For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தாண்டு கொண்டாட்டம்... தடம் மாறிய வாழ்க்கை. இளம்பெண் உருக்கம்! # My Story 124

தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட காதல் மற்றும் நியூ யியர் கொண்டாட்டம் பற்றி ஒரு பெண்ணின் உண்மைக்கதை.

|

புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத்துவங்கியது. கடந்த வாரத்திலிருந்து நேற்று நடு இரவு மூன்று மணி வரையிலுமான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாவற்றையும் தாண்டி புத்தாண்டு பிறந்து விட்டது. இப்படியான ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் தான் எங்களுடைய வாழ்க்கை மொத்தமும் அடங்கிப் போனது.

இந்தப் புத்தாண்டிலிருந்து சந்தோஷமானதாக இருக்கப்போகிறது. புதிய வாழ்க்கை, புதிய உறவுகள், என எல்லாமே புதிது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலில் இருந்த நாங்கள் அந்தப் புத்தாண்டில் தான் திருமண உறவில் இணைய இருந்தோம்.

ஒரு இரவு எல்லாமே மாற்றியது. என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. இதோ இன்று வரையிலும் அதிலிருந்து மீளாமுடியாமல் தவித்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2007!

2007!

அது 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். நானும் நவீனும் காதலித்து இரண்டாண்டுகள் நிறைவடையப்போகிறது. இருவர் வீட்டிலும் ஆரம்பத்தில் எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. பின்னர் நவீன் வீட்டில் சம்மதம் தெரிவிக்க, எங்கள் வீட்டில் கடைசி வரை ஒப்புக்கொள்ளவே இல்லை.

சரி என்ன பண்ணலாம்...

என்ன பண்ணலாம்னா? நான் என்ன சொல்றது எவ்ளவோ ட்ரை பண்ணியாச்சு கேக்க மாட்றாங்க

பேசாம நீ வீட்ட விட்டு வந்திடறியா? .... நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். சென்னை போய்டலாம் கல்யாணம் முடிச்சிட்டு மத்தத பேசிக்கலாம்.

அவன் சொல்லச் சொல்ல த்ரில்லிங்காக இருந்தாலும் உள்ளூர பயம் பெரிதாகி வளர்ந்து கொண்டேயிருந்தத். இது சரியா வருமா? என்று பொதுவாய் கேட்டு வைத்தேன்.

அவன் மனதை ஏன் கெடுக்க.... :

அவன் மனதை ஏன் கெடுக்க.... :

சரியா வரணும்.... அப்பறம் உங்க வீட்ல பாத்த பையனோட அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்கும். அப்பறம் நம்ம கல்யாணம் அவ்ளோ தான். இப்போனா நம்ம ரெண்டு பேரு கல்யாணம் முடிவு பண்றதுக்கு முன்னாடியே நம்ம இந்த சம்மந்தம் வேண்டாம்னு சொல்லிடலாம்.

நிச்சயம் ஆனதுக்கு அப்பறம்னா ரொம்ப ரிஸ்க்.... தேவையில்லாம இன்னொரு பையன்.... அவனோட குடும்பம்னு எல்லார் மனசையும் ஏன் கெடுக்கணும். நமக்கு இது தேவையா?

இப்படி எல்லாருக்கும் முன்னாடி அவமானப்பட்டா உன் ஃபேமிலி உன்னைய மன்னிக்குமா? சும்மாயிருந்தாக்கூட எதாவது பேசி சமாளிக்கலாம்.

டிசம்பர் :

டிசம்பர் :

அக்கா நானும் நவீனும் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் என்று முதல் குண்டை அக்காவிடம் போட்டேன். அவள் இரண்டாவது பிரசவத்திற்காக இங்கே இருக்கிறாள். எட்டு மாதம் கருவில் குழந்தையை சுமந்து கொண்டிருப்பவளிடம் இந்த அதிர்ச்சியை சொல்லலாமா வேண்டாமா என்று எல்லாம் யோசிக்கவில்லை.

