Latest Updates
-
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா? -
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்.. -
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
இந்திய வரலாற்றில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஒரே அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
இந்த 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வரராகும் யோகம் அமோகமா இருக்காம்..உங்க நட்சத்திரம் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த ராசி எவ்வளவு முக்கியப்பங்கு வகிக்கிறதோ அதேயளவிற்கு அவர்களின் பிறந்த நட்சத்திரமும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ராசிகளைப் போலவே நட்சத்திரங்களும் ஒருவரின் தனித்துவமான குணங்களைப் பற்றியும், ஆளுமைப் பற்றியும் விவரிக்கிறது.
நட்சத்திரங்கள் செல்வாக்கு செலுத்தும் பல அம்சங்களில், செல்வமும் ஒரு முக்கியமான விஷயமாகும். அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே செல்வத்தை ஈர்க்கும் குணங்கள் உள்ளன. இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வரராகும் யோகம் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

பூசம்
செல்வத்தை ஈர்க்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் பூச நட்சத்திரம் முதலிடத்தில் உள்ளது, இது செல்வத்தை வாரி வழங்கும் கிரகமான வியாழனால் நிர்வகிக்கப்படுகிறது. இது வளர்ச்சி, செல்வம் மற்றும் செழுமை ஆகியவற்றை வழங்குகிறது, செல்வம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஆசீர்வதிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ரோகிணி
செல்வத்தை ஈர்க்கும் சக்திவாய்ந்த நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது ரோகிணி நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் பிரம்மாவுடன் தொடர்புடையது மற்றும் வளர்ச்சி, கருவுறுதல் மற்றும் பொருள் வளம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் பெரும்பாலும் படைப்பாற்றல், வசீகரம் மற்றும் பணம் பற்றிய ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில்முனைவு, செல்வம் மற்றும் வெற்றிக்கான வசதியான சூழலால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
அஸ்தம்
செல்வத்தை அதிகம் ஈர்க்கும் மற்றொரு நட்சத்திரம் அஸ்தம் ஆகும், இது புத்திசாலித்தனம் மற்றும் பல்துறை கிரகமான புதன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் திறமையானவர்கள், மேலும் வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர். அஸ்த நட்சத்திரம் இதில் பிறந்தவர்களுக்கு புத்திக்கூர்மை, துல்லியம் மற்றும் பகுப்பாய்வு திறன்களை ஆசீர்வதிப்பதால், அவர்கள் பணம் தொடர்பான முயற்சிகளில் எளிதாக வெற்றி பெற முடியும்.
பூரம்
ஆடம்பர மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணத்தை எளிதில் ஈர்க்கும் வரத்துடன் பிறந்தவர்கள். இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் படைப்பாற்றல், வேடிக்கை மற்றும் அழகியல் சார்ந்த விஷயங்களில் திறமையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் கலைத் திறமை, வசீகரம் மற்றும் செல்வம் மற்றும் ஆடம்பரமான வசதிகளைப் பெறும் யோகம் போன்றவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
உத்திரம்
உத்திர நட்சத்திரம் சூரியனால் நிர்வகிக்கப்படுகிறது. இது செல்வத்தை அடையும் மிகவும் சக்திவாய்ந்த நட்சத்திரங்களில் ஒன்றாகும், இது தலைமைத்துவம், துடிப்பு மற்றும் கவர்ச்சியைக் குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் உறுதி, லட்சியம் மற்றும் நிர்வாகத் திறன்களைக் கொண்டுள்னனர், இது செல்வத்தை உருவாக்குவதில் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க பதவிகளை நோக்கிச் செல்ல உதவுகிறது.
சித்திரை
சித்திரை நட்சத்திரம் செல்வத்தை ஈர்ப்பதற்கான நட்சத்திரங்களில் ஒன்றாக உள்ளது, இது செயல், ஆற்றல் மற்றும் ஆசை ஆகியவற்றின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தொலைநோக்குப் பார்வை, படைப்பாற்றல் மற்றும் அனைத்திலும் சிறந்து விளங்குவதற்கான விருப்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.
செல்வத்தை குவிக்கும் முயற்சிகளில் இந்த நட்சத்திரம் அவர்களுக்கு உதவுகிறது. செவ்வாய் கிரகத்தின் துடிப்பான ஆற்றல், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திறமையுடன் இணைந்து, தலைமைப் பதவி, தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் வெற்றி பெற உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

