Shani Jayanti 2026: சனி ஜெயந்தியான இன்று எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும்?

Shani Jayanti 2026 Rasi Palan: நீதிமான் சனி பகவான் அவதரித்த தினம் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்தார். அந்த வகையில் இந்த ஆண்டின் வைகாசி அமாவாசை மே 16 ஆம் தேதி வருகிறது. அதுவும் இந்த சனி ஜெயந்தி சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானது.

Shani Jayanti 2026 Rasi Palan Know The Lucky And Unlucky Zodiac Signs

இப்படியான ஒரு அரிய நிகழ்வு சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்நாளில் கேதார, புதாதித்ய போன்ற பல சுப யோகங்களும் உருவாகின்றன. இப்படிப்பட்ட சுப நாளில் சனி தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களிலிருந்து பாதுகாப்பு பெறவும், செழிப்பு, நிலைத்தன்மை மற்றும் வெற்றிக்கான ஆசிகளைப் பெறவும் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள்.

ஜோதிடத்தின்படி, இந்த ஆண்டின் சனி ஜெயந்தி நாளில் கிரக நிலைகளாலும், சனி பகவானின் அருளாலும் பல ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். கிரக நிலைகள் சிலருக்கு தொழில் முன்னேற்றத்தையும் வணிக வெற்றியையும் கொண்டு வரக்கூடும். இருப்பினும், சில ராசிகள் இந்நாளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது சனி ஜெயந்தி நாளன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

சனி ஜெயந்தி அன்று மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். சனி பகவானின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூக வட்டம் விரிவடையும். இருந்தாலும், கோபத்தையும், அவசரத்தையும் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளான இன்று கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நற்பலன்கள் கிடைக்காது. பணியிடத்தில் கடின உழைப்பு பாராட்டப்படும். அதே சமயம் உங்களின் தவறுகளும் வெளியே தெரியவரும். இன்று உங்களுக்கு நெருக்கமான நபரை அதிகம் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதற்கான மோசமான விளைவை கட்டாயம் சந்திக்க நேரிடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளான இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி நிச்சயம் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு சனி பகவானின் அருளான் மன வலிமை அதிகரிக்கும். இதுவரை சந்தித்து வந்த மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். இருந்தாலும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் சனி பகவானின் அருளால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று எந்த முதலீடுகளையும் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். புதிதாக எதையும் செய்வதைத் தள்ளிப் போடுவது நல்து. இன்று சனி பகவான் உங்கள் பொறுமையை சோதிப்பார். எனவே நிதானமாக இருங்கள். அரசியல் நண்பர்களின் சந்திப்பு உங்களின் செல்வாக்கை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளானது சுமாராக இருக்கும். இருந்தாலும் சிறு ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்யும். திருமண வாழ்க்கையில் சில தடைகளை சந்திக்க நேரிடும். சனி பகவான் இன்று பல சோதனைகளைக் கொடுப்பார். பொறுமையாக அதை எதிர்கொள்ளுங்கள். இதனால் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளில் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வீட்டை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் இன்று தங்கள் அன்புக்குரியவரை சந்திக்கலாம். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இருப்பினும் சோம்பேறித்தனம் உங்களுக்கு பல மோசமான அனுபவங்களைத் தரும்.

விருச்சிகம்

சனி ஜெயந்தியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையைத் தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். இன்று புதிய வருமான வழிகள் உருவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நேர்மறையான மாற்றங்களை காணக்கூடும். உங்களுக்கு பிடித்தவர் இன்று உங்களை சந்திக்க வரலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளானது மிகவும் பலனளிப்பதாகக் கருதப்படுகிறது. உங்கள் ராசியின் அதிபதி சனி என்பதால், முதலீடுகள் மற்றும் சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று பல சாதகமான வாய்ப்புகளைப் பெறலாம். வேலைவாய்ப்பு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். இருப்பினும், எந்தவிதமான தகராறுகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பொறுமையும் விவேகமான முடிவுகளும் நல்ல பலன்களைத் தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது நிம்மதியையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரக்கூடும். மேலும் தலைமைத்துவத் திறன்களும் மேம்படும். சனி பகவானின் ஆசியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமாக ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதையும் காணக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, May 16, 2026, 9:00 [IST]
Desktop Bottom Promotion