For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபீஸ் ட்ரிப் போகும் போது காண்டம்ஸ் எதுக்கு? - My Story #166

ஆபீஸ் ட்ரிப் போகும் போது காண்டம்ஸ் எடுத்து செல்ல வேண்டியதன் அவசியம் என்ன?

By Staff
|

நமது சமூகத்தில் ஆரம்பக் காலத்தில் இருந்து ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு வகுக்கப்பட்டு விட்டது. இந்த காரணத்தால் காலம் மாறினாலும், கலாச்சாரம் மாறினாலும், ஆண், பெண் சமம் என்ற நிலை பிறந்தாலும்... ஏன் கணவனுக்கு நிகராக அல்லது அவனை விட அதிகம் சம்பாதித்தாலும் கூட... ஒரு செயலை ஆண் செய்தால் ஒரு மாதிரியாகவும், பெண் செய்தால் வேறு மாதிரியாகும் காணும் கண்ணோட்டம் நமது சமூகத்தில் இன்றளவும் ஆழாமாக காலூன்றி நிற்கிறது.

எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால்... வீட்டில் செய்யும் தினசரி வேலைகளில் இருந்து, ஆபீஸ் விஷயமாக வெளியூர் சென்று வருவது, ஆபீஸில் உடன் பணிபுரியும் நபர்களுடனான நட்பு பாராட்டுதல் வரை என பல தடைகள், சங்கடங்கள், மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கும்.

உதாரணமாக, ஆபீஸில் பணிபுரியும் பெண்களுக்கு ஃபேஸ்புக்கில் இவர்கள் லவ் ஸ்மைலி போடலாம். அதுவே, தனது மனைவியின் படத்திற்கு, போஸ்டுக்கு வேறு ஆண் (ஆபீஸில் உடன் பணிபுரியும் ஆண்) அதே லவ் ஸ்மைலி போட்டால் இவர்களுக்கு கோபம் தலைக்கேறும். சில சமயம் சந்தேக குரல் கொக்கரிக்கும். நீங்கள் ஸ்மைலி போட்ட பொண்ணுக்கும் உங்கள மாதிரியே ஒரு புருஷன் இருப்பான்ல அவனுக்கும் இதே கோபம் வரும்ன்னு உங்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது...?

சரி! நான் கடந்த வந்த பாதை மற்றும் எனக்கு பதில் கிடைக்க வேண்டிய கேள்விகள் குறித்தும் இனி கூறுகிறேன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான்...!

நான்...!

கிரஷ் என்பதற்கு கூற அர்த்தம் தெரியாமல் வளர்ந்த பெண் நான். என்னை பொறுத்தவரை நண்பனாக இருந்தாலுமே கூட நெருக்கமாக செல்ஃபீ எடுப்பது, தோள் மீது கைபோடுவது என எதுவும் பிடிக்காது. முக்கியமாக 'டியர்', 'டார்லிங்' என்று செய்திகள் அனுப்புவது, அழைப்பது சுத்தமாக பிடிக்காது. அதற்கென எனக்கு ஆண் நண்பர்களே இல்லை என்றில்லை. ஆனால், அனைவருக்கும் ஒரு எல்லை கோடு போட்டு வைத்துள்ளேன். அந்த கோட்டை தாண்டி அவர்கள் என்னை நெருங்க முடியாது, முயற்சிக்கவும் முடியாது.

நிச்சயம்!

நிச்சயம்!

வாழ்நாள் முழுக்க ஒருவன் கூட மட்டுமே வாழ வேண்டும். கணவன், மனைவிக்குள் சண்டைகள் வரலாம் ஆனால், அது நான்கு சுவரை தாண்டி வெளியே சென்று விடக் கூடாது என அம்மாவால் அடிக்கடி அறிவுரை கூறி, கேட்டு வளர்ந்த பெண் நான்.

