Latest Updates
-
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஆடி மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகள் இணையக்கூடாது தெரியுமா?
Why Newly Married Couples Stay Separated: ஆடி மாதம் பொதுவாகவே கடவுள் வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும்.. இந்த மாதத்தில்தான் விரதங்கள், வழிபாடுகள், கோயில்களில் விழாக்கள், பெரிய உற்சவங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும்.
ஆன்மிகத்திலும், இறைவழிபாட்டிலும் மனம் ஈடுபட வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் திருமணமும் செய்வதில்லை. திருமணம் ஆனவர்களையும் சேர்த்து ஒரே வீட்டில் இல்லாமல் பிரித்து வைக்கின்றோம்..

ஆம் ஆனி கடைசி தேதியில் திருமணம் ஆகியிருந்தால் கூட மறுநாள் ஆடி பிறந்தவுடன் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சீர்வரிசைகளை வைத்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள். அடஹ்ற்கு காராணம் ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பதேயாகும்.. அப்படி கோடையில் குழந்தை பிறந்தால் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும்.. அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் இன்றளவும் ஆடி மாதம் முழுவதும் ஏதாவது ஒரு திருவிழா, விசேஷம் என விழா கோலம் பூண்டிருக்கும். இந்த மாதத்தில் கிராம மக்கள் காப்பு கட்டி சில கட்டுப்பாடுகளை மேற்கொள்வார்கள். அதனால்தான் திருமணமான புதுமண தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு மனதை சிதறவிடக்கூடாது என்பதற்காக, இன்றளவும் கிராமத்தில் புதுமணத் தம்பதிகள் ஆடி மாதம் தொடங்கியதும், புதிதாக திருமணமான பெண்ணை பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இவை அனைத்தும் நம் முன்னோர்கள் பின்பற்றிய நம்பிக்கைகள் அது தெரிந்தவர்கள் இன்னும் இதனை பின்பற்றி வருகிறார்கள். எனக்கு தெரிந்தவரை ஆடி மாதம் சாகுபடி செய்வார்கள் ஏழைகள் கையில் கொஞ்சம்தான் பணம் இருக்கும்.. அதனால் அந்தகாலத்தில் சேர்த்து வைத்த பணத்தையும் சேர்த்து தள்ளுபடில கிடைக்கிற ஜவுளி , ஏதுவான பொருட்கள் வாங்க சிறந்த மாதம் ஆடி மாதம்..
ஆதலால் ஆடி மாதம் முடிந்து உடனேயே வரும் ஆணி மதத்தில்தான் திருமணம் நடத்துவார்கள்.. ஆடி மாதம் கோவில்களுக்கு சிறந்த மாதம் ஆதலால் ஒருசிலர் விரதம் முறைகளை பின்பற்றலாம் ஆதலால் ஆணியில் திருமணம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்..
இந்த வருடம் (2024) ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை உள்ளது.. அதனால் தென் மாவட்டங்களில் பெரும்பாலும் ஆடி மாதம் பிறக்கும் முதல் நாளே புதிதாக திருமணம் ஆன தங்களது வீட்டு பெண்ணை சீர் வரிசை வைத்து கையோடு அழைத்து வந்து விடுவார்கள்.. அதன் பிரகு மீண்டும் ஆடி அமாவாசை முடிந்தவுடன் அழைத்துக் கொண்டு மாப்பிளை வீட்டில் விட்டு விடுவார்கள்..
ஆனால் ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று. ஏதேனும் ஒரு விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும், கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து நடக்க வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லுகிறது...



Click it and Unblock the Notifications