Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
உங்க கூந்தலுக்கு ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் பயன்படுத்துறீங்களா? அப்ப இந்த நன்மைகள் கிடைக்குமாம்!
கரோட்டீன் என்பது நம் முடி, தோல் மற்றும் நகங்களை உருவாக்கும் ஒரு வகை புரதமாகும். இந்த கரோட்டீன்கள் நம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. கடுமையான இராசயனங்கள், வெப்ப ஸ்டைலிங் கருவிகளால் நம் கூந்தல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே இந்த மாதிரி பாதிக்கப்பட்ட முடிகளை மீண்டும் சரி செய்ய இந்த ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் நமக்கு உதவுகிறது. இந்த ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் முடியை புதுப்பிக்கவும், கூந்தலை வலுப்படுத்தவும் மற்றும் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த கரோட்டீன் புரதம் கூந்தலின் மென்மைத் தன்மையை அதிகரிக்கிறது. இந்த ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் உங்கள் கூந்தலுக்கு எந்த மாதிரியான நன்மைகளை தருகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் என்றால் என்ன?
இந்த ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் விலங்குகளின் நகங்கள், கொம்புகள் மற்றும் முடிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த கரோட்டீன் ஒரு பெரிய மூலக்கூறு ஆகும். இந்த பெரிய மூலக்கூறு நொதி நீராற்பகுப்பு மூலம் சிறிய மூலக்கூறுகளாக உடைக்கப்படுகிறது அல்லது ஹைட்ரோலைஸ் செய்யப்படுகிறது.
இந்த சிறிய அல்லது ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட மூலக்கூறுகள் குறைந்த மூலக்கூறு எடையைக் கொண்டுள்ளன மற்றும் முடியின் தண்டுகளில் ஊடுருவி முடி அமைப்பை பலப்படுத்துகின்றன. மனிதர்களில் இயற்கையாக செய்யப்படும் கரோட்டீன் போன்ற அமினோ அமில அமைப்பை இது கொண்டுள்ளது. இது தோலுக்கான பெப்டைட் அல்லது கொலாஜன் சிகிச்சையைப் போலவே செயல்படுகிறது. இது கூந்தலுக்கு சிறந்த பலனை அளிக்கிறது.
ஹைட்ரோலைஸூடு புரதத்தின் கூந்தல் ஆரோக்கிய நன்மைகள்
- ஹைட்ரோலைஸூடு செய்யப்பட்ட புரதம் சேதமடைந்த முடியை சரி செய்து சீர் அமைக்கிறது. இந்த புரோட்டீன் ஹைட்ரோலைஸூடுகள் முடி நார்களை வலுப்படுத்தி முடி உடைவதைக் குறைக்கின்றன.
- புரோட்டீன் ஹைட்ரோலைஸூடுகள் பெரும்பாலும் முடிக்கு நிறமூட்டும் போது ஒரே நிறத்தை உறிஞ்ச சேர்க்கப்படுகிறது.
- ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட புரதம் முடியை நிரந்தர ப்ளீச்சிங், கூந்தலை நேராக்க மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து பாதுகாக்கிறது.
- இது முடியின் அமைப்பு மற்றும் இயற்கையான அமைப்பை மேம்படுத்துகிறது. மயிர் பிழைகளை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு பூச்சு மாதிரி செயல்படுகிறது.
- இது முடியின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. வெப்பத்தில் இருந்து கூந்தலை பாதுகாக்க உதவுகிறது.
- இந்த ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் முடி புரதங்களால் உற்பத்தி செய்யப்படும் அமினோ அமிலங்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி கார்டெக்சியில் உள்ள நீரின் தன்மையை தக்க வைத்துக் கொள்கிறது.
- ஹைட்ரோலைஸூடு செய்யப்பட்ட கரோட்டீன் முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
- புரோட்டீன் ஹைட்ரோலைசேட்டுகள் முடி சேதத்தைத் தடுக்கவும், இராசயன மற்றும் சுற்றுச்சூழல் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து முடியை பாதுகாக்கவும் உதவுகிறது.
பிளவுபட்ட முடிகளை சரி செய்யவும் உதவுகிறது. முடிகள் வறண்டு சிக்கலாகுவதை தடுக்கிறது. ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட புரதங்களிலிருந்து வரும் அமினோ அமிலங்கள் முடியின் அமில கால சமநிலையை சமநிலையாக்கி உராய்வை நீக்குகிறது.
ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கரோட்டீன் இயற்கையான முடிக்கு ஏற்ற அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. இது சேதமடைந்த முடியை வலுவாக்குகிறது.
சுருட்டை முடிக்கு ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் சிறந்ததா?
சுருள் முடிகள் எளிதில் உடையக் கூடிய தன்மை வாய்ந்தது. இந்த சுருள் முடிகள் பலவீனமான அமைப்பை கொண்டுள்ளன. ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கரோட்டீன் எளிதாக சுருள் முடிக்குள் ஊடுருவி முடியின் வலிமை மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. எனவே இந்த ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் டை ஹேர் மாஸ்க் தயாரிக்க உதவுகிறது.
சுருள் முடி அதிகமாக சேதம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தக் கூடியது. ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கரோட்டீன் இந்த சிக்கலை குறைக்க உதவுகிறது. இது சுருள் முடியை எளிதில் கையாளக் கூடியதாகவும், உதிர்தல் இல்லாததாகவும் மாற்றுகிறது. இது கூந்தலின் நிறத்தையும், பிரகாசத்தையும் மேம்படுத்துகிறது.
ஹைட்ரோலைஸூடு கரோட்டீனை கூந்தலுக்கு பயன்படுத்தும் விதம்
ஹைட்ரோலைஸூடு செய்யப்பட்ட கரோட்டீன் தயாரிப்புகள் :
ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள், ஹேர் மாஸ்க்குகள் மற்றும் சீரம்கள் போன்றவற்றில் இந்த ஹைட்ரோலைஸூடு கரோட்டீன் பயன்படுத்தப்படுகிறது. முடியை சரி செய்யவும், முடியின் வலிமையை மேம்படுத்தவும் உதவுகிறது.
கண்டிஷனர் அல்லது ஹேர் மாஸ்க்கில் 0.5-3% ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கரோட்டீன் செறிவைச் சேர்த்து கூந்தலை பாதுகாக்கின்றனர். ஆழமான கண்டிஷனிங் சிகிச்சையிலும் 0.5-3% செறிவு ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கரோட்டீனை சேர்க்கலாம். இரவில் கூந்தலில் அப்ளை செய்து விட்டு காலையில் நன்றாக கழுவி சுத்தம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications

