Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
June Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூன் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
June Month Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான மற்றும் சுப யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஜூன் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஜூன் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜூன் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2026 ஜூன் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இம்மாதத்தில் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் அருளால் பொருள் வசதிகள் அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அரசியலில் உள்ளவர்கள் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது நல்ல மாதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். தைரியமும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் கணிசமான பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூன் மாதமான முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தலைமை பொறுப்புக்களில் இருப்பவர்கள் இம்மாதத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தத்தால் சிரமப்படக்கூடும். உறவுகளில் தெளிவான உரையாடலை கொள்ள வேண்டியது அவசியம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் தைரியமும், முன்னேற்றமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குரு பகவானின் அருளால் தன்னம்பிக்கை, தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவுகளில் சமநிலையை பேண வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சூரியன் மற்றும் செவ்வாயின் அருளால் தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமை போன்றவை மேம்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். குரு பகவானின் அருளால் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம், முரண்பாடுகள், தவறான புரிதல்களை எதிர்கொள்ள நேரிடலாம். திருமண வாழ்க்கையில் பொறுமையும், புரிதலையும் கடைப்பிடிப்பது அவசியம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூன் மாதம் நல்ல பலன்களையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும். தன்னம்பிக்கையும், ஆன்மீகத்தில் ஆர்வமும் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இருப்பினும் எதிர்பாராத செலவுகளையும் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிலவும். உறவுகள் மேலும் வலுப்பெறும். வீட்டு சூழல் நேர்மறையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை, கண் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இம்மாதத்தில் கோபத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். புதன் இம்மாதத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது சாதகமாக இருக்கும். அதுவும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இருப்பினும், எந்த ஒரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் காதல் கைக்கூடும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட கால முயற்சிகளுக்கு ஏற்ற பலன் இம்மாதத்தில் கிடைக்கும். சனி பகவானின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் எதையும் போராடி வெற்றி பெறுவீர்கள். நீண்ட கால முயற்சிகளுக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ராகுவின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருந்தாலும் எந்த முடிவை எடுக்கும் முன்பும் சிந்திக்க வேண்டும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் எழும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது மங்களகரமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இம்மாதத்தில் தொழில் வாழ்க்கையில் ஒரு புதிய திசையைக் காண்பார்கள். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




