Latest Updates
-
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் தனிபட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் சுக்கிரன் உறவுகள், செல்வம், காதல் மற்றும் புரிதலின் அதிபதியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தற்போது திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ள சுக்கிரன் மே 31 ஆம் தேதி புனர்பூச நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார். இந்த நட்சத்திரம் குருபாகவனால் ஆளப்படுவதாகும். எனவே இந்த கிரக மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் எதிர்பாராத நன்மைகளை அடையப்போகிறார்கள். நீங்கள் ஒரு புதிய சொத்து வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இது அதற்கு சிறந்த நேரமாகும். உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவர விலையுயர்ந்த பொருட்களுக்கும் நீங்கள் செலவிடலாம். வேலை தேடுபவர்களுக்கு சில நேர்மறையான செய்திகள் தேடிவரும். உங்கள் சமூக அந்தஸ்து மேம்படும், மேலும் உங்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
இந்தக் காலகட்டம் நிதி முதலீடுகளுக்கு, குறிப்பாக நீண்ட கால இலக்குகளுக்கு சாதகமானது, இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீயீடுகள் லாபத்தைத் தரக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், மேலும் நீங்கள் மிகவும் உற்சாகமாக உணருவீர்கள். சரியான அணுகுமுறையுடன், இந்த நேரத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தி உங்கள் இலக்குகளை அடையலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் பல நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த நட்சத்திர மாற்றத்தால் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும், மேலும் அவர்களின் பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். மேலும், சில தனிப்பட்ட அல்லது தொழில்முறை காரணங்களுக்காக பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் வரலாம்.
அவர்களின் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மேலும் இந்த காலகட்டத்தில் எந்த பெரிய உடல்நலக் பிரச்சினையும் அவர்களைத் தாக்காது. பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவுவதால் அவர்களின் பணிகளை விரைவில் முடிக்க முடியும். வியாபாரிகள் இந்த யோகத்தால் பெரிய லாபம் ஈட்டலாம் மற்றும் புதிய வணிகத்தைத் தொடங்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இது சாதகமான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகளவு செல்வத்தை குவிக்க முடியும், மேலும் அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு பெரும் வெற்றியைத் தரும். அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் இப்போது மிகவும் வேகமாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்கவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
அங்கீகாரமும், புகழும் தேடி வரப்போகிறது. சுக்கிரனின் பெயர்ச்சி உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இது நினைத்தது நடக்கும் காலமாக இருக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடையும். அவர்கள் வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைய இந்த காலகட்டம் உங்களுக்கு உதவும்.
இந்த காலம் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள், மேலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்வார்கள். வணிகத்தைப் பொறுத்தவரை, பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்ட இது சிறந்த காலகட்டமாக இருக்கும். மொத்தத்தில் இது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அளிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