நிச்சயமான நாளில் இருந்தே, திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும், என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது, எந்தெந்த உறவுகள் எப்படி எல்லாம் நடந்துக் கொள்வார்கள், குடும்ப சூழலை எப்படி கையாள வேண்டும் என என் அம்மா தினமும் கிளாஸ் எடுக்க துவங்கிவிட்டார்.

என்னவர்!

என்னவர்!

மாப்பிளை எம்.பி.எ படித்தது, வேலை செய்வது எல்லாம் பெங்களூரில். எம்.என்.சி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலை செய்து வருபவர். கைநிறைய சம்பளம். பெங்களூரிலேயே செட்டில், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதால், நல்ல மாப்பிள்ளை, தரமான மாப்பிளைக்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது என எனக்கும், அவருக்கும் நிச்சயம் செய்து வைத்தனர்.

தோழிகள்!

தோழிகள்!

என்னவர் பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பார். ஆகவே, அவரது போட்டோ பார்த்ததில் இருந்தே லக்கி என கூற ஒரு கூட்டம் என்னை சுற்றிக் கொண்டிருந்தது. நிச்சயம் ஆன நாளில் அவரை என் கண் முன்னேவே கண்டு ஜொள்ளுவிட்ட தோழிகளும் இருந்தனர். அதற்காகவே அவருக்கு சற்றுப் போட வேண்டும் என்று எண்ணினேன்.

ஸ்மார்ட், அழகான புன்னகை, நகைச்சுவையுடன் பேசும் அவரது சுபாவம் என பலவன அவர் மீது நிச்சயத்தன்றே காதலில் விழுந்தேன்.

உடனே திருமணம்!

உடனே திருமணம்!

அவருக்கு ஒரு மாதத்திற்கும் குறைவாகவே லீவ் இருந்ததால், நிச்சயம் ஆன அதே மாதத்தில் எங்களுக்கு திருமண தேதியும் குறித்தனர். ஆகையால், இந்த காலத்து யுவதிகள் போல, நிச்சயம் டூ திருமணம் இடையே காதலிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. திருமணத்திற்கான வேலை, ஷாப்பிங், ஏற்பாடுகள் என என் நாட்கள் பூமியை விட வேகமாக சுழல ஆரம்பித்தது. எப்போதாவது அவரே கால் செய்வார் ஒருசில நிமிடம் பேசுவோம் அவ்வளவு தான்.

கல்யாணம்!

கல்யாணம்!

நல்லப்படியாக திருமணம் முடிந்தது. திருமணமான மூன்றாவது நாளே பெங்களூர் ஷிப்ட் ஆனோம். அப்பார்ட்மென்ட் வாழ்க்கை.

எனக்கு பணியிட மற்றம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால். ரிசைன் செய்துவிட்டு அங்கே போய் வேலை தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

பெங்களூர் சென்ற ஓரிரு மாதங்களில் எனக்கும் வேலை கிடைத்தது.

பெங்களூரில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வது எவ்வளவு கடினம் என்று சென்ற பிறகு உணர முடிந்தது. கொஞ்சம் நேர தாமதம் ஆனாலும், டிராபிக் நமது அன்றைய நாளின் பெரும்பகுதியை தின்றுவிடும். ஆகையால், காலை உணவு உட்கொள்ளாமல் போனாலும் பரவாயில்லை என்று அரக்கபறக்க ஓடவேண்டும்.

கன்சீவ்!

கன்சீவ்!

திருமணமான நான்கு மாதத்தில் கன்சீவ் ஆனேன். அவர் என் மீது மிகவும் அக்கறையாக இருந்தார். சரியாக வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆயிருந்தன.

அந்த டிராஃபிக்கில் ஆபீஸ் போய்வருவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆகவே, வேலையை ரிஸைன் செய்துவிடு, ஆறேழு மாதம் வரை இங்கேயே இரு. அதன் பின் ஊருக்கு போய் பிரசவம் ஆகி, குழந்தை ஆரோக்கியத்தை வைத்து மீண்டும் பெங்களூர் ஷிப்ட் ஆகிக் கொள்ளாம். நீயும், குழந்தையும் தான் முக்கியம் என அன்பாக பேசினார்.

