Latest Updates
-
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்! -
சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க!
சிக்கன் மொகலாய்

தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
தயிர் - 1/2 கப்
தேங்காய் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
முந்தரி - 8
கசகசா - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காயை துருவிக் கொள்ளவும்
பிறகு சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரியை ஒன்றாக போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து பட்டை, லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதில் தனியாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு கழுவிய சிக்கனைப் போட்டு தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும்.
சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து உப்பை சரிபார்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அதில் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான சிக்கன் மொகலாய் ரெடி!!! இதனை சாப்பாடு, சப்பாத்தி போன்றவற்றோடு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











