For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான வெண் பொங்கல் சாப்பிடுங்க!

By Mayura Akilan
|

Venpongal
தேவையான பொருட்கள்

பொன்னி அரிசி – கால்கிலோ

பாசிப்பருப்பு பருப்பு – 100 கிராம்

இஞ்சி, பூண்டு நறுக்கியது – 2 டீ ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

சீரகம் - 1 டீ ஸ்பூன்

மிளகு - 1 டீ ஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

முந்திரிப்பருப்பு - 10

உப்பு – தேவைக்கேற்ப

வெண்பொங்கல் செய்முறை

அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும். நன்றாகக் கழுவி விட்டு மூன்று மடங்கு தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை குழைய வேகவிடவும். குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டவும். நன்றாக கிளறினால் சுவையான பொங்கல் தயார்.

டைப் 2

உதிரிப் பொங்கல்

அடுப்பில் குக்கரை வைத்து காய்ந்த உடன் நெய் ஊற்றவும். காய்ந்த உடன் முந்திரி, நறுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். அரிசிக்கு ஏற்ப மூன்று மடங்கு தண்ணீர் விடவும். ஊறவைத்த அரிசி, பருப்பை போட்டு தேவையான அளவு உப்பு போடவும். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போடவும். குக்கரை மூடி விசில் போடாமல் கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து வெயில் போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும். பொங்கல் நன்றாக வெந்து உதிரி உதிரியாக இருக்கும். மேலே இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும். சுவையான வெண் பொங்கல் தயார். சாம்பார், சட்னி போட்டு பரிமாறலாம்.

English summary

Venpongal recipe | சுவையான வெண் பொங்கல் சாப்பிடுங்க!

A very famous tiffin dish in Southern India. Pongal festival is to celebrate the harvest festival and the first day of the Tamizh.
Story first published: Friday, May 4, 2012, 12:10 [IST]
Desktop Bottom Promotion