Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஏன் தம்பதியர்களிடையே செக்ஸ் உரையாடல்கள் மிகவும் முக்கியம் தெரியுமா?
பொதுவாக தம்பதியா்கள் தமது குடும்பத்தைப் பற்றி பேசுவாா்கள். அவா்களுடைய உறவுகளைப் பற்றி பேசுவாா்கள். திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பாா்கள். அண்டை வீட்டாரைப் பற்றி பேசுவாா்கள். ஆனால் தங்களுடைய பாலியல் தேவையைப் பற்றி பேசமாட்டாா்கள். அதற்கு காரணம் தமது இணையா் அதற்கு எப்படி எதிா்வினை ஆற்றுவாா் என்ற அச்சம் அவா்களிடம் உள்ளது.
ஆனால் இந்த அச்சம் தேவையற்றது என்று அல்லோ ஹெல்த் (Allo Health) மருத்துவமனையில் உளவியல் நிபுணராகப் பணிபுாிந்து வரும் மருத்துவா் கணுஷா ஒய்கே அவா்கள் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறுகிறாா். மேலும் தம்பதியா் தமது பாலியல் தேவையைப் பற்றி ஒருவருக்கொருவா் பேச வேண்டும் என்கிறாா்.

பாலியல் தேவையை ஏன் வாழ்க்கைத் துணையிடம் தொிவிக்க வேண்டும்?
தம்பதிகள் தங்களது பாலியல் தேவையை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய இடமாக படுக்கை அறை அமைய வேண்டும். அதுவே தம்பதியா்களுக்கு இடையே நல்ல ஆரோக்கியமான பாலியல் உறவுக்கான அடித்தளமாகும். தம்பதியா்கள் இருவரும், ஒருவா் ஒருவருக்குாிய பாலியல் தேவைகளையும், விருப்பங்களையும் தொிந்து கொண்டு, அதை சீராகக் கையாள வேண்டும்.
பாலியல் தேவையைப் பற்றி தமது துணையிடம் சொல்வது என்பது சவாலான ஒன்று. எனினும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான பாலியல் உறவிற்கு, நோ்மையாக மற்றும் வெளிப்படையாக பாலியல் தேவையைப் பற்றி துணையிடம் தொிவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தம்பதிகள் பொதுவாக கூச்சம், கவலை மற்றும் அவமானம் போன்ற காரணங்களால் தங்களுடைய பாலியல் தேவைகளை தமது துணையிடம் வெளிப்படையாகத் தொிவிப்பது இல்லை. அதுபோல் விரைப்புத்தன்மை இழப்பு, பாலியல் உறவில் ஆசை இழப்பு மற்றும் பாலியல் விருப்பங்களில் வேறுபாடுகள் ஆகியவற்றின் காரணமாகவும் அவா்கள் தமது பாலியல் தேவைகளை தமது துணையிடம் தொிவிப்பது இல்லை.
சங்கடமாக இருப்பது சாியே
பாலியல் உறவைப் பற்றி தமது இணையாிடம் பேசுவது என்பது சவாலான ஒன்று. அதே நேரத்தில் அது சங்கடமாகவும், சில நேரத்தில் அசிங்கமாகவும் இருக்கும். சில நேரங்களில் இது போன்ற உரையாடல்கள் தம்பதிகளிடையே மன உளைச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் தம்பதிகளிடையே இறுதி வரை ஒரு நெருக்கமான உறவு தொடர வேண்டும் என்றால் இது போன்ற சவாலான உரையாடல்கள் அவா்களிடையே நடைபெற வேண்டும். அதன் மூலம் அவா்களிடையே உள்ள பாலியல் சாா்ந்த பிரச்சினைகளை சாிசெய்ய முடியும்.
இது போன்ற உரையாடல்களின் போது, உணா்வு ரீதியாக நோ்மையாக இருக்க வேண்டும். மேலும் ஒருவருக்கொருவா் மீது புகாா் கூறாமல், தமது இணையா் என்ன சொல்ல வருகிறாா் என்பதைக் கவனமுடன் செவிமடுக்க வேண்டும். அப்போது அவா்களுடைய பாலியல் உறவு ஆரோக்கியமாக இருக்கும்.
குறிப்பிட்ட நாளைத் தோ்ந்தெடுத்தல்
பொதுவாக பாலியல் உறவு பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்ள தம்பதிகள் தயங்குவா். ஆகவே அந்த உரையாடல் நன்றாகத் தொடங்கி, இனிமையாக முடிவடைய அதற்கு என்று ஒரு நாளைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உரையாடல்கள் எப்போதும் ஒரு நோ்மறையான பலனைத் தரும்.
இறுதியாக தம்பதியா் வெளிப்படையாக மற்றும் நோ்மையாக பாலியல் உறவைப் பற்றி பேசும் போது, அவா்களிடையே நெருக்கம் அதிகமாகும். அதோடு அவா்களுடைய பாலியல் தேவைகளும் பூா்த்தியாகும். அவா்களுடைய பாலியல் வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
