Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 25 November 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பழைய முதலீட்டில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் திட்டம் மிகப்பெரிய லாபத்தை அலுவலகத்திற்கு பெற்று தரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று எந்த ஒரு டென்ஷனில் இருந்தும் பெரிய அளவில் நிவாரணம் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். தொழில் திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். மோசமான வானிலையால் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கும். எந்தவொரு பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அமைதியான பேச்சால் நல்ல மரியாதை கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் தினசரி வழக்கத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும். இன்று சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். காதலிப்பவர்கள் அல்லது தம்பதிகளிடையே சில பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சற்று சிரமமான நாளாக இருக்கும். சில புதிய எதிரிகள் உருவாகலாம். முதலீடு செய்வதாக இருந்தால் நன்கு யோசித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும். வசதிகள் அதிகரிப்பதால் உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தேவையற்ற சண்டைகளில் இருந்து விலகி இருந்தால், அது உங்களுக்கு நல்லது. முதலீடு செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புக்கள் இன்று கிடைக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை இன்று வெளிவரும். வேலையில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அவர்கள் உங்களிடம் திரும்பக் கேட்கலாம். தாயின் உடல்நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் பொறுப்புகள் அதிகரிப்பதால் சற்று கவலை அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று எந்த முடிவையும் யோசித்து எடுக்க வேண்டும். வேலையில் பொறுமையாக இருக்க வேண்டும். வியாபார பிரச்சனைகளில் இன்று நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இன்று வேலையில் சில தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் மனம் மற்ற விஷயங்களில் பிஸியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். சில புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும். நீங்கள் ஒருவருக்கு வாக்குறுதி அளித்திருந்தால், அதை இன்று நிறைவேற்ற வேண்டும். சொத்து சம்பந்தமான ஒரு பெரிய ஒப்பந்தத்தை நீங்கள் இன்று முடிக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று எந்த ஒரு பாதகமான சூழ்நிலையிலும் நீங்கள் பொறுமை காக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனால் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். செல்வம் பெருகும். பணியிடத்தில் சோம்பலை காட்டாதீர்கள், இல்லையெனில் உங்கள் வேலையில் பிரச்சனையை சந்திக்கலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று நீண்டகால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் உங்கள் இலக்கை அடைவீர்கள். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கவனக்குறைவால், உங்கள் சில பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். நீங்கள் ஏதாவது குழப்பத்தில் இருந்தால், அந்த வேலையைத் தொடர வேண்டாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications