For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா?

எந்தவொரு உறவுக்குள்ளும் சந்தேகம் என்ற எண்ணம் நுழைந்து விட்டால் அதற்குப்பின் அந்த இரவு ஆரோக்கியமாக நீடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

|

எந்தவொரு உறவுக்குள்ளும் சந்தேகம் என்ற எண்ணம் நுழைந்து விட்டால் அதற்குப்பின் அந்த இரவு ஆரோக்கியமாக நீடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆண், பெண் உறவில் பொசசிவ் என்னும் பாதுகாப்பற்ற உணர்வு இருவருக்குமே ஏற்படக்கூடிய ஒன்றுதான். தங்கள் துணையை வேறு யாராவது கவர்ந்து சென்று விடுவார்களோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுவதுதான். இந்த எண்ணம்தான் சந்தேகத்திற்கான ஆரம்ப புள்ளியாகும்.

ways to deal with a possessive wife

இந்த எண்ணத்தை ஆரம்பத்திலேயே சரி செய்து விட வேண்டும், இல்லயெனில் நிம்மதியின்மை, சண்டை எனத் தொடங்கி இறுதியில் நிரந்தர பிரிவுக்கே கூட வழிவகுக்கும். இது காதலர்களுக்கு மட்டுமல்ல திருமணமான தம்பதிகளுக்கும் பொருந்தும். சந்தேகத்தால் விவாகரத்து பெற்ற எத்தனையோ ஜோடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சந்தேகம் என்று வரும்போது அது பெண்களின் பிறவி குணம் என்று கூறுவார்கள். அந்த வகையில் மனைவியை நேசிக்கும்அனைத்து ஆண்களும் சந்தேகப்படும் மனைவியை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் சந்தேகப்படும் மனைவியை சமாளிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்று கூறுங்கள்

எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்று கூறுங்கள்

உங்கள் மனைவி மீது நீங்கள் எவ்வளவு காதல் வைத்திருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வதில் எந்த பலனும் இல்லை. அதை அவர்களிடம் அவ்வப்போது வெளிப்படுத்தவும், இது உங்களின் காதலை அவர்கள் உணர்ந்தாலே உங்கள் மீதான சந்தேகம் அவர்களுக்கு குறைக்கும். உங்கள் காதலை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மீதான உங்கள் காதலின் உங்களின் மற்ற பெண் தோழிகளை அவர்களை மறக்கச் செய்யலாம். உங்களின் காதலும், கவனமும் அவர்கள் மீதே இருக்கும்போது நீங்கள் மற்ற பெண்களின் மீது திசைதிருப்ப மாட்டிர்கள்.

மற்ற பெண்கள் குறித்துக் கருத்து கூறவேண்டாம்

மற்ற பெண்கள் குறித்துக் கருத்து கூறவேண்டாம்

வேறொரு பெண்ணின் தோற்றம் குறித்து உங்கள் மனைவி உங்கள் கருத்தை கேட்டால், கேள்வியை மற்றொரு தலைப்பில் திசை திருப்ப முயற்சிக்கவும். மற்றொரு பெண்ணின் தோற்றம் உங்களை முற்றிலும் ஈர்க்கவில்லை என்ற எண்ணத்தை முயற்சி செய்து உங்கள் மனைவிக்குக் கொடுங்கள்.

கத்த ஆரம்பித்தால் அங்கிருந்து நகர்ந்து இடவும்.

கத்த ஆரம்பித்தால் அங்கிருந்து நகர்ந்து இடவும்.

அதிகப்படியான பொறாமை கொண்ட பெண்கள், நீங்கள் எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும், வேறொரு பெண்ணின் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்று நினைத்தால், உங்களிடம் கத்த தொடங்குவது சகஜமானதுதான். அவ்வாறு அவர்கள் கத்த தொடங்கினால் உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது நல்லது, அவர்களின் கோபம் தணியும் வரை கண்களில் பட்டுவிடாதீர்கள்.

