For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளநரையை நிரந்தரமாகப் போக்கும் கறிவேப்பிலை ஹேர்ஆயில்... தயாரிப்பது எப்படி?

இங்கே தலைமுடியை வளர்ப்பது எப்படி, இளநரையை எப்படி கறிவேப்பிலை எண்ணெயை பயன்படுத்துவது என்பது பற்றி இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

|

கறிவேப்பிலை இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள். இது உணவிற்கு தனி சுவையையும் வாசனையையும் கொடுக்கிறது. பொதுவாக பலரும் வீட்டில் கறிவேப்பிலை செடியை வளர்த்து வருகின்றனர்.

 Homemade Curry Leaves Hair Oil for Hair Growth - Premature Graying

இன்று இந்த கறிவேப்பிலையை பயன்படுத்தி தலை முடிக்கான எண்ணெய்யை தயாரிக்கும் விதம் பற்றி தெரிந்து கொள்வோம். தலை முடி தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளநரை

இளநரை

இந்த கறிவேப்பிலை எண்ணெய் தயாரிப்பது மிகவும் எளிது. இந்த எண்ணெய் மிகவும் வாசனையாக இருப்பதால் தடவுவதற்கு எந்த ஒரு சிரமமும் இருப்பதில்லை. குறிப்பாக இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. பொடுகு மற்றும் தலை முடி தொடர்பான தொந்தரவுகள் எளிதில் நீக்கப்பட்டு கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கிறது என்பது முற்றிலும் உண்மை. இப்போது முடி வளர்ச்சியை அதிகரித்து இளநரையைப் போக்கக் கூடிய இந்த எண்ணெய்யை தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.

தலைமுடிக்கு கறிவேப்பிலை எண்ணெய்

தலைமுடிக்கு கறிவேப்பிலை எண்ணெய்

தயாரிக்கும் நேரம் - 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் - 10 நிமிடங்கள்

எண்ணெய் அளவு - குறிப்பிட்டுள்ள மூலப்பொருட்கள் கொண்டு ஒரு கப் எண்ணெய் தயாரிக்கலாம்

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் - 1 கப்

கறிவேப்பிலை - 1/4 கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

கறிவேப்பிலையை நீரில் கழுவி, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு துணியில் இந்த இலைகளைப் பரப்பி, நிழலில் காய வைக்கவும்.

கறிவேப்பிலையில் முற்றிலும் ஈரமில்லாமல் காய வைக்கவும்.

பின்பு தண்ணீர் சேர்க்காமல் கறிவேப்பிலையை அரைத்துக் கொள்ளவும். விழுதாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. இலைகளை அரைக்காமல் அப்படியே முழுதாகவும் பயன்படுத்தலாம்.

செய்முறை

செய்முறை

ஒரு கப் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி கொள்ளவும். அந்த எண்ணெய்யில் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.

மிதமான சூட்டில் வைத்து அந்த கலவையை கிளறிக் கொண்டே இருக்கவும்.

கொதிக்க ஆரம்பித்து, இலைகள் முறுகியவுடன் அடுப்பை அணைக்கவும்.

பின்பு இந்த கலவையை ஆற விடவும்.

ஒரு இரவு முழுவதும் இந்த கலவையை அப்படியே விடவும்.

மறுநாள், இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயார்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

எப்படி பயன்படுத்த வேண்டும்?

இந்த எண்ணெய்யை சிறிதளவு எடுத்து, உங்கள் முடியின் வேர்கால்களில் விரல் நுனியால் மென்மையாக தடவவும். ஒரு மணி நேரம் எண்ணெய் தலையில் ஊறியபின், வீட்டில் தயார் செய்த ஷாம்பூ அல்லது வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த முறையை பின்பற்றவும். இந்த எண்ணெய் மிகவும் பாதுகாப்பானது என்பதால் தினமும் இதனை பயன்படுத்தலாம்.

எண்ணெய்யின் நன்மைகள்

எண்ணெய்யின் நன்மைகள்

முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

முடியை கண்டிஷன் செய்கிறது.

முடி உதிர்தல் மற்றும் முடி மெலிவு போன்றவற்றைப் போக்குகிறது.

தொடர்ந்து பயன்படுத்துவதால் இளநரை தடுக்கப்படுகிறது.

சேதமடைந்த முடிகளுக்கு சிறந்த சிகிச்சையைத் தருகிறது.

முடியை வலிமையாக்குகிறது, பொடுகைப் போக்குகிறது.

குறிப்பு

குறிப்பு

சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படாத ஆர்கானிக் கறிவேப்பிலை போன்றவற்றை இந்த எண்ணெய் தயாரிப்பில் பயன்படுத்தவும். வீட்டிலேயே வளர்ந்த கறிவேப்பிலையை பயன்படுத்தினால் நல்ல விளைவு ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Curry Leaves Hair Oil for Hair Growth - Premature Graying

how to growth hair in a natural way and we shared here the method of how to use curry leaves for premature grey hair.
Desktop Bottom Promotion