For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐ எம் ரேப் விக்டிம்! திருமணம் செய்து கொள்ள சம்மதமா? my story #222

பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமா உங்களுக்கு?

|

நம்மை புரிந்து கொண்டவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் இருந்தது என்னுடைய திருமணம் குறித்த கனவு,என் வாழ்வில் அந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு புரிந்து ஏற்றுக் கொள்ள யாரும் முன் வர மாட்டார்கள் என்பது உறுதியானது.

என்னைச் சுற்றியிருப்பவர்களும் யாருக்கும் எந்த உண்மையையும் சொல்லாமல் திருமணம் செய்து வைப்பது என்று தீர்மானித்தனர். ஆனால் அதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை, என்றைக்காவது ஒரு நாள் வாழ்வில் தெரியவரும் போது இதுவரை வாழ்ந்த வாழ்க்கையையும் கேள்விக்கு உள்ளாக்கப்படுமே

இறுதியாண்டின் போது ஆரம்பித்த திருமண ஏற்பாடுகள் அதாவது என்னுடைய 20 வயதில் ஆரம்பித்த பயணம் 26 வயது வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் உண்மையை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ள யாரும் முன் வரவில்லை என்கிற கேள்வி ஒரு பக்கம் என்றால் உன்னால தான் எல்லா பிரச்சனையும் என்று சமூகத்தின் எகத்தாள பார்வையும் இங்கே இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொண்ணு பாக்க வராங்க :

பொண்ணு பாக்க வராங்க :

கல்லூரி முடிந்து மதியம் வீட்டிற்கு திரும்பிய போது, சீக்கிரம் ரெடியாகு உன்னைய பொண்ணு பாக்க வராங்க என்றார். சேலையை எடுத்துக் கொண்டு அறைக்குள் செல்வதற்குள் வந்து விட்டார்கள் பரவாயில்லமா ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம் சும்மா உக்காருங்க என்று ரொம்பவும் கேஷுவலாக பேச ஆரம்பித்தார்கள்.

அம்மா அப்பாவுக்கு பிடித்துப் போனது. பெரியவங்கள கூப்டு தட்ட மாத்திக்கலாம் தேதி பாத்ரலாமா என்று கேட்டார் வந்தவரின் தந்தை.

அம்மாவிடம் சொல்லச் சொல்லி சைகை காண்பித்துக் கொண்டேயிருந்தேன், அம்மா என்னை கண்டு கொள்ளாத மாதிரியே நின்று கொண்டிருந்தார் அதை கவனித்தவர் என்ன பொண்ணு ஏதோ சொல்றா என்று தன் பேச்சை நிறுத்தி என்னைப் பார்த்தார்.

அறிவேயில்ல... :

அறிவேயில்ல... :

மேரேஜ் ஃபிக்ஸ் பண்றதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லணும் என்றேன். சின்ன புள்ளத்தனமா விளையாண்டுட்டு இருப்பா பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது சும்மாயிரு என்று அதட்டினார் அப்பா. நீ சொல்லுமா என்று வந்தவர்கள் சொல்ல....

ஐ ம் ரேப் விக்டிம். இத மறச்சு கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு இஷ்டமில்ல என்றேன். வந்தவர்கள் அதிர்ந்து எழுந்தார்கள் அம்மாவும் அப்பாவும் தலையை தொங்கப்போட்டுக் கொண்டார்கள். நாங்க பெரியவங்கட்ட பேசிட்டு வரோம் என்று சொல்லி இடத்தை காலி செய்தார்கள்.

உனக்கு அறிவேயில்லையா.... இப்டி வரவங்கட்ட பூரா சொல்லப்போறியா? ஜென்மத்துக்கும் உனக்கு கல்யாணம் நடக்காது. அத மறந்து தொலைக்க வேண்டியது தான என்று கத்தினார் அப்பா.

ஆறு ஆண்டுகள் :

ஆறு ஆண்டுகள் :

மேற்படிப்பு வேலை என்று அடுத்தடுத்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டது. அவ்வப்போது வருவதும் என் கதையை கேட்டு தெறித்து ஓடுவதுமாய் என் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.லாங் ரிலேசன்ஷிப் என்று எதுவும் அமையவில்லை. அப்படி அமைந்தாலும் அவனிடமும் இந்த விவரத்தை சொல்ல வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.

அன்றைக்கு மாலில் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். வந்த போது தான் என்னிடம் நான் வாங்காத இரண்டு புத்தகங்கள் இருப்பது தெரிந்தது.

