Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
ஒரே விவாகரத்து ஓஹோனு வாழ்க்கை... விவாகரத்து மூலம் கோடிகளில் சம்பாதித்த பிரபலங்கள்...!
விவாகரத்து என்பது ஒருவரின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஒரு கசப்பான சம்பவமாகும். வாழ்நாள் முழுவதும் இணைந்திருப்பதாக உறுதிமொழி எடுத்து திருமணம் செய்பவர்கள் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளால் அந்த உறவை முறித்துக் கொள்கிறார்கள். சில சமயங்களில் பொருந்தாத துணையுடன் வாழ்வதை விட விவகாரத்தே சிறந்த தீர்வாக இருக்கும். இவ்வாறு விவகாரத்தில் அதற்கான தனிப்பட்ட நன்மை, தீமைகள் இருக்கின்றன.

தற்போது விவாகரத்துகள் உறவுகளில் மட்டுமின்றி நிதிரீதியாகவும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. பெரும் பணக்காரர்களுக்கு, அவர்களின் விவாகரத்துகள் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் உலகின் மிகவும் காஸ்டலியான விவகாரத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த விவாகரத்துகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க காரணம் இதில் ஜீவனாம்சமாக வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகைதான்.
ஆம்பர் ஹியர்ட் மற்றும் ஜானி டெப்
முன்னாள் ஹாலிவுட் நடிகர்-ஜோடி, ஆம்பர் ஹியர்ட் மற்றும் ஜானி டெப் திருமணம் செய்து 15 மாதங்கள் வாழ்ந்தனர். இருப்பினும், அவர்களுடையது மிகவும் குழப்பமான விவாகரத்துகளில் ஒன்றாகும், இது சர்வதேச ஊடகங்கள் மட்டுமின்றி பொதுமக்களின் கவனத்தையும் பெற்றது. 2016 ஆம் ஆண்டில், ஆம்பர் ஹியர்ட் ஜானி டெப்பிடம் இருந்து விவாகரத்து கோரினார், அதற்காக அவருக்கு ஜீவனாம்சமாக $7 மில்லியன் வழங்கப்பட்டது, அவர் இந்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.
ஆனால் அவர்களது விவாகரத்து எளிதானது அல்ல, ஏனெனில் ஆம்பர் மற்றும் டெப் இருவரும் ஒருவரையொருவர் டொமஸ்டிக் வயலன்ஸ் வழக்கில் என்று குற்றம் சாட்டினர். முன்னாள் தம்பதியினர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் பெரும்பகுதியை டெப்பை "மனைவியை அடிப்பவர்" என்று கூறிய தி சன் நாளிதழுக்கு எதிரான வழக்குக்காக நீதிமன்றத்தில் போராடினர். ஜானி டெப் வழக்கில் தோற்று மேல்முறையீடு செய்தார்.
2022 ஆம் ஆண்டில், ஹியர்ட் மற்றும் டெப் மீண்டும் நீதிமன்றத்திற்கு மீண்டும் வந்தனர். இந்த முறை டெப் ஹியர்டுக்கு எதிராக ஒரு அவதூறு வழக்குக்காக 2018 ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட்டில் அவர் எழுதிய ஒரு op-ed pieve இல் அவர் அவரைப் பற்றியும், அவர் உணர்ந்த குடும்ப துஷ்பிரயோகம் பற்றியும் பெயரிடாமல் எழுதினார். ஜூன் மாதம், ஒரு நடுவர் மன்றம், ஹியர்ட் டெப்பை அவதூறாகப் பேசியதாக முடிவு செய்தது, அதற்காக ஹியர்ட் அவருக்கு $15 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது, பின்னர் அது $10.35 மில்லியனாகக் குறைக்கப்பட்டது.
