For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..

காதலிப்பவர்கள் முதல் கல்யாணம் செய்பவர்கள் வரை எல்லாத் தம்பதியினரும் இந்த 9 நிலைகளை கடந்து தான் வந்திருக்க வேண்டும். மனித வாழ்க்கையில் தாம்பத்திய உறவுகள் தனக்கென தனியான படிநிலைகளைக் கொண்டுள்ளது. இன்பாஃ

By ஹரிபாலசந்தர் பாஸ்கர்
|

காதல் என்ற சொல்லுக்கு அகராதியில் தினந்தோறும் புத்தம் புது அர்த்தங்கள் சேர்ந்துக் கொண்டே இருக்கின்றன. தனக்குத் தேவையான உடையை எப்படி மாடல் பார்த்து அளவு பார்த்து, கலர் பார்த்து நமது உடல் வாகுவிற்கு இதை அணிந்தால் பொருத்தமாக இருக்கும் என தேடிப் பார்த்து வாங்குகிறோமோ அதேப் போல் இன்றைய கால இளைஞர்கள் தனது துணையரை இந்த பூலோகச் சந்தையில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம், ம்யூசிக்லி போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தேடிக் கண்டிபிடித்து எடைப் போட்டு காதலியாகவோ காதலனாகவோ மாற்றிக் கொள்கிறார்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு அடிப்படை புரிதல் இல்லாமல் எதையோ எதிர்பார்த்து மலரும் இவ்வகையான காதல் ஒரு சில நேரங்களில் திருமணம் வரை செல்கிறது.

relationship

காதல் முதல் கல்யாண வாழ்க்கை வரை நவகிரகங்களை சுற்றி வருவது போல் நீங்கள் நிச்சயம் 9 படிநிலைகளை கடந்து தான் வந்திருக்க வேண்டும். உங்களுடைய ஏக்கம் புரிகிறது. இந்த 9 படிநிலைகளில் எந்த படிநிலையில் தாங்கள் இருக்கிறீர்கள் எனறு யோசிக்கிறீர்கள்? முழுமையாக கடைசி வரை 9 படிநிலை வரை படிக்கக் காத்திருங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எண்ணற்ற உறவுகளைச் சந்தித்து இருக்கலாம். அவையனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் எல்லா உறவுக்கும் ஒரு பொதுப்பண்பு உண்டு. அது தான் அன்பு என்னும் பேரமுதம். இந்த அன்பு தான் எல்லா உறவுகளையும் ஒரு புள்ளியில் இணைய வைக்கிறது. அன்பு சரியாக கிடைக்கப்பெற்ற தம்பதிகள் நலமாக வாழ்கிறார்கள். அன்பு கிடைப்பதில் சிக்கலைச் சந்திப்பவர்கள் வாழ்வின் கொடிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 மோக நிலை

#1 மோக நிலை

காதல் என்னும் மிகப்பெரிய அத்தியாயத்தின் மிகவும் அடிப்படையான நிலை மோக நிலையாகும். இன்ஃபாச்சுயேசன் எனப்படும் இந்த நிலை எல்லாரும் கடந்து வந்தவர்களாக இருப்போம். எதிர்பாலினத்தின் மீது வரக்கூடிய அதீத ஈர்ப்பைத் தான் மோக நிலை என்கிறோம். இந்த மோக நிலையை பலரும் தான் காதல் வயப்பட்டிருக்கிறோம் என எண்ணுகிறார்கள் ஆனால் அந்த எதிர்பாலினத்தின் பாலியல் ரீதியாக ஒருவர் ஒருவர் ஈர்க்கப்படலாம். இந்த நிலை புதிய உறவுகளை உருவாக்குவதில் சந்தோசமான நிலை. ஏனெனில் இந்த நிலையில் மட்டும் தான் எதிர்பாலினத்தின் நல்லதை மட்டும் பார்க்கும் மனோபாவம் இருக்கும். கானல் நீரைப் போன்ற அனுபவத்தைத் தருகிற இந்த நிலையில் தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Most Read: இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...

#2 புரிந்து கொள்ளும் நிலை:

#2 புரிந்து கொள்ளும் நிலை:

இந்த நிலையில் தான் ஒருவருக்கொருவர் மனமிட்டு பேச ஆரம்பிக்கின்றனர். இருவரின் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாற ஆரம்பிக்கின்றனர். உங்கள் காதலனிடமோ, காதலியிடமோ மணிக்கணக்காக பேச ஆரம்பிக்கிறீர்கள். இரவு பகல் என எதையும் பாராமல் பேசக் கூடிய தருணம் இதுதான். அதன் தொடர்ச்சியாக இருவரும் ஒரு குடும்பத்தில் இணையப் போகிறோம் என்பதை உணர்த்தும் விதமாக இவர் அப்பாவை அவள் மாமா என்பதும் இவள் அப்பாவை அவர் மாமா என்பதுமாக நீள்கிற இந்தக் கற்பனை வாத சம்பவங்கள் காதல் என்னும் மீளமுடியாப் பேரின்பக் கடலில் மூழ்கியது போன்ற உணர்வைத் தருகின்றன. தனக்கான துணையை சரியாகத் தேர்ந்தெடுத்தாச்சா என்ற முதல் கேள்விக்கு பாசிட்டிவ் ஆன பதில் வருவதும் இந்த நிலையில் தான்.

