For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கணவன்/மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கான டாப் காரணங்கள் என்னென்ன தெரியுமா?

|

ஒரு உறவில் நம்பிக்கை துரோகம் என்பது அந்த உறவை நாசப்படுத்தலாம், மேலும் உங்கள் துணைக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் கவலை முதல் மனச்சோர்வு வரை பலவிதமான உணர்ச்சிகளைக் கடந்து செல்லக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து அவர்கள் வெளிவர நீண்டகாலம் தேவைப்படும். அதற்கு மேல், உங்கள் செயலை நியாயப்படுத்த முயற்சித்தால், அவர்கள் இன்னும் வருத்தப்படக்கூடும்.

திருமணத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி ஒருவர் கள்ள உறவில் ஈடுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அவர்கள் எப்படி தங்களை நியாயப்படுத்துகிறார்கள் என்பது முற்றிலும் ஏமாற்றப்பட்ட நபரைப் பொறுத்தது. ஒருவர் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான பொதுவான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோபம் அல்லது பழிவாங்குதல்

கோபம் அல்லது பழிவாங்குதல்

பெரும்பாலும் மக்கள் கோபத்திலோ அல்லது பழிவாங்குவதற்காகவோ தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள். தங்கள் துணை தனக்கு துரோகம் செய்ததை அவர்கள் கண்டுபிடித்திருக்கலாம். அதனால் அவர்கள் கடுமையான காயத்திற்கு ஆளாவார்கள். எனவே தங்கள் துணைக்கும் அதே உணர்ச்சிகளைக் கொடுக்க நீங்கள் விரும்பலாம், இதனால் அவர்கள் தங்களுக்கு ஏற்படுத்திய வலியை அவர்கள் புரிந்துகொள்வார்கள். என்று பலரும் கருதுகிறார்கள்.

திருமணத்தில் மகிழ்ச்சியின்மை

திருமணத்தில் மகிழ்ச்சியின்மை

தங்கள் துணை தங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே அனைவரும் திருமண வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள். தங்கள் வாழக்கைத்துணை தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய மாட்டார்கள் என்று அவர்கள் உணரத் தொடங்கும்போது அவர்கள் அதை வேறொரு இடத்தில் தேடத் தொடங்குகிறார்கள், இது இறுதியில் தகாத உறவுகளில் முடிகிறது.

காதல் தீர்ந்து போவது

காதல் தீர்ந்து போவது

ஒருவரை காதலிக்கும் உணர்வு பொதுவாக எப்போதும் நிலைக்காது. ஆர்வம் மற்றும் உற்சாகத்தின் தீவிரம் பொதுவாக காலப்போக்கில் மங்கிவிடும். அந்த காதல் உணர்வு மங்கியவுடன், காதல் இல்லை என்பதை நீங்கள் உணரலாம். அல்லது நீங்கள் வேறொருவரை காதலிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

MOST READ: டீ குடிப்பதில் இவ்வளவு ரூல்ஸ் இருக்கா? டீயை இப்படி குடிக்கறதுதான் நல்லது... இல்லனா ஆபத்துதான்...!

உடல் அல்லது உணர்ச்சிரீதியாக தூரம்

உடல் அல்லது உணர்ச்சிரீதியாக தூரம்

ஒரு துணை நீண்ட நேரம் வேலைசெய்து அரிதாகவே வீட்டிலேயே இருக்கலாம், இதனால் மற்றவர் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம். அல்லது உங்கள் துணை உடல்ரீதியாக நெருக்கமாக இருக்கலாம், ஆனால் உணர்வுபூர்வமாக விலகி இருப்பார்கள். மற்றவர் இணைய முயற்சிக்கும்போது, துணை உணர்வுபூர்வமாக விலகி இருப்பார்கள். இது பெரும்பாலும் மற்றவர்களை உணர்ச்சிரீதியாகவும், உடல்ரீதியாகவும் இருக்கும் ஒருவரைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வைக்கிறது.

கமிட்மென்ட் சிக்கல்கள்

கமிட்மென்ட் சிக்கல்கள்

கமிட்மென்ட்டுடன் கடினமான நேரம் உள்ளவர்கள் சில சந்தர்ப்பங்களில் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கூடுதலாக, கமிட்மென்ட் என்பது அனைவருக்கும் ஒரே பொருளைக் குறிக்காது. உறவில் உள்ள இரண்டு நபர்கள் உறவின் நிலையைப் பற்றி மிகவும் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், இது சாதாரண உறவா அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததா என்பது அவர்களின் சிந்தனையைப் பொறுத்தது.

பாலியல் திருப்தியின்மை

பாலியல் திருப்தியின்மை

ஒருவரின் உறவில் பெரும்பாலும் பாலியல் அதிருப்தி, தங்கள் துணையுடன் சேர்ந்து எந்தவொரு பாலியல் அதிருப்தியையும் சந்திக்க முயற்சிப்பதற்குப் பதிலாக வேறு இடங்களில் திருப்தியைக் கண்டுபிடிக்க மக்களைத் தூண்டுகிறது. கள்ள உறவிற்கு இது முக்கியமான காரணமாக அமைகிறது.

MOST READ: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...!

குறைந்த சுய மரியாதை

குறைந்த சுய மரியாதை

சுயமரியாதைக்கு ஊக்கமளிப்பதும் துரோகத்தை ஊக்குவிக்கும். ஒரு புதிய நபருடன் உடலுறவு கொள்வது நேர்மறையான உணர்வுகளுக்கு வழிவகுக்கும். மேலும் நீங்கள் அதிகாரம் பெற்றவர், கவர்ச்சிகரமானவர், நம்பிக்கையுள்ளவர் அல்லது வெற்றிகரமாக உணரலாம். இந்த உணர்வுகள் உங்கள் சுயமரியாதையை வளர்க்கும். இதற்காக கள்ள உறவில் ஈடுபாடுபவர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why People Cheat in Relationship

Check out the common reasons why people cheat in relationships.