Latest Updates
-
பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 15 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சவால்களால் ரொம்ப கஷ்டப்பட போறாங்களாம் -
13 வருடம் கழித்து சனிக்கிழமையில் வரும் சனி ஜெயந்தி: இந்த 3 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்க.. -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தக்காளி சட்னியை இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் அரைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
பிரபலங்களின் பிரிவா? வதந்திகளை நம்பி நீங்களும் இப்படித்தான் பேசுகிறீர்களா? உண்மை இதோ! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இந்த பக்குவத்துல மிளகு சிக்கன் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த கணவர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
விஜய் - சங்கீதா விவகாரம்: உறவில் விரிசல் ஏற்பட்டால் குழந்தைகளை எப்படி கையாள்வது? இதோ சில முக்கிய ஆலோசனைகள்! -
கொரிய பெண்கள் மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 நேச்சுரல் பொருட்களை தொடர்ந்து யூஸ் பண்ணுங்க..
Vaikasi Matha Rasipalan 2026: வைகாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Vaikasi Matha Rasipalan 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்கள். அப்படி சூரியன் மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் இதுவரை மேஷ ராசியில் இருந்தார். இந்நிலையில் சூரியன் மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியில் சூரியன் ஜூன் 15 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்த சூரிய பெயர்ச்சியால் தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் பிறக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் கிரகங்களின் நிலைகளால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் காணக்கூடும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது வைகாசி மாதமானது 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதமானது மேஷ ராசிக்காரர்களின் நிதி, பேச்சு மற்றும் குடும்ப வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இம்மாதத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமையானது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். ஆனால் கடுமையாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்திற்குள் சிறிய தவறான புரிதல்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சோர்வு அல்லது தலைவலி போன்ற சிறிய உடல்நலப் பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதத்தில் ஆளுமையிலும் தன்னம்பிக்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். இம்மாதத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். செல்வாக்குமிக்கவராகவும், உறுதியானவராகவும் மாறுவீர்கள். இருப்பினும் அகங்காரத்தால் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சற்று பணிவைக் கடைப்பிடிக்க வேண்டும். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் வாழ்க்கை முறை மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மை அல்லது சோர்வு ஆகியவை உங்களை தொந்தரவு செய்யும். ஆகவே சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதத்தில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்வில் சிறிய கருத்து வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் பெரும் வெற்றி, பதவி உயர்வுகள் மற்றும் அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் வைகாசி மாதமானது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இருப்பினும், தந்தையின் ஆரோக்கியத்திலும், செலவுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதமானது சற்று சவாலானதாக இருக்கும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். மன அழுத்தமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறுக்குவழிகளில் எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நேர்வழியில் எதை செய்தாலும், படிப்படியாக நிலைமை மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதத்தில் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு தங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், சமூக அந்தஸ்தை வலுப்படுத்தும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதமானது போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும், இறுதியில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகள், சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இழந்த நிதியை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இம்மாதத்தில் கடினமாக உழைத்தால் நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. செய்யும் வேலையில் தடங்கல்கள் அல்லது தாமதங்கள் ஏற்படக்கூடும். மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்படலாம். முதலீடுகள் அல்லது பங்குச் சந்தையிலிருந்து எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதத்தில் பொருள் வசதிகள் அதிகரிக்கக்கூடும். வீடு, குடும்பம் மற்றும் மன அமைதி தொடர்பான விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். அதுவும் குடும்பத்தில் சிறு விஷயங்களுக்காக கருத்து வேறுபாடுகள் அல்லது மனக்கசப்புகள் ஏற்படலாம். தொழிலதிபர்கள் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். இம்மாதத்தில் எந்த முடிவுகளையும் பலமுறை யோசித்து கவனமாக எடுக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வைகாசி மாதத்தில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகளை அர்ப்பணிப்புடனும், தன்னம்பிக்கையுடனும் முடிப்பீர்கள். சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். குறுகிய பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