#3 குழப்பமான நிலை:

#3 குழப்பமான நிலை:

சோகங்களையும், தனிமையையும் பார்த்து சோகமான வாழ்க்கையை பாத்துட்டு என்னடா வாழ்க்கை கொஞ்சம் நல்லா போகுது அப்டினு சந்தோசப் பட்டு தன்னிறைவு அடையலாம்னு போனா... ஒருவரையொருவர் பத்தி பேசியாச்சு, அவரவர் குடும்பத்தைப் பற்றியும் பேசியும். இருவருமே ஒருவருக்கொருவர் வச்சிக்கிட்ட தேர்வில் பாஸ் மார்க் வாங்கினதுனாலத் தான் மூன்றாம் நிலையை அடைஞ்சிருக்காங்க. இங்க தான் உங்களுடைய காதல் போக வாழ்க்கையில் மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது. ஒருவருடைய கருத்துக்களை பிறிதொருவர் மீது திணிக்க இங்கத் தான் ஆரம்பிக்கிறோம். இதில் ஏற்படுகிற கருத்து வேறுபாட்டால் தான் உங்களுக்கும் உங்கள் துணையருக்கும் முதன் முதலில் சண்டை நடந்திருக்கும். கோபமாக இருப்பதாக எண்ணி இருவரும் பேசாம இருப்பீங்க. தினந்தோறும் மணிக்கணக்கா பேசிட்டு திடீரென பேசுவது சில காலம் தடைப் படும் போது மனம் கடந்து துடிக்க ஆரம்பிக்கும். நம்ம காதலிக்கலாம் அப்டின்னு எடுத்த முடிவு சரியான்னு முதல் முறையா யோசிச்சு விடைக் கிடைக்காம குழப்பங்கள் நிறைந்த அத்தியாயம் தான் இது.

#4 முடிவெடுக்கும் நிலை

#4 முடிவெடுக்கும் நிலை

நாம் காதல் வலையில் விழுந்தது சரியா இல்லையா என்று யோசிக்கும் சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரின் சமாதான முயற்சியால் ஒரு தெளிவோடு இந்தக் காதல் அத்தியாயத்தை ஒரு தெளிவான பார்வையில் பார்க்க ஆரம்பிப்பீர்கள். இப்போது தான் உங்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்களை ஆராய ஆரம்பிப்பீர்கள். உங்களுடைய எதிர்ப்பார்ப்புகளை பரிமாறிக் கொள்வீர்கள். இந்த இடத்தில் தான் எதிர்ப்பார்ப்புகள் தொடங்குகின்றன. சில மாதங்கள் கடந்த பிறகு பலவிதமான சோதனைகளுக்குப் பிறகு இரண்டு பேருக்குள்ள காதல் செட் ஆகுமா ? ஆகாதா? கல்யாணம் வரைக்கும் போகுமா போகாதா? இல்ல பாதிலேயே கழட்டி விட்டு போயிடுவாங்களா? அப்டிங்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்த நிலையில் தான் முடிவு எட்டப்படுகிறது.

உங்கள் காதல் பார்ட்னரைப் பற்றி உங்களுடைய கணிப்பும், எதிர்பார்ப்பும் நிஜ வாழ்க்கையில் இல்லாத போது மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தும். எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத கிஃப்ட்களை வழங்கும் போது பரவசமடையும் மனம். தனது பிறந்த நாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தருவார் என எதிர்பார்க்கும் போது பிறந்தநாளையே மறந்து விட்டு தூங்கும் போது தருகிற மனச்சோர்வு கண்ணாடிகள் உடையுமளவுக்கு கதறி அழுதாலும் தீராது.

#5 உறவைக் கட்டமைக்கும் நிலை

#5 உறவைக் கட்டமைக்கும் நிலை

இந்த நிலையில் தான் உண்மையாகக் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். இங்கு யார் முதலில் தங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்கள் என்ற அதிகாரப் போர் ஆரம்பமாகும். இந்தப் போரில் தான் உறவை நீட்டித்துக் கொள்வதற்கான விட்டுக் கொடுத்துப் போகும் சமரச முடிவுக்கும் வருகிறார்கள். உனக்காக இதை நான் விட்டுக் கொடுக்கிறேன் எனக்காக இதை விட்டுக் கொடுக்க மாட்டாயா என்ற செல்ல அணுகலில் தான் இந்த காதல் அத்தியாயம் வலுவான இடத்தைப் பிடிக்கிறது அதே சமயத்தில் அதிகாரப் பகிர்வில் சமரசம் ஏற்படவில்லை என்றால் நிச்சயம் காதல் அத்தியாயம் இந்த நிலையோடு முடிவு பெறுகிறது என்று அர்த்தம்.

