Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஹனிமூன் போறதுக்கு திட்டம் போடுறீங்களா? இந்த தவறுகளை ஹனிமூனில் ஒருபோதும் செஞ்சுராதீங்க...!
திருமணமான அனைவருக்குமே தேனிலவு செல்ல வேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளிடையே நெருக்கத்தை அதிகரிக்க தேனிலவு மிகவும் முக்கியமானது. திருமண உறவில் நெருக்கம் குறைந்ததாக நினைக்கும் தம்பதிகளும் தாராளமாக மீண்டும் தேனிலவுக்கு செல்லலாம்.
தேனிலவு என்பது உணர்ச்சிகள் சார்நததாக மட்டுமின்றி பொருளாதாரம் சார்ந்ததாகவும் இருப்பதால் தேனிலவு செல்வதற்கு முன் தம்பதிகள் சில விஷயங்கள் குறித்து திட்டமிட வேண்டியது அவசியமாகும். தொந்தரவில்லாத நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான தேனிலவுக்கு தம்பதிகள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒன்றாக திட்டமிட வேண்டும்
உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் அடியெடுத்து வைத்தவுடன் நீண்ட கால பயணத்தை இனிமையாக தொடங்குவதில் தேனிலவு முக்கியப்பங்கு வகிக்கிறது. தேனிலவுக்கு ஒன்றாக திட்டமிடுவது ஒரு ஜோடியாக நீங்கள் எடுக்கும் முதல் முடிவாக இருக்கலாம். ஒருவருக்கொருவர் விருப்பு வெறுப்புகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். நீங்கள் இருவரும் சமமாக முடிவெடுப்பீர்கள்.
பிரபலமான இடங்களுக்கு பதில் பிரைவசியான இடத்திற்கு செல்லலாம்
பிரபலமான இடங்கள் பெரும்பாலும் கூட்டமாக இருக்கும் மற்றும் பட்ஜெட்டும் அதிகம் தேவைப்படும். அதற்குப் பதிலாக எதற்கும் முன், நீங்கள் இருவரும் பிரைவசியை அனுபவிக்கக்கூடிய இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் தேனிலவுக்குச் செல்வதன் நோக்கம், உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரத்தை அனுபவிப்பதுடன் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வதாகும். எனவே உங்கள் பட்டியலில் உள்ள மிகவும் பிரபலமான இடங்களைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக, உங்கள் இருவருக்கும் பிரைவசியை அளிக்கும் இடத்தை தேர்ந்தேடுங்கள்.
புதிதாக ஏதாவது முயற்சிக்கவும்
பயணம் என்பது புதிய விஷயங்களை ஆராய்வது மற்றும் உங்களின் வாழ்க்கையை அனுபவிப்பதுடன் தொடர்புடையதாகும். நீங்கள் வெறித்தனமாக பயணம் செய்ய வேண்டிய அவசியமில்லை, மட்பாண்டங்கள், அதற்குப் பதிலாக உங்கள் அன்புக்குரியவருடன் சாகசங்கள் நிறைந்த புதிய விளையாட்டுக்களை முயற்சிக்கவும். நீங்கள் விரும்பும் நபருடன் சிறப்பு தருணங்கள் தரும் மகிழ்ச்சியை வேறெதுவும் தர முடியாது.
எதிர்பாராத செலவுகளில் கவனமாக இருங்கள்
தேனிலவு அதிக பணம் தேவைப்படும் ஒன்றாகும், அதற்கு நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும், ஆனால் அதன்மூலம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் எண்ணற்ற நினைவுகளை நீங்கள் உருவாக்குவீர்கள். இந்த பயணத்தின் போது நீங்கள் செய்ய வேண்டிய எதிர்பாராத செலவுகளில் கவனமாக இருங்கள் மற்றும் அதற்கேற்ப திட்டமிடுங்கள். அசம்பாவிதங்களைத் தவிர்க்க கூடுதல் பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது உங்கள் மனநிலையையும் உங்கள் தேனிலவையும் கெடுத்துவிடும்.
திரும்பி செல்வது பற்றி சிந்திக்கக்கூடாது
வாழ்க்கையின் தொந்தரவுகளிலிருந்து வெகு தொலைவில் ஒன்றாகத் தரமான நேரத்தைச் செலவிடும் போது, நீங்கள் வீட்டிற்குத் திரும்பி வர விரும்பவில்லை என்று உணரலாம், மேலும் இந்த செயல்பாட்டில், நீங்கள் திரும்பி சென்றவுடன் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கலாம். உங்களின் இந்த சிந்தனை உங்கள் மனநிலையையும் உங்கள் தேனிலவையும் கெடுத்துவிடும்.
நாளை இல்லை என்பது போல உங்கள் துணையுடன் அந்த தருணத்தை வாழ்ந்து மகிழுங்கள். வீட்டைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக, உங்களுக்குள் இருக்கும் எக்ஸ்ப்ளோரரை உயிருடன் வைத்திருக்க அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்பதைப் பற்றி பேசுங்கள். வீட்டில் உள்ள விஷயங்களைப் பற்றி சிந்திக்காமல் இருக்க உங்களால் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருங்கள்.



Click it and Unblock the Notifications
