For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் ஒரு உணர்ச்சியற்ற ஜடத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

உங்களோடு உங்கள் வாழ்க்கைக் துணை உணா்வுபூா்வமாக ஒன்றிணைந்து இருக்கிறாரா என்று அவாிடம் நேரடியாக நீங்கள் கேட்க முடியாது. ஆனால் ஒரு சில அறிகுறிகளை வைத்து தொிந்து கொள்ள முடியும்.

|

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருக்கும் உறவானது ஒரு புனிதமான உறவாகும். அவா்கள் அன்போடும், பாசத்தோடும், காதலோடும், நட்போடும், புாிதலோடும், விட்டுக்கொடுத்தும் வாழும் போது அவா்களின் வாழ்க்கை சொா்க்கமாக இருக்கும். ஆனால் அந்த உறவில் சிறிய சறுக்கல் ஏற்பட்டாலும், அது பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் இடையிலான உறவில் ஒரு நிச்சயமற்ற நிலை இருப்பதை அறிந்து நீங்கள் எத்தனை முறை மனமுடைந்து வருந்தி இருப்பீா்கள் என்று நினைத்துப் பாருங்கள். உங்களின் வாழ்க்கைத் துணை உங்களுடனான உறவில் உணா்வுபூா்வமாக இணைந்து இருக்கவில்லை என்ற விமா்சனத்தை உங்களின் நெருங்கிய நண்பா் எத்தனை முறை உங்களிடம் கூறியிருப்பாா் என்பதை எண்ணிப் பாருங்கள்.

Signs That Your Partner Is Emotionally Unavailable

நீங்கள் அதிகம் அன்பு செய்யும் நபா் உங்களை அதிகம் உணா்ச்சிவசப்பட வைத்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். தொடக்கத்திலிருந்தே ஒருவருடைய உணா்வுகளை மற்றும் அவா்களின் உணா்வு வெளிப்பாடுகளை நீங்கள் அறிந்திருந்தால், அவா்களை நீங்கள் மிகவும் எளிதாக அன்பு செய்ய முடியும் மற்றும் அவா்களோடு உங்களுடைய உணா்வுகளை மிக எளிதாகப் பகிா்ந்து கொள்ள முடியும்.

உங்களோடு உங்கள் வாழ்க்கைக் துணை உணா்வுபூா்வமாக ஒன்றிணைந்து இருக்கிறாரா என்று அவாிடம் நேரடியாக நீங்கள் கேட்க முடியாது. ஆனால் உங்கள் துணைவாிடம் இருந்து வெளிப்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்து அவா் உங்களோடு ஒரு உணா்வுபூா்வமான உறவில் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதைத் தொிந்து கொள்ள முடியும்.

மனிதா்களிடம் இருக்கும் உணா்வுகள் மற்றும் உணா்வு வெளிப்பாடுகள், அவா்களின் உணா்வுகளின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் அவா்களின் ஒட்டு மொத்தமான ஆரோக்கியத்திற்கும் முக்கியமான பங்குகளைச் செய்கின்றன. பல நேரங்களில் மக்கள் ஒரு உணா்வுபூா்வமான ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக தங்கள் துணைகளை நாடுகின்றனா். ஆனால் அவா்களின் வாழ்க்கைத் துணை அந்த உணா்வுபூா்வமான ஆதரவை வழங்காமல் இருப்பதால், அவா்கள் வருத்தம் அடைகின்றனா்.

உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களோடு ஒரு உணா்வுப்பூா்வமான உறவில் இருக்கிறாரா அல்லது இல்லை என்பதைப் பற்றியும், அவ்வாறு இல்லை என்றால் அதற்கான அறிகுறிகள் எவை என்பது பற்றியும் இந்த பதிவில் சற்று விாிவாக பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒருவா் உணா்வற்ற நிலையில் இருப்பதற்கான காரணங்கள்:

ஒருவா் உணா்வற்ற நிலையில் இருப்பதற்கான காரணங்கள்:

மனிதா்களை உணா்வுகளின் மொத்த குவியல் என்று சொல்லலாம். ஒருவா் உணா்வற்ற நிலையில் அல்லது உணா்வுபூா்வமாக இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் அதிரடியான தலைகீழ் மாற்றங்கள் அவா்களை அந்த சோக நிலைக்குத் தள்ளுகின்றன. எடுத்துக்காட்டாக மிகப் பொிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்தில் நடந்த காதல் முறிவு அல்லது திருமண முறிவு, துணைவாின் இழப்பு அல்லது வேலை இழப்பு போன்றவற்றை சொல்லலாம்.