அது என்னோட புக் :

அது என்னோட புக் :

நான் புக் ஆர்டர் செய்யவில்லையே என்று கடைக்கு போன் செய்து கேட்டால்... அங்கே வாடிக்கையாளர் ஒருவரின் புக் நான் எடுத்து பில் போட்டது எப்படி காணமல் போகும் என்று சொல்லி சண்டை போடுவதாகவும் அது தவறுதலாக நீங்கள் எடுத்திருப்பீர்கள் என்றார்கள்.

அடடா.... அந்த நபரின் எண்ணை வாங்கி பேசினேன். சாரி.... நான் வாங்கின ஜாமான எல்லாம் கவர்ல போடும் போது பக்கத்துல இருந்த உங்க புக்கையும் சேர்த்து போட்டுட்டேன் போல எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நான் வந்து கொடுத்திடறேன் என்றேன்.

அதே கடையில தான் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

அங்கே முதலில் கடும் டென்ஷனாக இருந்தவர் பின் சகஜ நிலைக்கு திரும்பினார். புத்தகத்தைப் பற்றி பேச ஆரம்பித்து அங்கேயே ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேச ஆரம்பித்தோம். நல்ல நண்பர்களாய் தொடர்வோம் என்று சொல்லி இருவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினோம்.

மெசேஜில் மேரேஜ் ஃபன்கன்ஷனுக்கு கூப்டுங்க ஃபேமிலியோட வந்திடறேன் என்று சொன்னான். எனக்கெல்லாம் கல்யாணம் நடக்காது நீங்க கூப்டுங்க நாங்க வரோம் என்று ரிப்ளை அனுப்பினேன்.

மாலையில் அம்மாவும் அவனும் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அம்மாவும் அப்பாவும் புரியாமல் விழிக்கிறார்கள்.

இன்னக்கி உங்க பொண்ண மால்ல பாத்ருக்கான். ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னான் அதான் நானே என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். வழக்கம் போல இவங்களும் எந்திருச்சு போகப்போறாங்க என்று சொல்லி அம்மா சலித்துக் கொண்டாள் அப்பா எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் உட்கார்ந்திருந்தார்.

 நீ சொல்லுமா :

நீ சொல்லுமா :

எனக்கோ இன்றைக்குத் தான் பார்த்திருக்கிறோம். பேசியிருக்கிறோம் அவனிடத்தில் எப்படி இதைச் சொல்வது என்று சற்றே தயக்கமும் ஏற்பட்டது. உண்மைக் காரணத்தை சொல்ல முடியாமல் எனக்கு மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்ல என்று சொன்னேன்.

அவர் அப்பாவை பார்க்க எல்லாம் அவ இஷ்டங்க இங்க.... இந்த காலத்து புள்ளைங்க எங்க பெத்தவங்க பேச்ச கேக்குறாங்க என்று சலித்துக் கொண்டார். என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா என்று அவனின் அம்மா கேட்க அம்மா எழுந்து உள்ளே சென்று விட்டார்.

சரி கிளம்புங்க :

சரி கிளம்புங்க :

சொல்ல முடியாத தயக்கம் கோபமாய் அழுகையாய் உருவெடுத்தது. யாரையாவது லவ் பண்றீயா? உங்க வீட்ல ஒத்துக்கலயா என்று கேட்டார். அந்த கருமத்த பண்ணித் தொலச்சிருந்தாவது தேவலன்னு தோணுது என்று தலையில் அடித்துக் கொண்டார் அப்பா.

நண்பனுக்கு முன்கூட்டியே சொல்லாமல் வந்தது தவறு என்று உணர்ந்திருப்பான் போல.... சாரி நான் அவசரப்பட்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன் ரியலி சாரி... அம்மா வாங்க இன்னொரு நாள் பேசிக்கலாம் என்று எழுந்து கிளம்பினான்.

என் பொண்ணு :

என் பொண்ணு :

என்னடிம்மா இவங்ககிட்ட மட்டும் ஏன் சொல்லாம அனுப்புற இவங்ககிட்டயும் சொல்லு நாலு பேர்கிட்ட சொல்லி இன்னும் உன் புகழ பரப்பட்டும் என்றார். இப்போது அவர்களுக்கு கிளம்புவதா வேண்டாமா என்று புரியவில்லை.

