Latest Updates
-
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..!
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
Shani Jayanti 2026: நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். சூரிய புத்திரனான சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் தான் பிறந்தார். சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி வருகிற மே 16 ஆம் தேதி வருகிறது.

இந்த ஆண்டின் சனி ஜெயந்தி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் கிரகங்களின் சிறப்பான நிலைகளால், அரிய யோகம் ஒன்று உருவாகவுள்ளது. அது தான் கேதார யோகம். அதுவும் இந்த யோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
ஜோதிடத்தில் இந்த யோகமானது மங்களகரமானதாக, மிகவும் செல்வாக்குமிக்கதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த யோகத்தின் போது, ராகு, கேதுவைத் தவிர மற்ற 7 கிரகங்களும் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டில் இருக்கும். இப்படிப்பட்ட அரிய யோகம் தான் சனி ஜெயந்தி நாளில் உருவாகிறது. இந்நாளில் சூரியன், சந்திரன், சனி, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 7 கிரகங்களும் ஜாதகத்தில் 4 ஆவது வீட்டில் இருக்கும்.
விரிவாக கூற வேண்டுமானால், இந்த நாளில் செவ்வாயும் சந்திரனும் மேஷ ராசியில் இருக்கும். அதேபோல், சூரியனும் புதனும் ரிஷப ராசியிலும், வியாழனும் சுக்கிரனும் மிதுன ராசியிலும், சனி மீன ராசியிலும் இருக்கும். கர்மவினைகளின் படி, சனி ஒருவருக்கு பலன் தரும் கிரகமாக கருதப்படுவதால், கடினமாக உழைப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய கேதார யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சனி ஜெயந்தியில் உருவாகும் கேதார யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படலாம். மேலும் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
விருச்சிகம்
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் கேதார யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு அல்லது வேலை செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாக நல்ல ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கும்பம்
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் கேதார யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் சனி பகவானின் சிறப்பு ஆசியைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடனான உறவுகள் வலுவடையும். மன அழுத்தம் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் சனி பகவானின் அருளால் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