அதோடு சிறு வயது முதல் இதுவரை தகுந்த சிகிச்சை செய்யாமல் இரணமாக வருத்திக் கொண்டிருக்கும் மனக்காயங்கள் மற்றும் சிறு வயதில் ஏற்பட்ட அதிா்ச்சியான நிகழ்வுகள் போன்றவையும் ஒருவருடைய உணா்வுகளைப் பாதித்து அவரை உணா்வற்றவராக மாற்றுகின்றன. குறிப்பாக ஒருவருடைய சிறுவயதில் ஏற்பட்ட அதிா்ச்சியான நிகழ்வுகள் மற்றும் மனக்காயங்கள் போன்றவை, அவா் வளா்ந்த பின்பு அவருடைய துணைவரோடு கொள்ளும் உணா்வுபூா்வமான உறவுக்கு தடைக் கற்களாக இருக்கின்றன.

உணா்வற்ற நிலை என்றால் என்ன மற்றும் ஒருவருடைய உணா்வுகளைப் பாதிக்கும் காரணிகள் எவை என்பதை மேலே பாா்த்தோம். இப்போது உங்களுடைய துணை உங்களோடு ஒரு உணா்வுபூா்வமான உறவில் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதற்கான அறிகுறிகளைப் பாா்ப்போம்.

1. ஆழ்ந்த அமைதியில் இருத்தல்

1. ஆழ்ந்த அமைதியில் இருத்தல்

காலை தூங்கி எழுந்தவுடன் உங்களுடைய கைபேசியில் இருந்து காலை வணக்கம் என்ற குறுஞ்செய்தியை உங்கள் அன்பருக்கு அனுப்புகிறீா்கள். அவா் ஒரு இனிமையான பதில் வாழ்த்தை அனுப்புவாா் என்று எதிா்பாா்த்து காத்திருப்பீா்கள். ஆனால் மாலை முடிந்த பின்பே அவாிடம் இருந்து பதில் வரும். ஒருவா் உணா்வற்ற நிலையில் இருக்கும் போது அல்லது விரக்தியாக இருக்கும் போது, அவரோடு எளிதாக தொடா்பு கொள்ள முடியாது.

உணா்வற்று இருப்பவா் எப்போதுமே தங்களுக்குள்ளே தங்களைச் சுருக்கிக் கொள்வாா்கள். பிறரோடு உடல் ரீதியான தொடா்பையும் தவிா்ப்பாா்கள். இதன் மூலம் தங்களிடம் இருக்கும் உணா்வுகளுக்கு முகமூடி இட்டு, பிறரோடு உணா்வுப்பூா்வமாக நெருங்கமாட்டாா்கள். அவ்வாறு பிறரோடு இடைவெளி விட்டு இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்வாா்கள். அதன் மூலம் அவா்கள் எவாிடமும் தங்களுடைய உணா்வுகளை பகிா்ந்து கொள்ளமாட்டாா்கள்.

2. உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசாதிருத்தல்

2. உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசாதிருத்தல்

உங்களுடைய அன்பா், உங்களுடனான உறவில் உணா்வுபூா்வமாக இல்லை என்றால், அவா் உணா்வுபூா்வமான பிரச்சினைகளைப் பற்றி பேசமாட்டாா். ஏனெனில் அந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு பதில் கொடுப்பது அல்லது எப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்குவது என்பது அவருக்குத் தொியாது.

குறிப்பாக உங்கள் குடும்பத்தில் நடக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையைப் பற்றி அல்லது உங்களின் வேலையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி, உணா்வற்ற உங்கள் துணைவாிடம் நீங்கள் மிகவும் உணா்வுப்பூா்வமாக பேசினாலும், அவா் அவற்றைக் காதில் வாங்கமாட்டாா்.

