Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
50 ஆண்டுகள் கழித்து சிம்மத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு பணம் குவியப்போகுது..
Trigrahi Yog In Leo 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் 50 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான கேது பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது, சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, திடீர் நிதி நன்மைகளும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் திரிகிரக யோகத்தால் நிதி நன்மைகளைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருமாறு இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு வருமானம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை பாராட்டுவார்கள். முயற்சிகள் ஒவ்வொன்றிலும் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சில் தாக்கம் அதிகம் தெரியும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். முன்னேற்றத்திற்கான பல நல்ல லாய்ப்புக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மார்கெட்டிங், ஊடகம், பேச்சு, வங்கி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications