Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
Today Rasi Palan 28 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் சில முக்கிய பொறுப்புக்களைப் பெறலாம். வேலை தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது தீர்க்கப்படும். இன்று உங்களின் செயல்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வீட்டு பராமரிப்பு மற்றும் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். மோசமான வானிலை காரணமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று எதிர்காலம் குறித்து சில புதிய திட்டங்களை வகுப்பீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வேலைக்காக யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்பட்டால், அப்போது அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். சில புதிய தொடர்புகளால் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவீர்கள். அரசு வேலைக்காக முயற்சித்து கொண்டிருந்தால், நல்ல செய்திகளை இன்று பெற வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், அதை தீர்க்க அனுபவசாலிகளின் உதவி நாட வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் சிறப்பான ஆற்றலால் பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில பிரச்சினைகளால் குடும்ப உறுப்பினரின் கோபத்தை சந்திக்க நேரிடலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நிதி தொடர்பான பிரச்சனை இருந்தால், இன்று அது நீங்கும். புதிய எதிரிகள் உருவாகலாம். எந்த வாக்குறுதியை கொடுக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். யாருடைய பேச்சுக்களுக்கும் மயங்கிவிடாதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று சாதாரண நாளாக இருக்கும். உங்களின் வேலைகளில் முழு கவனம் செலுத்துவீர்கள். எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி பெறுவீர்கள். பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். தேவையில்லாமல் யாருடனும் தொடர்பு கொள்ளாதீர்கள், இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று பொறுப்புடன் காரியங்களைச் செய்யும் நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு பழைய நண்பரைச் சந்திப்பீர்கள். மோசமான வானிலையால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த வேலையிலும் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வேலையை தள்ளிப் போட முயற்சிப்பீர்கள். சகோதர சகோதரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். சொத்து தொடர்பான எந்த ஒப்பந்தத்தையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்பம் மற்றும் சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தேவைப்படும் ஒருவருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாகச் செய்யுங்கள். உங்கள் நீண்ட கால திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். பல வேலைகளை புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிக்கப்படலாம். மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் பேசாதீர்கள். வியாபாரத்தில் யாரிடமும் கடன் வாங்கக்கூடாது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் டின்னர் செல்லலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு இன்று லாபகரமானதாக இருக்கும். வணிகர்களுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கும். தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டும். காதலர்கள் அல்லது தம்பதிகளிடையே ஏதேனும் பிரச்சனை இருந்தால், இன்று அப்பிரச்சனை தீர்ந்து உறவுகள் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications