Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சனி-சந்திர சேர்க்கையால் அக்டோபரில் உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் அதிகரிக்கப்போகுது..
Shani Moon Conjunction On 06 Ocotber 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் அடிக்கடி ஒன்றிணைந்து பயணித்து, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும்.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசிக்கு அக்டோபர் 06 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் செல்லவுள்ளார். இதனால் சந்திரன் மற்றும் சனியின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் மிகவும் மோசமான யோகமாகும்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் பெரிய அளவில் இழப்புக்களை சந்திக்கவுள்ளனர். முக்கியமாக நிதி இழப்புக்களுடன், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளனர். மேலும் ஆரோக்கியம் மோசமடையும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். இப்போது சனி சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். நிதி ரீதியாக எந்த ரிஸ்க்குகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் புதிய முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்கள் மீது வீண் பழி சுமத்தப்படலாம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு திரும்ப கிடைக்காது. தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடையும். வாழ்க்கைத் துணையுடன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனையால் சிரமப்படக்கூடும். பண விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும். ஏதாவது ஒரு விஷயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். வேலை மற்றும் வணிகம் சற்று மந்தமாக இருக்கும். இக்காலத்தில் கைக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் சிரமப்படக்கூடும். எனவே இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான வேலைகளையும் செய்ய திட்டமிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