ஹியர்ட் ஒரு எதிர் வழக்கைத் தாக்கல் செய்தார், அதில் அவர் மூன்று அவதூறு வழக்குகளில் ஒன்றை வென்றார், அதற்காக அவருக்கு $2 மில்லியன் வழங்கப்பட்டது. ஹியர்ட் மற்றும் டெப் இருவரும் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில், டிசம்பர் 2022 இல் ஹியர்ட் தனது முன்னாள் கணவர் டெப்புடன் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டதாக பகிர்ந்து கொண்டார். இறுதியில், ஹெர்ட் அவருக்கு $1 மில்லியனை செலுத்த வேண்டியிருந்தது, அதை டெப் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் மற்றும் இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைன்
துபாயின் பணக்கார ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மக்தூம் தனது முன்னாள் மனைவி இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைனை டிசம்பர் 2021 இல் விவாகரத்து செய்தார், மேலும் அவருக்கு $728 மில்லியன் செலுத்துமாறுகூறப்பட்டது. ஷேக் முகமது கள்ள உறவு மற்றும் அச்சுறுத்தல்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதால், அவர்களது பிரிவினை எளிதானது அல்ல, மேலும் விவாகரத்து தீர்வுக்கு பல ஆண்டுகள் ஆனது.
சிஎன்என் அறிக்கையின்படி, இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைனுக்கு ஷேக் முகமது செலுத்திய $728 மில்லியன் "இளவரசி ஹயாவின் எஞ்சிய வாழ்நாள் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் தம்பதிகளின் இரண்டு குழந்தைகளின் பராமரிப்புக்கு செலவிடப்படும் " என்று கூறப்பட்டது.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் அவரது பரோபகார மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் ஆகியோர் 27 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, மே 3, 2021 அன்று விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அறிக்கைகளின்படி, நீதிமன்ற ஆவணங்கள், முன்னாள் தம்பதியினருக்கு தனிப்பட்ட பிரிவினை ஒப்பந்தம் இருந்தது.
விவாகரத்து குறித்து, முன்னாள் தம்பதியினர் ஒரு அறிக்கையில், உலகம் முழுவதும் உதவுவதற்காக கேட்ஸ் அறக்கட்டளை என்று அழைக்கப்படும் தங்கள் அறக்கட்டளையை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறினார். கேட்ஸ் அறக்கட்டளை $40 பில்லியன் மதிப்புடையது. அறிக்கைகளின்படி, பில் கேட்ஸின் மதிப்பு $130.5 பில்லியன் ஆகும், பில் மற்றும் மெலிண்டா இணைந்து மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பல சொத்துக்களை வைத்திருந்தனர்.
ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட்
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனறுமான, ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் மெக்கன்சி ஸ்காட் ஆகியோர் தங்களது 25 ஆண்டுகால விவகாரத்தை ஏப்ரல் 2019 இல் அறிவித்தனர். ஜூன் 2018 இல் ஜெஃப் உலகின் பணக்காரர் என்பதைக் கருத்தில் கொண்டு, 2019 இல் அவரது விவாகரத்து நடந்தது.
அறிக்கைகளின்படி, விவாகரத்து முடிவான பிறகு ஜெஃப் மெக்கன்சிக்கு $36 பில்லியன் கொடுக்கப்பட்டது, இது அவரை உலகின் பணக்கார பெண்களில் ஒருவராக ஆக்கியது. இருப்பினும், ஜூன் 2020க்குள் மெக்கன்சி $1.7 பில்லியனை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார், மேலும் அவர் இந்த பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து நன்கொடையாக அளித்து வருகிறார்.
மடோனா மற்றும் கை ரிச்சி
அமெரிக்க பாடகி-பாடலாசிரியரும் நடிகையுமான மடோனா தனது முன்னாள் கணவர் கை ரிச்சியுடன் விவாகரத்து செய்தது உலகின் மிக விலையுயர்ந்த விவகாரத்தில் ஒன்றாகும். முன்னாள் ஜோடி 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்கள், ஆனால் பின்னர் 2008 இல் விவாகரத்து பெற்றார்கள்.
அவர்களது பிரிவு தீவிரமானது, மேலும் அறிக்கைகளின்படி, மடோனா கை ரிச்சிக்கு $76 மில்லியன் முதல் $92 மில்லியன் வரை பணம் கொடுத்தார்.



Click it and Unblock the Notifications