வீட்டில் எனக்கிருந்த ஓரே ஆதரவு அவள் ஒருத்தி தான்.

நல்லா யோசிச்சிட்டியா?

ஆமாக்கா.... ரெண்டு பேரும் முடிவு எடுத்துட்டோம். சென்னை போய்டலாம்னு இருக்கோம்.

மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. தன் பர்சிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து என்னிடம் திணித்தாள். பின் அவளாகவே அப்பா கொஞ்சம் கத்துவாரு.... அம்மா தான் அழுவா கொஞ்ச நாள் இந்தப் பக்கம் வராத உன் மேல கோபம் குறஞ்சதும் நானே சொல்றேன் அப்போ வந்தா போதும்.

இருவருக்கும் குரல் உடைந்து நா தழுதழுத்தது.

போன் பண்ணுடி....

சரிக்கா.

கிறிஸ்துமஸிலிருந்து ஆரம்பம் :

கிறிஸ்துமஸிலிருந்து ஆரம்பம் :

டிசம்பர் 25லிருந்து நான் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆயுத்தங்கள் துவங்கியது. நகை, பணம் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டான். நான் படித்த டிகிரி சர்டிஃபிக்கேட் இன்னபிற சான்றிதழ்கள், பேன் கார்டு, வோட்டர் ஐடி, எல்லாவற்றையும் ரகசியமாக சேகரித்து வைத்தேன்.

புத்தாண்டன்று ஏதோ நோன்பு இருப்பதாகச் சொல்லி அம்மா பலகாரங்கள் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தாள். பின்னால் சென்று கட்டிக் கொண்டேன்.

உள்ளுக்குள்ளே என்னை மன்னித்துவிடு என்று மட்டும் ஆயிரம் முறை உச்சரித்திருப்பேன்.

என்னடி ஒரே கொஞ்சலா இருக்கு.... ரெண்டு பேரு இருக்கீங்கன்னு பேரு கிச்சன்ல ஒரு வேளையாவது பாக்குறீயா அவளாவது குழந்தைய பாத்துக்குறான்னு சொல்லலாம். நீ என்ன பண்ற என்று திட்டு....

இனி இந்த புலம்பலை எங்கே கேட்பேன்... எப்படிக் கேட்பேன்.

விளையாட்டிற்காக என்னைய திட்டிகிட்டேயிருக்க பாரு ஒரு நாள் வீட்ட விட்டு போகப்போறேன் என்று சொல்லி சிரித்தேன்.

அம்மா ஒரு முறைப்புடன்.... நாயி எங்க போகும். பசிச்சதுன்னா வீட்டத்தேடித்தான வந்தாகணும்... அப்போ வருவல்ல

போய் வரவா ? :

போய் வரவா ? :

டிசம்பர் 28 ஆம் தேதி இரவு பதினோரு மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறவதாய் திட்டம். நானும் நவீனும் மறுநாள் காலை ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்து கொண்டு நேராக சென்னை செல்லப் போகிறோம்.

எண்ணற்ற கனவுகள்.... இனி ஒவ்வொரு நாளும் சந்தோஷமானதாகவே இருக்கும். காதலித்தவனையே கரம்பிடிக்கும் வரம் எல்லாரும் வாய்க்காது. அது எனக்கு வாய்த்திருக்கிறது. அவனுக்காக அவனுடனான காதலுக்காக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

அக்காவை எழுப்பினேன். தூக்க கலக்கத்தில் கண்ணை சுருக்கி பார்த்தவள் நான் பேகுடன் தயாராய் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் ஏய்.... என்று கத்தினாள்.

அவள் வாயை மூடி.... ஏன்க்கா இப்டி கத்துற...

நிஜமாவே கிளம்பிட்டியாடீ...

ஆமா... போன் பண்றேன். பாய்க்கா என்று கையசைத்து விட்டு வெளியேறினேன்.

