Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா?
சூரியன் மீன ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தோல்வியும், துரதிர்ஷ்டமும் குவிய போகுதாம்!
Sun Transit In Pisces: ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் இயக்கத்தில் நடக்கும் ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிக்கார்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மார்ச் 14, 2025 அன்று மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி ராசிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ரூ மேற்கொண்டு பார்க்கலாம்.
சூரியன் சுய உணர்வையும் தனித்துவத்தையும் நிர்வகிக்கிறது. நீங்கள் உலகிற்கு உங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள், நீங்கள் எவ்வாறு காணப்பட விரும்புகிறீர்கள் என்பதை ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் நிலையே நிர்ணயிக்கிறது. சூரியன் உங்கள் ஆற்றல், உயிர்ச்சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது.

மீன ராசியில் சூரியப் பெயர்ச்சி மார்ச் 14, 2025 அன்று மாலை 4:32 மணிக்கு நிகழ உள்ளது. நெருப்பு கிரகமான சூரியன் நீர் ராசியான மீன ராசிக்குள் நுழைவதால், இரண்டு எதிரெதிர் சக்திகள் ஒன்றிணைகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான மாற்றங்களும் ஏற்படும். இந்த பதிவில் சூரியன் மீன ராசிக்கு செல்வதால் எதிர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் முதல் வீட்டின் அதிபதியான சூரியன் ஒன்பதாவது வீட்டிற்குள் செல்வதால், அவர்கள் அதிக சவால்களையும், எதிர்பாராத தடைகளையும் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் சவால்களை வெற்றிகரமாக முடிக்க எச்சரிக்கை மற்றும் கவனமாக திட்டமிடல் அவசியம். உங்கள் வேலையில் அதிக வேலை அழுத்தத்தை நீங்கள் சந்திக்க நேரிடும், குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம்.
வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டுமே வரக்கூடியவை என்றாலும், லாபங்களை விட இழப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும், இது மனச்சோர்வை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியான சூரியன் ஏழாவது வீட்டின் வழியாக நகருவதால் உங்களுக்கு நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் உங்களின் திறமை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம்.
உங்கள் வேலையில் மாற்றம் அல்லது நீங்கள் விரும்பாத புதிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் வியாபாரத்தில் இருந்தால் மிகவும் திறமையாக திட்டமிடுவது மிக முக்கியம், ஏனெனில் லாபத்தை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும். நிதிரீதியாக, நீண்ட பயணங்களில் பணத்தை இழக்க நேரிடும் அல்லது நீங்கள் ஏற்கனவே கடன் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிதாக யாருக்கும் கடன் கொடுத்தாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டின் அதிபதியான சூரியன், மூன்றாவது வீட்டைக் கடந்து செல்வதால், உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படலாம். இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக பயணம் செய்ய வேண்டும்.
உங்கள் வேலையில் முன்னேற்றத்திற்கான முக்கியமான வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும், இது அதிக கவலைகளை ஏற்படுத்தும். வணிகத்தில், உங்கள் தற்போதைய முயற்சி போதுமான லாபகரமாக இல்லாமல் போகலாம் என்பதால், வேறு தொழிலுக்கு மாறுவது பற்றி நீங்கள் சிந்திக்கலாம். உங்களின் கவனக்குறைவு பெரும் நிதி இழப்புக்கு வழிவகுக்கும். எனவே கூடுதல் கவனம் அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
