Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க..
ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
June 2026 Career Horoscope In Tamil: ஜோதிடத்தின் படி 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பலவிதமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதுவும் மாதத்தின் தொடக்கத்தில் குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைந்து ஹன்ஸ் ராஜயோகத்தையும், சுக்கிரனுடன் சேர்ந்து கஜலட்சுமி ராஜயோகத்தையும், சந்திரனுடன் சேர்ந்து கஜகேசரி ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளார்.

அதுமட்டுமின்றி, இம்மாதத்தில் புதாதித்ய ராஜயோகம், விபரீத ராஜயோகம், ருச்சக ராஜயோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் போன்றவையும் உருவாகவுள்ளன. இப்படியான பல மங்களகரமான ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். இப்போது ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை காணவுள்ளனர் என்பதைக் காண்போம்.
கடகம்
ஜூன் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இம்மாதத்தில் குரு பகவானின் அருளால் தன்னம்பிக்கையும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சூரியன் மற்றும் செவ்வாயின் அருளால் தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமை போன்றவை மேம்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். குரு பகவானின் அருளால் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும். குரு பகவான் உச்ச ராசியில் இருப்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். அதுவும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஐடி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது சாதகமாக இருக்கும். அதுவும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது மங்களகரமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இம்மாதத்தில் தொழில் வாழ்க்கையில் ஒரு புதிய திசையைக் காண்பார்கள். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