அலுப்பு!

அலுப்பு!

அப்போது நான் ஐந்து மாத கர்ப்பம். அவரது பேச்சை கேட்டு ரிஸைன் செய்தேன். அப்பார்ட்மெண்ட்டில் நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவர் காலை 8 மணிக்கு கிளம்பினால் வீடு திரும்ப இரவு ஏழரை மணியாகும்.

அக்கம், பக்கம் அனைவரும் எங்களை போலவே தான். அதிலும் சில வீடுகளில் லிவ்-இன் உறவில் இருப்பவர்கள். எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வரும் பணிப்பெண்ணை தவிர பேச வேறு யார் துணையும் இருக்காது. அவளும் காலை ஒன்பது மணிக்கு வந்தால் 12 மணிக்கு எல்லாம் போய்விடுவாள். நானாக, வேலை முடிந்தும் கூட அவளை அனுப்பாமல் பேச்சு துணைக்கு மூன்று மணிவரை உடன் வைத்துக் கொள்வேன். அதற்கு அவளுக்கு இரண்டு சம்பளம் கொடுத்தேன் என்பது வேறு கதை.

அந்த நாள்...

அந்த நாள்...

நான் இரண்டு வாரங்களில் அம்மா வீட்டுக்கு திரும்ப வேண்டிய நாள் வந்தது. ஏழாவது மாதத்தின் துவக்கத்தில் இருந்தேன். வளைகாப்புக்கு சென்றால் இனி எப்படியும் ஒரு வருடம் கழித்து தான் பெங்களூர் என்று முன்னவே பேசி வைத்தது தான்.

நான் அம்மா வீட்டுக்கு சென்று விட்டால் வீட்டில் நபர்களுடன் குடியும், கும்மாளம் என்று கூத்தடிப்பார் என்று எனக்கு முன்னவே தெரியும்.

மாட்டேன் என்று என்னிடம் சத்தியம் செய்தாலும், இந்த விஷயத்தில் எந்த ஆண் தான் சத்தியத்தை காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்.

ஆபீஸ் ட்ரிப்!

ஆபீஸ் ட்ரிப்!

நான் அம்மா வீட்டுக்கு கிளம்பும் அதே நாள் ஆபீஸில் அனைவரும் வீக்கென்ட் ட்ரிப் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நானும் கிளம்புகிறேன் என்று கூறியிருந்தார். இது போன்ற ட்ரிப் இதுவே முதல் முறை இல்லை. வருடத்தில் ஓரிருமுறை செல்வது இயல்பு. அவரது முகநூலில் அவர் முன்ன சென்று வந்த படங்கள் நான் நிறையவே கண்டுள்ளேன்.

திருமணத்திற்கு பிறகு அவரது சட்டை பேண்ட் உட்பட நான் தான் இஸ்திரி போட்டு வைப்பேன். அதற்கு முன் வெளியே கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார். உடைகளை எடுத்து வைக்கவும் அவருக்கு தெரியாது. ஆனால், அன்றைய தினம் காலை அலுவலகம் செல்லும் முன்னேற அனைத்தும் தயார் செய்து வைத்திருந்தார்.

எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.

காண்டமஸ்!

காண்டமஸ்!

ஆபீஸ் சென்று மாலை சீக்கிரம் வந்துவிடுவேன். உன்னை பஸ் ஏற்றி விட்ட பிறகு தான் நான் செல்வேன் என்று கூறினார்.

அவர் ஆபீஸ் சென்ற பிறகு எப்போதும் போல பணிப்பெண் வந்தாள், அவளை அன்றைய தினம் 12 மணிக்கே அனுப்பிவிட்டேன். அதன் பிறகு வாரம் ஒருமுறை வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு போனால் போதும் என்றும் கூறிவிட்டேன்.

