Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
சூரிய பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Gemini On 15 June 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சூரியன் ஜூன் 15 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். இந்த சூரிய பெயர்ச்சியின் போது ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் சூரியன் நுழையவுள்ளார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் திடீர் அதிர்ஷ்டம், தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள், நிதி நிலையில் உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் நடக்கும் சூரியன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். செலவுகள் கட்டுப்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை இக்காலத்தில் நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் கடின உழைப்பு மற்றும் திறன்களால் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பார்கள். இதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
சிலருக்கு திடீரென்று பெரிய அளவில் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல பலன் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். முக்கியமாக மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


