For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் உங்களின் கண்ணிமை முடிகள் உதிர்கின்றன? அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கண்ணிமை அடர்த்தியாக இருந்தால் அழகாய் இருக்கும். அதோடு இமைகள் கண்களுக்கு பாதுகாப்பும் கூட. அழகான வசீகரமான கண்ணிமைகள் கிடைத்திட இந்த வழிகளை பயன்படுத்திப் பாருங்கள்.

By Batri Krishnan
|

கண் இமை முடிகள் உதிர்கின்றனவா? ஒவ்வொரு முறையும் உங்களின் முகவாயில் கண் இமை முடிகளை காணும் பொழுது அதிர்ச்சிக்கு உள்ளாகின்றீர்களா? கவலை வேண்டாம். இங்கே உங்களின் இமை முடிகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களின் கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு மிகவும் குறைவாக சுமார் 0.15 மிமீ வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றன. அவ்வாறு உதிர்ந்து விடும் இமை முடிகள் மறுபடியும் முழுமையாக வளர 8 முதல் 10 வாரங்கள் ஆகலாம்.

அதோடு போடும் தரமற்ற கண்மை, மேக்கப்ப்பினாலும் கண்ணிமைகள் உதிரலாம். இருந்தாலும் கண் இமை முடியை வளர ஊக்கிவித்தால் அடர்த்தியாக வளரும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை நீங்களே உங்களின் வீட்டில் செய்து உங்களின் கண் இமை முடி வழுக்கை அடைவதை தவிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 விளக்கெண்ணெய் மற்றும் வைட்டமின் E

விளக்கெண்ணெய் மற்றும் வைட்டமின் E

2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை எடுத்து அதை துளையிட்டு அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை வெளியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்குங்கள்.

தினந்தோறும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு சிறிய பஞ்சினால் இந்த எண்ணெயில் நனைத்து இரண்டு சொட்டு விட்டு உங்களின் கண் இமை முடி மீது நன்கு தேய்க்கவும் .

இந்த மருந்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் கண் இமை முடியை இரு மடங்கு வலுவாக்கும்.

ஆலிவ் எண்ணெய், ஈமு எண்ணெய்

ஆலிவ் எண்ணெய், ஈமு எண்ணெய்

ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஈமு எண்ணெய் எடுத்து அதை நன்றாக கலக்கவும். தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் இதை உங்களின் கண் இமை முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்யவும்.

எண்ணெய் நன்கு உறிஞ்சப்பட்ட பின்னர் உறங்கச் செல்லவும். இதில் உள்ள இயற்கையான உயர் கொழுப்பு அமிலங்கள் உங்களின் கண் இமை முடியை வலுவாக்கி நன்கு வளரச் செய்யும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிகவும் எளிய முறை இதுவாகும். சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து படுக்கைக்கு செல்லும் முன் உங்களின் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவவும். .

 மசாஜ் :

மசாஜ் :

கண் இமைகளை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. அதன் காரணமாக இமை முடிகள் நன்கு வளர்கின்றது.

உங்கள் விரல்களில் ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்து, உங்கள் விரல் நுனி சற்று சூடாகும் வரை ஒன்றாக அதை தேய்க்கவும். முடிந்தவரை மிகவும் மென்மையாக சுமார் 2 முதல் 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் உங்களின் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்யவும்.

ஒரு நாளில் இதை இரண்டு முறை செய்து வர உங்களின் கண் இமை முடி நன்கு வளரும்.

எலுமிச்சை துறுவல்

எலுமிச்சை துறுவல்

விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலக்கவும். இந்தக் கலவையை சுமார் 48 மணி நேரம் ஊற விடவும்.

அதன் பின்னர் இந்தக் கலவையை சொட்டு சொட்டாக மருந்தை வெளியேற்றும் ஒரு குடுவைக்கு மாற்றி விடுங்கள். தினமும் படுக்கைக்குச் செல்லும் முன்னர் ஒரு சில துளிகளை எடுத்து உங்களின் கண் இமை முடிகளின் மீது தடவவும்.

 க்ரீன் டீ :

க்ரீன் டீ :

வாசனை இல்லாத க்ரீன் டீயை புதிதாக தயாரித்திடுங்கள். அதை சிறிது நேரம் குளிர விடுங்கள். அதன் பின்னர் க்ரீன் டீயை ஒரு பஞ்சுப் பொதியில் எடுத்து உங்களின் கண் இமை மீது தடவி மசாஜ் செய்திடுங்கள். இது உங்களின் கண் இமை முடியை வலுவாக்கி அது உதிர்வதை தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நீங்கள் கண் இமை முடிகளைப் பாதுகாக்க, மேலே குறிப்பிடப்பட்ட முறைகளைத் தவிர்த்து ஏதேனும் புதிதான மூலிகை செயல்முறையை பின்பற்றினால், அதை கீழே உள்ள கருத்து பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்

English summary

why are your eyelashes falling out what you should do

Try these home remedies if your eyelashes are falling
Story first published: Friday, November 25, 2016, 14:52 [IST]
Desktop Bottom Promotion