#6 மகிழ்ச்சியான நிலை

#6 மகிழ்ச்சியான நிலை

உறவைக் கட்டமைக்கும் நிலையிலிருந்து தப்பிப் பிழைத்திருந்தால் நீங்கள் ஒருவருக்கொருவர் அந்நியோனியமாக மகிழ்ச்சியாக இருக்கும் இந்த அருமையான நிலையை அடைவார். உண்மையில் சொல்லப்போனால் காதல் போரில் வெற்றி என்பது எவ்வளவு இனிக்குமோ அதை விட இந்த நிலை பேரானந்தத்தை தரும். ஏனெனில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பை நன்குணர்ந்ததால் இங்கு சண்டைக்கோ சச்சரவுக்கோ வேலையே இல்லை. இந்த தருணத்தில் தான் இருவரும் கல்யாணம் என்ற பேச்சுக்கு முன்மொழிவார்கள். அல்லது நிச்சயதார்த்தம் பற்றிய எண்ணம் தோன்றி ஒருவருக்கொருவர் மோதிரங்களை மாற்றிக் கொள்வார்கள். சிலர் திருமணமும் செய்துக் கொள்வார்கள்.

#7 சந்தேகங்களின் நிலை:

#7 சந்தேகங்களின் நிலை:

மிக நீண்டகாலமாக இருவரும் இணைந்தே இருக்கிறீர்கள். திருமணம் என்ற யோசனை வரும் வரைக்கும் உனக்கு நான் எனக்கு நீ என்று சுருங்கிய உலகம் திடீரென விரிவாக்கத்திற்கு உட்படுகிறது. இவ்வளவு நாளாக இல்லாமல் இப்போது என்ன திடீர் மாற்றம் என சண்டையில் ஆரம்பிக்கும் இந்தத் திடீர் மாற்றம் சந்தேகத்திற்கு வழிவகுத்துச் செல்கிறது.

இந்தச் சந்தேகங்கள் இதுவரை நடந்த நெகட்டிவ்வான விசயங்களை ஒரு சேர நினைத்துப் பார்க்க வைக்கிறது. துணையரின் தவறுகளை பழகிய முதல் நாளிலிருந்து இன்று வரை பட்டியலிட்டுக் கூற உங்களுடைய துணையரோ நீங்கள் கூறியதற்கு ஈடாக நீ உங்களுடைய குறைகளையும் தராசுத் தட்டில் வைக்க காதல் அத்தியாயம் மிகப்பெரிய நிலநடுக்கத்தைச் சந்திக்கும்.

இப்போது தான் மற்றத் தம்பதியினரோடு ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள். உங்கள் உறவு நிலைத்திருப்பதற்கான சாத்தியங்களை எதையும் செய்ய மாட்டீர்கள். இறுதியில் எலியும் பூனையுமாக ஒரே வீட்டில் தஞ்சமடைவீர்கள்.

Most Read:டயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா?

#8 பாலியல் ஆய்வு:

#8 பாலியல் ஆய்வு:

சந்தேக நிலையைக் கடப்பது அந்தரத்தில் கயிற்றின் மீது நடப்பதற்குச் சமம். இந்த 8 வது நிலை பெரும்பாலானோர்க்கு வருவதில்லை. காதல், திருமணம் இந்த நிலைகளைக் கடந்தவர். இனப்பெருக்கத்திற்கான அடுத்த சுழற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அப்போது ஏற்படுகிற பாலியல் ஆர்வங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். மாறுபட்டவரின் தேவையை பூர்த்தி செய்ய முயற்சி செய்பவர்கள் காதல் அத்தியாயத்தில் தொடரலாம்.

#9 மனப்பூர்வமான நம்பிக்கை நிலை

#9 மனப்பூர்வமான நம்பிக்கை நிலை

இந்த நிலை தான் இறுதி நிலை. ஒருவரையொருவர் மனப்பூர்வமாக நம்பி எப்படிப்பட்ட சூழலிலும் தனது ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று வாழ்வில் எப்படிப்பட்ட துயரங்கள் வந்தாலும் இணைந்து போரிட்டு வெல்லும் மனப்பூர்வமான நம்பிக்கை நிலையை எட்டும் இடமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship marriage couples
English summary

The Most Essential Stages of relationship to Enjoy a Happy Married life

From lovers to marriages, all couples must have crossed these 9 levels. In human life, new relationships have separate stages. These steps, which begin with infatuation, go through many evolutions. And all of these steps make the experience of testing both types of compatibility very easy.
Desktop Bottom Promotion