Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
உங்கள் உறவு மகிழ்ச்சியாக அமைய உங்கள் துணையுடன் நீங்க இத செய்யுங்க போதும்…!
கூட்டாளிகள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் எதிர்பார்ப்புகளையும் உறவையும் அறிந்திருக்க வேண்டும்.
தகவல்தொடர்பு என்பது மிக முக்கியமானது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், ஒரு உறவில் ஆணும், பெண்ணும் தொடர்பு கொள்வது என்பது அதைவிட மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இதன் அவசியத்தை யாரும் புரிந்துகொள்வதில்லை. நீங்களும் அவ்வாறு இருந்தால், நீங்கள் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆரோக்கியமான தொடர்பு என்பது ஒவ்வொரு உறவிற்கும் அடித்தளம். உங்கள் எண்ணங்களை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள் என்பது எல்லாவற்றையும் வேறுபடுத்துகிறது.

நீங்கள் உங்கள் துணையுடன் சிறப்பாக தொடர்பு கொள்ளும்போது, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான உறவு வலுவடையும். ஆனால் சிறப்பாக தொடர்புகொள்வதற்கு, நீங்கள் கவனமாகக் கேட்டு செயலாக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும், அதன் மூலம் உங்கள் துணையுடன் நீங்கள் நெருங்கமாக உதவும் சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

தேவைகளை பேசாமல் இருப்பது
மிகவும் தோல்வியுற்ற பல உறவுகளுக்கும் பின்னால் தவறான தகவல்தொடர்பு இருக்கிறது என்பது நிதர்சனம். ஒரு உறவில் உணர்ச்சி ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இல்லாமல் இருப்பது மந்தமான காதல் வாழ்க்கையின் அடையாளம். சில நேரங்களில் நிறைவேறாத ஆசைகள் அல்லது தேவைகள் ஒரு உறவுக்கு ஈடுசெய்ய முடியாத அழிவை ஏற்படுத்தும். இது அந்த உறவு பிரிவதற்கும் வழிவகுக்கும்.

வெளிப்படையாக இருங்கள்
கூட்டாளிகள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் எதிர்பார்ப்புகளையும் உறவையும் அறிந்திருக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்களும் உங்கள் துணையும் மனம் விட்டுப் பேச வேண்டும். இருவரும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் சில பொருத்தமற்ற வாதங்களையும், செயல்களையும் இருவரும் உண்மையில் தவிர்க்கலாம்.

மனதைப் படிக்க முடியாது
"ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்" என்ற வசனம் திரைப்படங்களிலும், வாழ்க்கையில் அதிக பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது நிதர்சனம் இல்லை. யார் மனதில் உள்ளதையும் இங்கு யாராலும் படிக்க முடியாது என்பதே உண்மை. உங்கள் துணை ஒரு மந்திரவாதி அல்ல உங்கள் மனதைப் படிப்பதற்கு?

ஆரோக்கியமான வழி அல்ல
சில நேரங்களில், கோபம், அதிருப்தி அல்லது மகிழ்ச்சி போன்ற ஆழ்ந்த உணர்ச்சிகளை உங்கள் முகபாவனைகள் வெளிப்படுத்தும். ஆனால் உங்கள் துணை சொற்களை விட உங்கள் வெளிப்பாடுகளின் அடிப்படையில் உங்கள் மனதைப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தொடர்புகொள்வதற்கான ஆரோக்கியமான வழி அல்ல. இருவரும் மனதில் உ���்ள விஷயங்களை பகிர்ந்துகொள்ளும்போதுதான் ஒருவரை பற்றி மற்றொருவர் தெரிந்துகொள்ள முடியும்.

கேட்டு பின்னர் விவாதிக்கவும்
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒரு சிறை மனக்கசப்பு ஏற்படுகிறது என்றால், அதை பேசி தீர்க்க வேண்டும். அந்த சமயத்தில் உங்கள் துணையின் புறம் உள்ள வாதத்தையும் நீங்கள் கேட்க வேண்டும். தாங்கள் நினைப்பது மற்றும் செய்வது மட்டுமே சரி என்று எண்ணக்கூடாது. உங்கள் தரப்பு வாதத்தையும் உங்கள் துணை கேட்க வேண்டும். நீயா?, நானா? என்று சண்டை போட்டுக்கொள்ளாமல், நீயா?, நானா? நிகழ்ச்சியை போல இருபுறமும் வாதங்களை கேட்க வேண்டும்.

சமமாக இருக்க வேண்டும்
உறவு வாழ்க்கை என்பது இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். விவாதங்களின் போதும் ஒவ்வொரு நபருக்கும் சமமான கருத்து இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை உங்களால் வெளிப்படுத்த முடியவில்லை என்று நீங்கள் நினைத்தால், இதை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது. ஆரோக்கியமான உறவுக்கு, தொடர்புகொள்வது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

மோதலை தீர்க்க வேண்டும்
காதல் மற்றும் உறவில் சண்டைகள் வருவது சகஜம்தான் என்றாலும், அது எவ்வாறு சரிசெய்யப்படுகிறது என்பதைப் பொருத்து அமைகிறது ஆரோக்கியமான உறவு. உடல் ரீதியான மோதல்களைத் தவிர்க்க வேண்டியதில் எந்த மாற்றம் இல்லை. வாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் எல்லா உறவின் வழக்கமான பகுதியாகும். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால், ஒரு நபர் இந்த மோதல்களை எவ்வாறு தீர்க்கிறார் என்பதுதான்.

தவறான புரிதல்
தவறான புரிதல்கள் சண்டைகளுக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், சண்டைகள் தீர்க்கப்படாமல் இருக்கும்போது எதிர்காலத்தில் அது பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் துணையுடன் உட்கார்ந்து சண்டையைத் தீர்ப்பது நல்லது. இது மறுநாள் காலையில் சிறந்த தகவல்தொடர்புக்கு மென்மையான பாதையை உருவாக்க உதவும்.

நேரம் செலவிட வேண்டும்
பரபரப்பான இக்காலகட்டத்தில் அலுவலக வேலை, பயணம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற நூறு செயல்பாடுகளுக்கு மத்தியில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் செலவழிக்க அதிக நேரம் ஒதுக்கவில்லை. வீட்டை விட தங்கள் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவோரில் நீங்கள் ஒருவராக இருந்தால், அதை மாற்ற நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். செல்போனில் மணிக்கணக்காகப் பேசுவதைக் காட்டிலும், இருவரும் நேரில் அமர்ந்து பேசிக்கொள்வது போன்று சிறந்ததாக இருக்க முடியாது. எனவே தம்பதிகள் இருவரும் சேர்ந்து செலவிட நேரம் ஒதுக்குங்கள்.

மகிழ்ச்சியாக வாழுங்கள்
ஆண், பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்ததுதான் என்றாலும், அந்த உறவை நாம் எப்படி அமைத்துக்கொள்கிறோம், அதில் எப்படி இருக்கிறோம் என்பதை பொறுத்தே, மகிழ்ச்சியும், கவலையும் ஏற்படுகிறது. எல்லாவற்றிருக்கும் மேலாக உறவில் வெளிப்படையாக இருப்பது, மனம் விட்டுப் பேசுவது என்பது என்பது மிக முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும்போது வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமையும்.



Click it and Unblock the Notifications