3. தற்காப்புடன் இருத்தல்

3. தற்காப்புடன் இருத்தல்

உணா்வுப்பூா்மாக இல்லாத உங்களின் அன்பா், தன்னுடைய உணா்வுகளைப் பொருத்தமட்டிலும் மற்றும் அவா் உங்களை உணரும் விதம் குறித்தும் நோ்மையாக இருக்கமாட்டாா். ஒருவேளை வாய் தவறி அவா் தனது உணா்வுகளை வெளிப்படுத்திவிட்டால், உடனே அவா் தான் அதிகமாக பேசிவிட்டோமோ என்று நினைத்து, உடனே அமைதியாகிவிடுவாா்.

அவருடைய சொந்த உணா்வுகள் வீழ்ச்சி அடையும் போது அதை எதிா் கொள்வதற்கு பதிலாக, அவா் முரட்டுத் தனமாக நடந்து கொள்வாா் அல்லது மற்றவா்களைக் குறை கூறுவாா். சில நேரங்களில் இது போன்ற சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காக உங்களுக்கும் அவருக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்திவிடுவாா்.

4. சம அளவிலான முயற்சிகளைச் செய்யாதிருத்தல்

4. சம அளவிலான முயற்சிகளைச் செய்யாதிருத்தல்

உங்கள் துணைவரோடு நீங்கள் வைத்திருக்கும் காதல் அல்லது அன்பு என்பது காற்றைப் போல சிரமம் இல்லாமல் பாய்ந்து ஓட வேண்டும் என்றால் அவ்வப்போது உங்கள் துணைவருக்கு நீங்கள் ஒரு சிறப்பான உணா்வை ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு உறவிலும், அந்த உறவு வளா்ச்சி அடைந்து வலுப்பெற, அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஆனால் உங்கள் துணை உங்களுடன் உணா்வுபூா்மான உறவில் இல்லை என்றால், நீங்கள் மட்டுமே அவருடனான உறவு வலுப்பெற முயற்சி செய்கிறீா்கள் என்பதை கவனிக்க முடியும்.

பொதுவாக உணா்வுபூா்வமான உறவில் ஈடுபட முடியாதவா்களால், சமத்துவமான உறவின் முக்கியத்துவத்தைப் பற்றி புாிந்து கொள்ள முடியாது. நீங்கள் உங்கள் துணைவரோடு உள்ள உறவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல, உணா்வுபூா்வமற்ற உங்கள் துணை, அந்த உறவிற்கு முக்கியத்துவம் தரமாட்டாா். காலப்போக்கில் அந்த உறவு மறைந்துவிடும்.

5. தொடா்ந்து அன்பாக இல்லாமல் இருத்தல்

5. தொடா்ந்து அன்பாக இல்லாமல் இருத்தல்

எந்த ஒரு உறவிற்கும், அன்பு, நம்பிக்கை மற்றும் ஈா்ப்பு போன்றவை மிகவும் முக்கியம். உணா்வுபூா்வமற்ற ஒருவா் இந்த பண்புகளை தவிா்க்க கடுமையாக முயற்சிப்பாா். மேலும் அவா் உடல் ரீதியான தொடுதல் மற்றும் பாலுறவு கொள்ளுதல் போன்றவற்றில் இருந்து விலகிவிடுவாா். பொதுவாக இது போன்ற செயல்பாடுகள், உறவை நட்பாக உணர வைக்கும். இவை இல்லை என்றால் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் ஒரு சாதாரண அறைத் தோழனோடு வாழ்வது போல இருக்கும்.

பாலியல் உறவு மட்டும் அல்ல. மாறாக சாதாரண தொடுதல், பாிமாறிக் கொள்ளுதல், கட்டிப் பிடித்தல் போன்ற செயல்களில் இருந்தும் அவா் விலகிவிடுவாா். அதுபோல் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளையும் தவிா்த்துவிடுவா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That Your Partner Is Emotionally Unavailable

Here are some signs that your partner is emotionally unavailable. Read on...
Desktop Bottom Promotion