அவனின் அம்மா எழுந்து என்னருகில் வந்தார். என்ன பிரச்சனன்னு தெரியல தைரியமா இருங்க இதத்தவிர என்னால வேற எதுவும் சொல்ல முடியல என்று தோல் தட்டினார். இதற்கு மேலும் என்னால் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியவில்லை. நான் ஒரு ரேப் விக்டிம். என்ன கல்யாணம் பண்ணிக்கப்போறவங்களுக்கு இந்த உண்மையை சொல்லித் தான் கல்யாணம் நடக்கணும்னு உறுதியா இருக்கேன் ஆனா இதுல யாருக்குமே விருப்பமில்ல எனக்கு கல்யாணமே நடக்காதுன்னு முடிவெடுத்திருந்த நேரத்துல தான் நீங்க வந்திருக்கீங்க

திருமணம் :

திருமணம் :

அமைதியாக இருந்தார். என்ன நினைத்தாரோ நீ தான் என் மருமக உன்னைய மனப்பூர்வமா நான் ஏத்துக்குறேன் என்றார். கணவன் ஏற்றுக் கொள்வதே பெரிய வேலையாக நினைத்த நிலையில் மாமியாரே ஏற்றுக் கொள்வதாய் சொல்லிவிட்டார்.

நண்பனிடம் கேட்டேன்.... முழு சம்மதம் என்று சொன்னன். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கதை ஆரம்பம் :

கதை ஆரம்பம் :

அவர்களிடம் அன்று நடந்த சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தேன். வேலைக்காக மும்பையில் தோழிகளுடன் தங்கியிருந்தோம். யாரையும் முன்ன பின்ன தெரியாது. மூன்று மாதம் பயிற்சிக் காலம் என்பதால் ஸ்டைபண்ட் மட்டும் தான்.

பார்ட் டைமாக எதாவது வேலை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தேட ஆரம்பித்தேன்.

முடியாது :

முடியாது :

அறையில் தங்கியிருந்த ஒருத்தி கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டு பார்ட் டைம் வேலைக்காக சென்றேன், அங்கே சென்ற பிறகு தான் அது பாலியல் தொழில் செய்யும் இடமென்று தெரிந்தது. உடையைக் கழட்டு என்று பிடித்து இழுக்க நான் பயந்து வெளியே ஓட முயன்றேன்.

வெளியே பார்க்க ப்யூட்டி பார்லர் போல இருந்தது, அதனாலேயே தைரியமாக உள்ளே நுழைந்தேன் ஆனால் அங்கே விபரீதமாகிவிட்டது. வெளியே ஓடினால் விஷயம் வெளியே கசிந்திடும் என்று சொல்லி என்னை பிடித்து கட்டி வைத்தார்கள். இரண்டு நாட்கள் தண்ணீர் கூட கொடுக்காமல் வைத்திருந்தார்கள்.

ஒரு வாரம் :

ஒரு வாரம் :

என்னிடமிருந்த போன்,பேக் எல்லாம் வாங்கி வைத்து விட்டார்கள் யாரிடமும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. மும்பையில் அலுவலக நண்பர்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது. அவர்களுக்கு கால் செய்ய வேண்டுமென்றால் போன் வேண்டுமே.... பெற்றோருக்கு எப்படி தகவல் சொல்வது ஒன்றும் புரியவில்லை.

வேலைக் காரணமாக போன் செய்யவில்லை என்று அவர்களும் நினைத்துக் கொண்டார்கள். எந்த முன் தகவலுமின்றி தொடர்ந்து இரண்டு நாட்களாக வரவில்லை என்பதால் ஹெச் ஆர் வீட்டிற்கு தகவல் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான் அம்மா அப்பாவிற்கே தெரிந்திருக்கிறது.

 பேரம் :

பேரம் :

பதறியடித்துக் கொண்டு அலுவலக நண்பர்கள் தேட ஆரம்பித்தார்கள்.எங்கே சென்றிருப்பேன் என்று எந்த முன் யோசனையும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அன்றைக்கே போலீசில் புகார் அளிக்கலாம் என்று சென்றிருக்கிறார்கள்.

மும்பைல போய் கம்ப்ளைண்ட் பண்ணுங்க..... என்றும் அங்க போனா பொண்ணுங்க எல்லாம் திரும்ப கிடைக்க மாட்டாங்க என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பக்கம் அம்மாவும் அப்பாவும் அழுது புலம்ப நண்பர்கள் சிலர் வேறு ஏதேனும் வகையில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

அப்போது அங்கிருக்கும் போலீஸ் அதிகாரியே.... தனக்கு தெரிந்தவர் மும்பையில் பிரபலமானவர் என்றும் அவருக்கு இப்படி கடத்தல் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவரங்கள் எல்லாம் தெரியும் வேண்டுமானால் அவரை விசாரித்துப் பார்க்கச் சொல்கிறேன் ஆனால் அதுக்கு கொஞ்சம் செலவாகும் என்றிருக்கிறார்.