MOST READ: மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

தொழில்முறை உதவியை நாடுங்கள்

தொழில்முறை உதவியை நாடுங்கள்

சில நேரங்களில் ஒரு தொழில்முறை உறவு சிகிச்சையாளர் அல்லது ஆலோசகரின் வழிகாட்டுதல் உங்கள் மனைவியின் பொறாமை ஆதாரமற்றது என்பதைக் காண்பிப்பதில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

மனைவியை பாதுகாப்பாக உணர வைக்கவும்

மனைவியை பாதுகாப்பாக உணர வைக்கவும்

ஒரு பெண் தனது உறவில் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தால் அவர்கள் நரக வேதனையை உணர்வார்கள். அவர்களுக்கு இந்த நரக வேதனையை தராமல் இருக்க வேண்டியது உங்கள் கடமையாகும். அவர்களுடன் அமர்ந்து அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வு குறித்து ஆலோசிக்கவும். நீங்கள் எந்த வகையிலும் அவர்களை ஏமாற்றப் போவதில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களின் நம்பிக்கையை வெல்வது என்பது மிகவும் முக்கியமானது.

உங்கள் பெண் நண்பர்களை அறிமுகப்படுத்துங்கள்

உங்கள் பெண் நண்பர்களை அறிமுகப்படுத்துங்கள்

உங்கள் பெண் நண்பர்களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையில் அமைதியான உறவை பேணுவது என்பது மிகவும் கடினமானது, இருந்தாலும் அதனை செய்ய வேண்டியது அவசியமாகும். பொறாமை அல்லது சண்டை ஏற்படுவதற்கு முன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்க வேண்டியது அவசியமாகும். நட்பை வளர்த்துக்கொள்ள அவர்களை அனுமதிக்கவும், அவர்களுக்கு இடையே ஆரோக்கியமான நட்புறவின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும்.

பொய் கூறவோ, மறைக்கவோ முயற்சிக்காதீர்கள்

பொய் கூறவோ, மறைக்கவோ முயற்சிக்காதீர்கள்

அதிகப்படியான பொய்கள் ஒரு உறவைக் கொல்லும். உங்கள் நடத்தை அவளை வருத்தமடையச் செய்து சண்டைக்கு வழிவகுக்கும் என்று நீங்கள் நினைத்தால், அதைப் பற்றி பொய் சொல்வதை விட அதை எதிர்கொள்ள முயலுங்கள். நீங்கள் ஒரு பெண் நண்பரை சந்திக்க செல்வதாக இருந்தால் அதனை மறைக்காமல் கூறவும். பின்னாளில் அது தெரிய வரும்போது உங்கள் மீதான சந்தேகத்தை அதிகரிக்கும். உங்கள் வெளிப்படைத்தன்மைதான் உங்கள் மனைவியின் சந்தேகத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும் கவசமாகும்.

MOST READ: உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...!

இறுதி எச்சரிக்கை கொடுங்கள்

இறுதி எச்சரிக்கை கொடுங்கள்

உங்கள் மனைவியின் பொறாமை காலப்போக்கில் மோசமாகிவிட்டால், உங்கள் உறவை சேதப்படுத்தும் நிலைக்கு நீங்கள் வந்துவிட்டால், நீங்கள் அமைதியாகவும் அவளுடைய வழிகளை மாற்றவும் அவளுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை கொடுக்க வேண்டும். வலிமையான மற்றும் பொறாமை கொண்ட பெண் இந்த அதிக வலிமையான அணுகுமுறைக்கு பதிலளிப்பார். மற்ற எல்லா வழிகளும் தோல்வியுற்றால் மட்டுமே இதை நாட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Deal With Possessive Wife

Here is the list of useful ways to deal with a possessive wife.
Story first published: Wednesday, November 13, 2019, 17:52 [IST]
Desktop Bottom Promotion