For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணுக்கோ பெண்ணுக்கோ கள்ளத்தொடர்பு இருப்பதை எந்தெந்த அறிகுறிகள் வெச்சு கண்டுபிடிக்கலாம்?

By Mahibala
|

நம்பிக்கை என்பது காதலில் மட்டும் அல்ல எல்லா உறவுகளிலும் அதிகம் தேவைப்படும் ஒரு அம்சமாக உள்ளது. இந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் கணவனோ மனைவியோ நடந்து கொள்ளவதால் மற்றொருவருக்கு தீராத மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் வாழ்வில் அமைதியின்றி துயரக் கடலில் மிதக்கத் தொடங்குகின்றனர்.

relationship

காதல் என்பது அழகானது. ஒருவரின் இன்பம் மற்றும் துன்பத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் தேவை என்பதை உணர்த்துவது காதல். காதல் ஆழமானது. காதலில் மிகவும் முக்கிய அம்சம் நம்பிக்கை. ஒருவர் மீது மற்றொருவர் அதிக நம்பிக்கையுடன் இருத்தல் அவசியம். அதே சமயம் அந்த நம்பிக்கைக்கு ஏற்ற விதத்தில் இருவரும் நடப்பது அதை விட மிகவும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கள்ள உறவு

கள்ள உறவு

ஆண்கள் தடம் மாறிச் செல்வதை அறிந்து கொள்வதற்கான மேலும் சில வழிகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். இவற்றைப் படித்து, பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணை மற்றொரு பெண்ணிடம் தொடர்பில் இருப்பதை கண்டறியலாம். மனைவியை ஏமாற்றும் கணவர்களின் பொது வித்தைகளைப் பற்றி இங்கே இப்போது பார்க்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

"நான் இன்னொரு நபருடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று யாருமே தன் துணையிடம் சொல்வதில்லை. ஆனால் பெண்கள் சாமர்த்தியசாலிகள். ஒரு ஆண் தன் நேர்மையான வழியில் இருந்து விலகி நடக்கும்போது, அவன் விட்டுச் செல்லும் சுவடை ஆராய்ந்து அவனின் தீய தொடர்பை புரிந்து கொள்வாள் பெண்.

MOST READ: காம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா? கொஞ்சம் கவனமாவே இருங்க

அறிகுறி

அறிகுறி

உறவுகள் தனித்தன்மை பெற்றவை. குறிப்பாக ஒவ்வொரு கணவன் மனைவி உறவும் வெவ்வேறு தன்மை கொண்டிருக்கும். உங்கள் கணவரின் பல அறிகுறிகள் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை உறுதி செய்தாலும், அவர் உங்களிடம் நாணயமானவராகவே நடந்து கொள்ள முயற்சிப்பார். ஆனால் அது உண்மையில்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தயும் உங்கள் கணவன் வெளிபடுத்தினாலும், ஸ்திரமான ஆதாரம் கிடைக்கும் வரை பொறுத்திருந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

தோற்றம்

தோற்றம்

எப்போதும் உங்கள் கணவர் அவரின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம். திடீரென்று சில நாட்களாக மிகவும் அழகான உடையில் தோன்றினால் சற்று எச்சரிக்கை அவசியம். இதுவே உங்கள் கணவருக்கு வேறொரு தொடர்பு உள்ளது என்பதற்கான முதல் அறிகுறியாகும்.

உங்கள் கணவர், அழகான உடை அணிந்து கொள்ளவும், தனது தலை முடியில் வேறு ஸ்டைல் மாற்றிக் கொள்ளவும் மிகவும் ஆவலாக இருப்பார். நிறைய புதிய ஆடைகள் வாங்குவதும், எந்த நேரமும் கண்ணாடி முன் நிற்பதும் அவரின் புதிய பழக்கமாக இருக்கலாம்.

MOST READ: தன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது?

