Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
கேது நட்சத்திர பெயர்ச்சியால் 2025 பிப்ரவரி வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Ketu Transit In Uthiram Nakshatra 2024: ஜோதிடத்தில் கேது ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த கேது ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். கிரகங்களிலேயே கேது வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கக்கூடியவர். இந்த கேது ராசியை மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி கேதுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சமீபத்தில், அதுவும் நவம்பர் 10 ஆம் தேதி கேது உத்திரம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளார். உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இந்த சூரியனுக்கும், கேதுவுக்கும் இயற்கையாகவே பகை உள்ளது. இந்த உத்திர நட்சத்திரத்தில் கேது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை இருக்கவுள்ளார்.

இந்த சூரியனின் நட்சத்திரத்திற்கு கேது சென்றுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வரலாம். இப்போது கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கும்பம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமும் சற்று பாதிக்கப்படலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகள், மன பதட்டம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். எதிர்மறை எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தம். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வராது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கேது நட்சத்திர பெயர்ச்சியால் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே நிறைய வாக்குவாதங்கள் ஏற்படும். தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்வோர் உங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
கேது நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், பயணம் மேற்கொள்ளும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி நிலை மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் மோசமாக, பதற்றம் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
