For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்துல பாதங்களையும் சரியா பராமரிங்கப்பா...

By Maha
|

குளிர்காலம் என்றாலே வறட்சி காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் சருமம் வறட்சியடைந்து, வெடிப்புகளை ஏற்படுத்தும். அவ்வாறு வறட்சி ஏற்படும் இடங்களிலேயே பாதங்கள் தான் அதிகம் இந்த காலத்தில் பாதிக்கப்படும். அதில் பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் பாத வெடிப்புகள், வறட்சியான பாதம் மற்றும் பாதங்கள் மென்மையிழந்து கடினமாக இருப்பது போன்றவைகள்.

எனவே எப்போதும் வீட்டில் இருக்கும் போது, குளிர்ச்சியில் இருந்துவிடுபட பூட்ஸ் அல்லது ஷூக்களை அணிந்து கொண்டால், குளிராமல் இருக்கும். இதை செய்தால் மட்டும் பாதத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்காது. மேலும் ஒருசில செயல்களையும் செய்தால் தான், எந்த ஒரு பிரச்சனையும் பாதங்களில் ஏற்படாமல் மென்மையோடு வைத்துக் கொள்ள முடியும்.

Basic Foot Care Tips For Winter

மேலும் பாதங்களுக்கு இவ்வளவு கவனம் செலுத்துவதன் நோக்கம், பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததே ஆகும். எனவே எந்த மாதியான பராமரிப்புகளை செய்தால் பாதங்கள் நன்கு ஆரோக்கியத்துடன், அழகாக இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும் பாதங்களை வெதுவெதுப்பான நீரில், சிறிது நேரம் ஊற வைத்து, பின் அழுக்கை நீக்கும் ஃபூட் கிளீனரால் தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

* பாதங்களில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்குகளை தினமும் ஒரு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் பாதத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் ஸ்கரப் செய்தால், குதிகால்களில் இருக்கும் புண்கள் சரியாகும்.

* பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், விரைவில் வறட்சியடைந்துவிடும். இதனால் வெடிப்புகள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். அதுவும் குளித்த பின்னும், இரவில் தூங்கும் முன்பும் தடவி வர வேண்டும். அதிலும் பேபி ஆயில் அல்லது ஏதாவது பாடி ஆயிலை தடவ வேண்டும். இவற்றால் பாதங்கள் மென்மையாகவும், சுத்தமாகவும், வெடிப்புகளின்றியும் இருக்கும்.

* பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் பொதுவாக கிருமிகள் கால்விரல் நகங்களில் அதிகம் தங்கும். ஆகவே மறக்காமல் பெடிக்யூர் செய்ய வேண்டும். அழகு நிலையம் செல்வதற்கு நேரமில்லையென்றால், வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, அந்த கலவையில் கால்களை ஊற வைத்து, ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப் செய்த பின்னர், சுத்தமான நீரில் கழுவி, பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் அங்குள்ள இறந்த செல்கள் வெளியேறி, வறட்சியின்றி அழகாக காணப்படும்.

* குளிர்காலத்தில் எப்போதும் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள சிறந்த வழியென்றால், அது கால்களில் எப்போதும் சாக்ஸ் அணிவது தான். அதிலும் மாய்ஸ்சுரைசரை பாதங்களில் தடவி, பிறகு சாக்ஸை முழு நாளும் அணிய வேண்டும். இதனால் குளிர்ச்சியில்லாமல் இருப்பதோடு, வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.

மேற்கூறியவாறு பாதங்களை பராமரித்து வந்தால், குளிர்காலத்தில் பாதங்கள் வறட்சியின்றி, மென்மையோடும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் உடல் வறட்சியை தடுக்க அதிகமான அளவில் தண்ணீரை தினமும் குடியுங்கள்.

English summary

Basic Foot Care Tips For Winter | குளிர்காலத்துல பாதங்களையும் சரியா பராமரிங்கப்பா...

Foot is the worst effected during winters. Cracks, dry feet and rough foot are common winter skin problems. To have a soft, crack-free and a clear feet, you have to care for the skin as feet doesn't have oil glands. Here are simple winter foot care tips that you can use on a daily basis.
Desktop Bottom Promotion