும் போது தடவிக் கொண்டு, பின் அதற்கென இருக்கும் கையுறைகளை அணிந்து படுத்தால், காலையில் கைகளின் மென்மையை நன்கு உணரலாம்.

சன் ஸ்க்ரீன் லோஷன்

சன் ஸ்க்ரீன் லோஷன்

வெளியில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோஷனை தடவி கொள்ள வேண்டும். இதை சிலர் பிசுப்பிசுப்பாக இருக்கும் என்று தடவுவதில்லை. ஆனால் இவை கைகளின் மென்மைக்கு மிகவும் முக்கியமானவை. வேண்டுமென்றால் இதை தடவிய பின் ஈரத்தாள் கொண்டு துடைத்து கொள்ளலாம். ஆனால் முழுமையாக துடைக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Rules to make your hands soft

They say that you can do every rejuvenation treatment, and wear all the makeup in the world, but your hands will always tell your age. Although this is in most cases true, it doesn’t have to be a rule. There are things you could do to make your hands soft.
Desktop Bottom Promotion