Latest Updates
-
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு!
Guru Athisara Peyarchi 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி அதிசார பெயர்ச்சி அடையவுள்ளார்.

அதிசார குரு பெயர்ச்சி என்பது குரு பகவான் தனது வழக்கமான வேகத்தை விட வேகமாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதாகும். அதன் பின் ஜூன் 02 ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைந்தார். இப்படிப்பட்ட சூழலில் அக்டோபர் 31 ஆம் தேதி அவர் சிம்ம ராசிக்கு அதிசார பெயர்ச்சி அடையவுள்ளார்.
குரு சுப கிரகம் என்றாலும் இவர் தரும் அசுப பலனுக்கு அந்தந்த வீடுகளுக்கு ஏற்றவாறு தனித் தன்மை உண்டு, குரு ஜென்ம ராசியிலிருந்து 1-3-4-6-8-10-12 ஆகிய ஸ்தானங்களில் தரும் அசுப பலன்களை இதிகாச நாயகர்களின் வாழ்க்கை நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அதன்படி அக்டோபர் 31-ல் நடக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு பாதிப்பு அதிகம் என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! உங்கள் ராசி அதிபதியான சுக்கிரனுக்கு பகை கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளதால் வாகன செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் தடை வரக்கூடும். குரு பகவானின் பார்வை, உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. முடங்கிக்கிடந்த தொழில் வளர்ச்சி பெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்டு நின்ற சுபகாரியங்கள் மளமளவென நடைபெறும். வியாழக்கிழமை குரு பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் மறைவதால் பெரிய பாதிப்பை தரமாட்டார். பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை தரப்போகும் குரு தனது ஐந்தாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். தொழிலில் புதிய ஓப்பந்தங்கள் தேடி வரும். குரு தனது ஏழாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் அப்பாவிற்கு கீர்த்தியும், புகழும் கிடைக்கும். குரு ஒன்பதாம் பார்வையாக பதினொன்றாம் இடத்தை பார்ப்பதால் தொழில் முன்னேற்றமும் நல்ல லாபமும் உண்டாகும். வியாழக்கிழமை குரு பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் எந்த ஒரு நற்காரியத்திற்காக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவைப்படும். குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு 5, 7, 9 ஆம் இடங்களின் மீது விழுகிறது. திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் தடைகளை தாண்டி மளமளவென நடைபெறும். வியாழக்கிழமையன்று மஞ்சள் வஸ்திரம் சாற்றி குருவை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி
குரு பகவான் உங்க ராசிக்கு 12 ஆம் பாவமான விரய ஸ்தானத்தில் பயணிப்பதால், கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜ யோகம் என்ற அடிப்படையில் நன்மையே நடைபெறும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 4, 6, 8 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. சுபயோகங்கள் தேடி வரும்.சகல காரியங்களும் வெற்றி பெறும். கடன் சுமை குறையும். நோய் நொடிகள் நீங்கும். எதிர்பாராத வகையில் பண வரவு கிடைக்கும். பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டிய காலகட்டமாகும். வியாழக்கிழமையன்று நெய் தீபம் ஏற்றி குரு பகவானை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான தொழில், கர்ம ஸ்தானத்தில் குரு பகவானின் பயணம் உள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக கடன் படும் நிலையும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலை உருவாகும் வாய்ப்புள்ளது கவனம். குரு பகவான் 5ம் பார்வையாக 2 ஆம் இடமான குடும்ப, வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் சொன்ன சொல்லை காப்பாற்றலாம். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தலாம். பூமி, வீடு, வாகன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் உண்டாகும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள்.
மகரம்
குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் பயணம் செய்வதோடு உங்கள் ராசிக்கு 2, 4, 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்பு வெற்றிகரமாக நிறைவேறும். நிம்மதியான தூக்கம், சுபகாரியங்கள் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும். எதிர்பாரத விதமாக பணம், காசு கையில் புரளும். குடும்பம் குதூகலமாக இருக்கும். புதிய வீடு, நிலம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். 8ஆம் இடத்து குருவால் பாதகமில்லை என்றாலும் குரு பகவானை வியாழக்கிழமையன்று வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
மீனம்
உங்கள் ராசிநாதன் குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவதால், பொது எதிரிகளின் தொல்லை நீங்கும், வருமானம் அதிகரிக்கும், கடன்கள் திரும்ப செலுத்தும் நிலை உருவாகும், நோய்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் நீங்கும். குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தை பார்க்க போவதால் வியாபாரம் விருத்தி அடைந்து பெயர் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். குரு 7 ஆம் பார்வையாக ராசிக்கு 12 ஆம் பாவத்தை பார்க்கப் போவதால் வீண் விரையங்கள் குறையும் சுப செலவுகள் அதிகரிக்கும். குரு 9 ஆம் பார்வையாக ராசிக்கு 2 ஆம் இடத்தை பார்ப்பதால் வாக்கு வன்மை அதிகரிக்கும். தனம் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் வரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