இப்டியே சாகப்போறியா :

இப்டியே சாகப்போறியா :

மூன்று நாட்கள் முடிந்திருந்தது. ஒரு பெண் பார்க்கவே பயங்கரமாய் இருந்தார்.... எதோ ஹிந்தியில் பேசினார் எதற்கும் பதிலளிக்கவில்லை என்பதால் தமிழா? என்று கேட்டார் ஆமாம் என்றதும் ஹிந்தி கலந்த தமிழில் பேச ஆரம்பித்தார்.

இங்கயிருந்து உன்னைய யாரும் கூட்டிட்டு போக மாட்டாங்க இப்டியே கிடந்து சாகப்போறீயா சொல்றத கேட்டுட்டு துட்டு வாங்கிட்டு போய்ட்டேயிரு என்று மிரட்டினார்.

அந்த இரவு :

அந்த இரவு :

சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்கள். போன் வேண்டும்.... என்னைத் தேடுவார்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் எதுவும் சொல்லவில்லை ஒரு முறை மட்டும் பேசிக் கொள்கிறேன் என்றேன்.... கொடுக்க மறுத்துவிட்டார்கள். உணவு சாப்பிட்டதும் ஊசி போட்டார்கள். அது என்ன ஊசியோ வாயெல்லாம் கசந்து வந்தது. அப்படியே மயக்கமாகி விழுந்துவிட்டேன்.

திடீரென்று உடம்பு சில்லிட்டது.... தாங்க முடியாது குளிர் கண்விழித்துப் பார்த்தால் ஹைகிளாஸ் ஹோட்டல் அறை அது.... இதுவரை அடைத்து வைத்திருந்த இடத்திற்கும் அதற்கும் துளியும் சம்பந்தமில்லை. என் உடம்பில் ஒட்டுத் துணியில்லை உடல் முழுவதும் காயங்கள். அடி வயிற்றில் வலி,முகத்தில் நகக் கீறல்கள் என கிடந்தேன்.

புரிந்தது. உலகமே இடிந்து விழுவது போல இருந்தது. அவ்வளவு தான் இனி சாக வேண்டியது தான். எதற்கு தேவையில்லாமல் வீட்டிற்கு சென்று அவர்களின் மானத்தை வாங்க வேண்டும் காணாம போனதாவே இருக்கட்டும்... நான் சாகணும் என்று மட்டும் சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

நிம்மதி :

நிம்மதி :

யார் செய்த புண்ணியமோ அன்றைக்கு அந்த ஹோட்டலில் ரைடு வந்திருக்கிறார்கள். அறைகளில் இருந்தவர்கள் எல்லாம் பதறி ஓடினார்கள். என்னையும் வெளியேறச்சொல்லி இழுத்தார்கள் அசைந்து கொடுக்கவில்லை அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

வந்த போலீஸ் அதிகாரி தமிழ்நாடு போல.... பேரென்ன என்றார்.

நான் சாகணும் என்றேன். அருகில் மவுனமாக உட்கார்ந்து கொண்டார். நீண்ட நேரம் கழித்து ஒரு கேள்வி தான் கேட்டார். தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டேன் அதோடு இந்த உண்மையை சொல்லித் தான் திருமணமும் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியேற்றேன்.

தப்பு பண்ணது நீயா? அவனா?....

அவன்.

அப்போ நீ ஏன் சாவுற? உன்னைய மாதிரி பொம்பளைங்க மானம் போச்சு மசுரு போச்சுன்னு ஒப்பாரி வைக்கிறனால தான் அவனுங்க துள்ளிட்டு திரியுறானுங்க என்றார். விவரங்களை கேட்டுக் கொண்டு தங்குமிடத்திற்கு கொண்டு வந்துவிட்டார். பின் அவரின் உதவியுடனே வீட்டிற்கும் வந்து சேர்ந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: marriage relationship my story
English summary

Will You Marry Rape Victim

Will You Marry Rape Victim
Story first published: Tuesday, April 3, 2018, 15:10 [IST]
Desktop Bottom Promotion