Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! உங்க திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடியாமல் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணுங்க போதும்...!
ஒரு திருமண உறவை வெற்றிகரமானதாக பராமரிக்க ஆண், பெண் இருவருமே தங்களால் முடிந்த முயற்சியை செய்ய வேண்டும்.
ஒரு திருமண உறவை வெற்றிகரமானதாக பராமரிக்க ஆண், பெண் இருவருமே தங்களால் முடிந்த முயற்சியை செய்ய வேண்டும். திருமணமானது பல சமரசங்கள், நிறைய புரிதல் மற்றும் தகவல் தொடர்பு, மற்றும் நிறைய பேரார்வம் மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக்கூடாது.

ஒரு திருமணம் விவகாரத்தில் முடிவதற்கு எது வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். தம்பதிகள் இருவருமே தங்களால் முடிந்தவரை விவகாரத்தை தவிர்த்து மகிழ்ச்சியாக வாழ சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை செய்யக்கூடாது. இந்த பதிவில் ஆண்கள் விவகாரத்தை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மனைவியை வசீகரிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்
திருமணம் ஆகிவிட்டதே என்று உங்கள் மனைவியை ஒருபோதும் வசீகரிப்பதை நிறுத்தாதீர்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்காதீர்கள். அவர்கள் உங்களுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வந்தவர்கள், நீங்கள் அவர்களின் மகிழ்ச்சியை உங்கள் இலட்சியமாக ஏற்றுக்கொண்டவர்கள், அவர்களின் இதயத்தை பாதுக்கப்பதாக வாக்களித்தவர்கள். எனவே ஒருபோதும் அதனை உடைத்து விடாதீர்கள். அவர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருங்கள்.

அவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள்
திருமணத்திற்குப் பிறகு மனைவியை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றும் பழக்கம் பலருக்கு உள்ளது, இது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்கள் மாறினால், நீங்கள் அவளை காதலிக்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் முதலில் காதலித்த பெண் அவர் இல்லை. நீங்கள் அவர்களை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், அவர்கள் அதை விரைவில் அறிந்து கொள்வார்கள், அது அவர்களை விரக்தி அடையச்செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள்
அவர்கள் சோகமாகவோ அல்லது வருத்தமாகவோ இருக்கும்போது, அவர்களைச் சரிசெய்வது உங்கள் வேலை அல்ல, அவர்களை அணைத்து எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லுங்கள். அவர்களைச் சுற்றி இருக்க அவர்கள் சொல்வதைக் கேட்க அங்கேயே இருங்கள். அவருக்கு ஆதரவாக இருங்கள், ஆலோசகராக அல்ல. சில சமயங்களில் அவர்களின் புலம்பல்களை கேட்பது மட்டுமே போதுமானது. மேலும், அவர் வருத்தப்படும்போது ஓடிவிடாதீர்கள். சில ஆண்கள் உணர்ச்சிகளைக் கையாள்வதில் மோசமாக இருப்பார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது, அருகில் இருப்பது, அவருக்கு டீ அல்லது காபி அல்லது அவருக்குப் பிடித்தமானவற்றை எடுத்துச் செல்வதுதான்.

உங்கள் சொந்த உணர்ச்சிகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்
உங்களை மகிழ்விப்பதும், நீ கேட்கும் போது கைதட்டும் குரங்காக இருப்பதும் மட்டுமே உங்கள் மனைவியின் வேலையல்ல. உங்கள் மகிழ்ச்சி உங்கள் கைகளில், உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளை நீங்களே கண்டறியுங்கள்.

பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்
பெரும்பாலான விவாகரத்து பெற்ற ஆண்கள் பணம் முக்கியம் என்று உங்களுக்குச் சொல்வார்கள், ஆனால் உங்கள் மனைவியுடன் சிக்கனமாகவும் மலிவாகவும் இருப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது அல்லது பாராட்டப்படாது. அது உங்கள் இருவருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கும். சேமிப்பை வைத்திருங்கள், அதைத் தொட வேண்டாம், ஆனால் சேமிக்க வேண்டிய இடத்தில் சேமித்து, செலவழிக்க வேண்டிய இடத்தில் செலவிடுங்கள். அதுதான் சீரான திருமண வாழ்க்கைக்கு அடிப்படையானது.



Click it and Unblock the Notifications