Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது!
Budhaditya Rajyog On Shani Jayanti 2026: 2026 ஆம் ஆண்டில் சனி ஜெயந்தி மே 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் சனி ஜெயந்தி மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளானது சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமையில் வருகிறது. அதோடு இந்நாளில் பல யோகங்களும் உருவாகவுள்ளன. முக்கியமாக 50 ஆண்டுகளுக்கு பின் கேதார யோகம் உருவாகிறது.

அதுமட்டுமின்றி, ரிஷப ராசியில் கிரகங்களின் ராஜாவான சூரியன் மற்றும் புத்திகாரகனான புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமானது. இது ஒருவரது ஞானம், தொழில், நிதி நிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இப்படிப்பட்ட மங்களரமான யோகமானது சனி பகவான் பிறந்த நாளான சனி ஜெயந்தி நாளில் உருவாகியிருப்பதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறவுள்ளனர். இப்போது சனி ஜெயந்தியில் உருவாகியிருக்கும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி ஜெயந்தி நாளில் ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியிருப்பதால், நீண்ட காலமாகத் தடைபட்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
சிம்மம்
சனி ஜெயந்தி நாளில் சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நல்ல லாபத்துடன், வேலையில் வெற்றியும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நிதி நிலைமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன.
மகரம்
சனி ஜெயந்தி நாளில் மகர ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக உறவுகள் வலுவடையும். புதிய வேலையைத் தொடங்க இக்காலம் உகந்ததாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பானதாக இருக்கும். மன அமைதி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