பிறகு அவரது சூட்கேஸ் எடுத்து அனைத்தும் எடுத்து வைத்து விட்டாரா? அல்ல ஏதானும் தவறவிட்டிருக்கிறா? என்று பார்க்க பேக் ஓபன் செய்தேன். அப்போது தான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கடைசி பேண்ட்க்கு கீழே இரண்டு காண்டம்ஸ் இருந்தது. ஆபீஸ் ட்ரிப் செல்லும் ஆணுக்கு காண்டம் எதற்கு?

மாலை!

மாலை!

மாலை சிரித்த முகத்துடன் வீட்டுக்கு வந்தார். வந்து முகம் கழுவி வந்து சோபாவில் உட்கார்ந்ததும். ஆபீஸ் ட்ரிப் என்ன பாங்காக்கிற்கா? என்று கேட்டேன். இல்லை ஒரு ரிசார்ட் தான் என்றார்.

பிறகு, அவர் பேக்கில் இருந்து எடுத்து வைத்திருந்த காண்டம்ஸ் எடுத்து மேஜை மீது வைத்தேன். ஒரு நொடி அதிர்ந்தார்... மறு நொடியே... இத ஏன் எடுத்த என்று கேட்டார்.

ஆபீஸ் ட்ரிப் போவதற்கு காண்டம் எதற்கு என்றேன்....

இது எனக்கல்ல... என் உடன் பணிபுரியும் நபர் கேட்டார். அவருக்காக எடுத்து வைத்தேன் என்று கூறினார்.

அவர் பேச, பேச.. காலையில் இருந்து தேக்கி வைத்திருந்த கண்ணீர் கண்களில் இருந்து கொட்ட ஆரம்பித்தது.

நான் ஏன் தவறு செய்ய போகிறேன். இது எனக்கு அல்ல... உடன் பணிபுரியும் நபருக்கு தான் என்று பேசி என்னை சமாதானபடுத்த முயன்றார்.

சந்தேகம்!

சந்தேகம்!

ஒருவழியாக அவர் சொன்னதை ஒப்புக்கொண்டு வீட்டுக்கு சென்றேன்.

இப்போது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கு வந்து என்னையும், குழந்தையும் பார்த்துவிட்டு தான் செல்கிறார்.

ஆனாலும் இப்போதெல்லாம் அவரது அன்பும், பாசமும் போலியானதோ என்ற சந்தேகம் என்னுள்.

அவர் தவறு செய்யாமலே இருந்திருக்கலாம்.

ஆனால், இது போன்ற சம்பவங்கள் நிகழ்வும் போது, ஒரு நபரின் மீது நம்பிக்கை வைப்பதற்கும், காதல் காட்டுவதற்கும் நெஞ்சம் ஏனோ தயங்குகிறது.

மூன்று நாட்களே முடியாது!

மூன்று நாட்களே முடியாது!

சில ஆண்களில் மனைவியின் அந்த மூன்று நாட்களை கூட தாங்கிக் கொள்ள முடியாது, பொறுத்துக் கொள்ள முடியாது. பிரசவம் என்பது முன்னூறு நாள் விஷயம். மனம் சல்லாபப்படும் தான். இதே சல்லாபம் பெண்களுக்கும் வந்தால்...?

ஆபீஸ் ட்ரிப் செல்கிறேன் என கூறி, என் தோழி கேட்டால் என்று நான் இதே போல காண்டமை எனது பையில் வைத்து எடுத்து சென்றால்.. அதை நீங்கள் பார்த்தால்... என்னை போலவே சாதாரணமாக எடுத்துக் கொள்வீர்களா? அல்ல... நான் கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்வீர்களா?

இனிமேலாவது கணவன் - மனைவி உறவு என்பது சமநிலையாக அனைத்து விஷயங்களிலும் இருக்க வேண்டும் என்பதை கொஞ்சம் உணருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why He Took Condoms on Office Trips? I need the answer - My Story!

Why He Took Condoms on Office Trips? I need the answer - My Story!
Desktop Bottom Promotion