Latest Updates
-
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகிறது. இந்த மாதத்தின் முதல் பாதியிலேயே கிரக மாற்றங்கள் நடக்கப்போகிறது. குறிப்பாக சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய இரு கிரகங்களும் தங்கள் ராசி நிலைகளை மாற்றிக்கொள்ளவுள்ளன. இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்குத் தொழில் வளர்ச்சி, அங்கீகாரம் மற்றும் வேலையில் சாதகமான சூழலை உருவாக்கக்கூடும்.

ஆடம்பரம், செல்வம் மற்றும் உறவுகளுடன் தொடர்புடைய சுக்கிரன் கிரகம், ஜூலை 4-ஆம் தேதி கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடம்பெயர்கிறது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 16-ஆம் தேதி, தன்னம்பிக்கை, அதிகாரம் மற்றும் அங்கீகாரத்தின் அதிபதியான் சூரியன், மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறது. இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, ஜூலை மாதத்தில் சூரியன் அவர்கள் ராசியின் நான்காம் வீட்டிலும், சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். இந்த கிரக அமைப்பானது பணியிடத்தில் அவர்களுக்கு அங்கீகாரத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கப்போகிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.
வேலை தேடும் மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இது அவர்கள் தொழில் வாழ்க்கையின் சிறந்த காலமாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சி நிதி ஸ்திரத்தன்மையை அடைய உதவும். இந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடனான உறவு மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். நீங்கள் செய்யும் காரியத்தில் வெற்றியும், திருப்தியும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் தொழில் ரீதியாக எதிர்பாராத வெற்றியைத் தரக்கூடும். சிம்ம ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தம்பதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் தொழில் வாழ்க்கையில் திருப்பு முனையைத் தரப்போகிறது. இந்த மாதத்தில் வெற்றியை நோக்கிய அவர்களின் பயணம் மிகவும் வேகமாக இருக்கும். மேலும் அவர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எனவே அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருப்பார்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியானத் தருணங்களைக் காண்பார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இது மிகவும் பொருத்தமான நேரமாகும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்யலாம். அனைத்து பணிகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். இந்த காலகட்டத்தில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும், பயன்படுத்தவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கிரக அமைப்பு மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்களின் அதிர்ஷ்டம் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் கொடுக்கும், மேலும் பேச்சாற்றல் மூலம் அவர்கள் பல விஷயங்களை சாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.
வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான வேலையைப் பெறலாம் மற்றும் பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறலாம். மேலும், வணிகர்கள் புதிய வியாபாத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். தொழில் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் அவர்களின் கடின உழைப்பிற்கான முழுபலனைப் பெறலாம். அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