29 ஆம் தேதி :

29 ஆம் தேதி :

மறு நாள் என்னை வீட்டில் காணாமல் பயங்கர கலேபரம் நடந்திருக்கிறது. அப்பாவும் இன்னும் சிலரும் நவீன் வீட்டிற்குச் சென்று மிரட்டியிருக்கிறார்கள்.

முதலில் ஊரிலேயே பதிவுத் திருமணம் செய்யலாம் என்றிருந்தோம். பின் இவர்கள் வந்து எதாவது கலாட்டா செய்து விடுவார்களோ என்று நினைத்து சென்னைக்கு சென்றுவிடலாம் அங்கே பதிவுத் திருமணம் செய்யலாம் என்ற திட்டத்து 29 ஆம் தேதி காலை சென்னைக்கு பஸ் ஏறினோம்.

எங்களுக்கு அப்போது பெரும் துணையாய் இருந்தது நண்பர்கள் தான். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை எங்களுக்கு செய்து கொண்டிருந்தார்கள். லேடீஸ் ஹாஸ்ட்டல்ல தங்குறது ரிஸ்க் அதனால எங்க வீட்ல தங்கிக்கோ என்று ஒருத்திச் சொன்னால்.

அவர்கள் வீட்டில் என்ன சொல்வது என்று குழப்பம் வேறு , சரி சும்மா காலை குளித்து கிளம்ப மட்டும் தானே லேடீஸ் ஹாஸ்டலிலேயே தங்கலாம். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

புத்தாண்டில் திருமணம் :

புத்தாண்டில் திருமணம் :

மறுநாள் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் தேதி ரிஜிஸ்டர் ஆபிஸ் லீவ்..... புத்தாண்டின் முதல் நாள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று செவ்வாய் கிழமையாய் இருக்கிறது என்று மறு நாள் இரண்டாம் தேதியே திருமணம் செய்து கொள் என்று சொல்லிவிட்டார்கள் நண்பர்கள்.

எங்கே திருமணம். திருமணத்தன்று ஒவ்வொருவருக்கும் என்னென்ன வேலை.... ஊரில் என்ன நிலவரம் எல்லாம் பேசி விவாதிக்கப்பட்டது. அக்கா மூலமாக என்னை நெருங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

கல்யாணம் முடியுற வரைக்கும் யார்ட்டயும் எதுவும் சொல்லாத.... உங்க அக்காட்ட எதுக்கு சென்னைக்கு போறோம்னு சொன்ன என்று நவீன் கடிந்து கொண்டதால் அவளது போன் காலையும் எடுக்காமல் இருந்தேன்.

பேச்சுலர் பார்ட்டி :

பேச்சுலர் பார்ட்டி :

இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் பேச்சுலர் பார்ட்டி வேற கொடுக்கணும்... நியூ யியர் வேற என்று நண்பர்கள் உசுப்பேற்ற 31 ஆம் தேதி நியூ யியர் ஈவண்ட்க்கு நண்பர்களுடன் சென்றான் நவீன்.

போய்த்தான் ஆகணுமா? சொன்னா கேளு எனக்கு இதுல இஸ்டமே இல்ல

இதுல என்ன டீ இருக்கு.... பசங்க ரொம்ப ஆசப்படறாங்க நமக்காக எவ்ளோ ஹெல்ப் பண்றாங்க பேச்சுலர் பார்ட்டி தான என்று என்னை சமாதானப்படுத்திவிட்டு சென்றான்.

12 மணிக்கு பெசண்ட் நகர்ல பசங்க கேக் வெட்றதா சொன்னாங்க... அத முடிச்சிட்டு ஒரு மணிக்குள்ள நான் வீட்டுக்கு போய்டுவேன் சரியா... நீ பயப்படாத.

சரி நான் ரூம் போய்ட்டு எனக்கு மெசேஜ் பண்ணு.

