Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Today Rasi Palan 31 December 2024: இன்று இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முக்கியமான நாளாக இருக்கும்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று நிதி விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதை தவிர்க்கவும். வியாபார முயற்சிகளில் உங்கள் மனைவியின் ஆலோசனை சாதகமாக இருக்கும். இருப்பினும், சில பணிகளில் சில தடைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் அவர்களின் மனச்சுமைகளிலிருந்து விடுபடுவார்கள். ஆன்மீக நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். இன்று உங்களின் ப்ரவுன்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பல வேலைகள் நிறைந்த நாளாக இருக்கும். பணிகளை முடிக்க நிறைய பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும். ஒரு புதிய நண்பரை சந்திப்பதால் உற்சாகம் நிறைந்திருக்கும். உங்கள் தந்தையின் சில வார்த்தைகள் உங்களை வருத்தப்படுத்தலாம். உங்கள் வெளியூர் பயணங்களின் போது, சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்துங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பேச்சு மற்றும் நடத்தையில் நிதானமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் தாயுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். அரசியலில் இருப்பவர்களுக்கு கௌரவம் உயரும், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். தவறான நோக்கங்களைக் கொண்டவர்களிடமிருந்து விலகி இருக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்கள் பணிகளை கவனத்துடன் அணுகவும், உங்களுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால், அதை உடனடியாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சக ஊழியர்கள் உங்களின் பணிகளை தொந்தரவு செய்ய முயற்சி செய்யலாம், எனவே மிகவும் கவனமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட வேண்டும். உங்கள் நீண்ட கால திட்டங்கள் வேகம் பெறும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று ஒரு சாதாரணமான நாளை அனுபவிக்கலாம். உங்கள் சமூக வட்டம் விரிவடையும், புதிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் நுழையலாம். நீங்கள் அரசியலில் ஈடுபட நினைத்தால் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பப் பொறுப்புகளில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வதந்திகளை நம்புவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிருஷ்ட நிறம் ப்ளூ.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் நிதி சிக்கல்களைக் கையாண்டால், அவை இன்று முடிவுக்கு வரும். தொலைதூரத்தில் வசிக்கும் உறவினர் ஒருவரை நீங்கள் சந்திக்கலாம். அலுவலக வேலைகளை அவசரமாக செய்வது பிழைகளுக்கு வழிவகுக்கும், எனவே வேலையை கவனமாக செய்யவும். உங்கள் நிதி நிலைமை முன்பை விட மேம்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாகவும், நிறைவாகவும் இருக்கும். உங்கள் நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறலாம். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது உங்களை அமைதியற்றதாக மாற்றும். முக்கியமான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் கவனமாக இருங்கள். உங்கள் தொழில் சம்பந்தமாக ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கலவையான பலன்களை அனுபவிக்கலாம். நீங்கள் நேசத்துக்குரிய ஒரு பொருளை இழந்திருந்தால், அதை இன்று மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது. ஒரு துக்க செய்தி உங்களை தேடிவரலாம். வேலை தொடர்பான விஷயங்களில் உங்கள் தந்தையுடனான உரையாடல் முக்கியமானதாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பழைய நண்பரை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அவர்களின் நற்பணிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் நேர்மறையானதாக இருக்கும், மேலும் உங்கள் முயற்சிகள் அவர்களை மகிழ்விக்கும். உங்கள் பணிகளுக்கு அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருப்பது நல்லதல்ல, உங்கள் உழைப்பை நம்புவது அவசியம். நீங்கள் புதிய முதலீடு செய்ய நினைத்தால், அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையைப் பெறவும். நீங்கள் கடனாகக் கொடுத்த பணம் இன்று உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் வேலையில் உங்களுக்கு முழு ஆதரவளிப்பார். குடும்ப உறுப்பினர்களின் திருமணத் திட்டத்தில் இருந்த தடைகள் நீங்கும். வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்க்க உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உங்களின் உத்திகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிக புத்திக்கூர்மையும், கவனமும் தேவை. உங்கள் வணிகத் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த வருமானத்தைத் தரும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப செலவு செய்யுங்கள். ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம், எனவே எச்சரிக்கையாக இருக்கவும். உடன்பிறந்தவர்கள் வேலை தொடர்பான சவால்களை சந்திக்க நேரிடும். இன்று உங்கள் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை நீங்கள் நன்கொடையாக வழங்கலாம், அது உங்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும். இருப்பினும், குடும்ப பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும், இது உங்கள் மனஅழுத்தத்தை அதிகரிக்கும். புதிய பொருளை வாங்குவதற்கு கணிசமான தொகையை செலவிட வேண்டியிருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