அதிக உணர்ச்சி வசப்படுவது

அதிக உணர்ச்சி வசப்படுவது

உங்கள் கணவர் உங்களிடம் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு கோபம் கொள்வது அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதை வெளிபடுத்தும் அறிகுறியாகும். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் அவரின் நேரத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் உங்களிடம் அவர் கோபம் கொள்ள நேரலாம். இதற்கு முன்னால் அவர் உங்களிடம் காட்டிய நெருக்கம் இப்போது குறைந்தது போல் உங்களுக்கு தோன்றலாம். அந்த நெருக்கத்தை அவர் தற்போது வேறொரு பெண்ணிடம் காட்டலாம்.

குண மாற்றங்கள்

குண மாற்றங்கள்

உங்கள் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தால், மன அழுத்தம் உண்டாகி அவர் உங்களிடம் அதிகம் கோபப்படலாம். இரண்டு உறவையும் சம நிலையில் வைக்க முடியாத காரணத்தால் நீங்கள் அவருடன் சண்டையிடும் சூழ்நிலையை உண்டாக்கி, அவர் வாழ்வில் நடந்த எல்லாவற்றிற்கும் நீங்கள் தான் காரணம் என்று உங்கள் மேல் பழி போடலாம்.

உங்கள் மேல் அவர் பார்வையில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணர முடியும். திடீரென்று உங்களை தொட்டதற்கெல்லாம் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்.

உங்கள் எடை அதிகரிப்பு அல்லது உங்கள் வடிவ மாற்றங்கள் போன்றவற்றை விமர்சித்து உங்களை கவலை கொள்ளச் செய்யலாம். நீங்கள் வீட்டை நிர்வகிப்பது பற்றி கேலி செய்யலாம். நீங்கள் பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவதாகவும், குழந்தைகளிடமும், தன்னிடமும் குறைந்த நேரம் செலவிடுவதாகவும் குறை சொல்லலாம்.

ரகசியமான விஷயங்கள்

ரகசியமான விஷயங்கள்

உங்கள் கணவர் அலைபேசிக்கு பாஸ்வர்ட் போட்டு லாக் செய்யலாம். அந்த பாஸ்வர்ட் என்ன என்பதை உங்களுக்கு பகிராமல் இருக்கலாம். இதற்காக அவர் கூறும் காரணங்கள் மிகவும் போலியானவையாக இருக்கலாம். அலுவலக மின்னஞ்சல் மிகவும் முக்கியமானது என்று கூறலாம். அலுவலக விஷயங்கள் தொடர்பான தகவல்கள் போனில் இருப்பதாக கூறலாம்.

போனை ஒருவேளை லாக் செய்யாமல், ஒவ்வொரு முறை போன் பேசி முடித்தவுடன் அழைப்பு வந்த எண்ணை அழித்து விடுவது, போனில் உள்ள தகவல்களை உடனுக்குடன் அழிப்பது போன்றவை குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். நீங்கள் அறையினுள் நுழைந்ததும், அவர் பார்த்துக் கொண்டிருந்த கணினி காட்சியை மறைக்கலாம். அல்லது நீங்கள் அவர் அருகில் இருப்பதை யூகித்து குறைவான ஒலியில் பேச நினைக்கலாம். மெதுவாக பேசினால் அல்லது சிரித்தால், அல்லது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று நோட்டம் விட்டால் அவரை சந்தேகிக்கலாம்.

MOST READ: பெண்களுக்கும் காண்டம் இருக்கா? அதை அணிந்து உறவு கொண்டால் சுகம் கூடுமா குறையுமா?

தொடர்பை தவிர்த்தல்

தொடர்பை தவிர்த்தல்

உங்கள் துணைவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தால், அவர் வெளியில் இருக்கும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.

வேலை காரணமாக வெளியில் பயணம் செல்வதாகக் கூறலாம். எங்கு போகிறார் என்பதை சரியாக சொல்லலாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள ஒரு எண்ணை கொடுக்காமல் போகலாம் அல்லது நீங்கள் அவரை அழைக்கும்போது அழைப்பை ஏற்காமல் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to find your husband is in another relationship

Being in love is beautiful. A partner is necessary for sharing your joys, fears, problems and aspirations.
Story first published: Friday, March 29, 2019, 18:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more