Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆகஸ்ட் 11-ல் உருவாகும் சக்தி வாய்ந்த தசாங்க யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Sun Venus Make Dasanga Yog On 11 August 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சத்தினாலோ அல்லது நிலைகளாலோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையிலும், பூமியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியனும், சுக்கிரனும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி 36 டிகிரி கோணத்தில் இருந்து தசாங்க யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நிச்சயம் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறந்து, திடீர் செல்வம் குவியும், வெற்றிகள் கிடைக்கும். இப்போது சூரியன் மற்றும் சுக்கிரனால் உருவாகும் தசாங்க யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஐடி மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ்வார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது எதிர்பாராத நன்மைகளை வழங்கப் போகிறது. முக்கியமாக தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக எடுக்கும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது வாழ்க்கையை செழிப்பாக்கப் போகிறது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். சிக்கிய பணம் தேடி வரும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிவீர்கள். வணிகர்கள் புதிய கூட்டாளர்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