31 ஆம் தேதி :

31 ஆம் தேதி :

இரவு ஒன்பது மணிக்கு நாங்கள் எல்லாரும் பீச்... ஹோட்டல் என்று ரவுண்ட் அடித்தோம். இருவருக்கும் நண்பர்கள் சார்பாக ஆலப்புழாவிற்கு ஹனிமூன் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அன்றைக்கு சர்ப்பரைஸாக கொடுத்தார்கள். நாளைக்கு போய் மாலை மட்டும் ஆர்டர் கொடுக்கணும் என்றாள் ஒருத்தி..

ஏய் மால எல்லாம் எதுக்கு தாலி கட்டினா பத்தாத???

அதெல்லாம் இல்ல கண்டிப்பா மால மாத்தணும் கடைசி நிமிஷத்துல ஃபிரண்டு பரபரப்பா கொண்டு வந்து நீட்டுவான் சினிமா எல்லாம் பாத்ததே இல்லையா என்று அவன் வாயை அடைத்தார்கள்.

நாளை மறு நாள் எனக்குத் திருமணமா? இன்னும் என்னால் நம்பக்கூட முடியவில்லை. வழக்கத்திற்கு மாறாக இந்தப் புத்தாண்டு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

சரி மணி 11.30 ஆகிடுச்சு நீங்க கிளம்புங்க நாங்க பெசண்ட் நகர் போய்ட்டு அங்க பசங்கள பாத்துட்டு அப்டியே கிளம்புறோம் என்றார்கள்.

இப்பக்குடிச்சதே போதும்... ஒழுங்கா ரூமுக்கு போ... போய்ட்டு போன் பண்ணு... வண்டிய நீ ஓட்டாத என்று எச்சரித்து அனுப்பினேன்.

புத்தாண்டு இரவு :

புத்தாண்டு இரவு :

சரியாக பன்னிரெண்டு மணிக்கு வெடி சத்தம் கேட்டது. 2008 பிறந்து விட்டது. இந்நேரம் அங்கே கேக் வெட்டிக் கொண்டிருப்பார்கள். பேச்சுலராக நவீன் கொண்டாடும் கடைசிப்பார்ட்டி....

12.30.... 12.45 நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது அவனிடமிருந்து எந்த போனும் வரவில்லை. மெசேஜ் அனுப்பினேன் பதிலில்லை. கால் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. உடனிருந்த நண்பர்களின் போனுக்கு முயற்சித்தேன்...

சொல்லுமா...

அண்ணா நவீன் கிளம்பிட்டானா?

நவீனா.... என்று யோசித்து அங்கிருந்தவர்களிடம் எதோ பேசினார்.

அவன் பசங்களோட பைக் ரேஸ் போயிருக்கான். இங்க பீச் ரோட்ல தான். அந்த கார்னர்ல நிக்கிறான் இங்க வந்ததும் போன் பண்ணச் சொல்றேன் இங்க சவுண்ட்ல எதுவும் கேக்கல என்று அவராகவே எல்லாவற்றையும் ஒப்புவித்து விட்டு போனை கட் செய்தார்.

எல்லாம் முடிந்தது :

எல்லாம் முடிந்தது :

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பைக் ரேஸ் சென்றிருக்கிறான் என்று கோபம் கோபமாக வந்தது. எப்படியும் நான் கோபப்படுவேன் என்று அவனுக்குத் தெரிந்திருக்கும். சமாதானப்படுத்த போன் செய்வான் எடுக்கக்கூடாது இப்போ எப்டி தவிச்சேனோ அதே மாதிரி அவனும் தவிக்கட்டும்.

ஒரு பக்கம் அழுகை ... ஒரு பக்கம் அவன் மீதான கோபம் என்று எல்லாம் கலந்து கட்டி அழுது... போனை ஸ்விட்ச் செய்து வைத்தேன்.

நவீன்! :

நவீன்! :

காலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்து போனைப் பார்க்க.... ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்தது. அச்சச்சோ எதோ அசட்டு கோபத்தில் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டோம் நவீன் கால் செய்திருப்பானே என்று போனை ஆன் செய்தேன்.

கிட்டதட்ட நாற்பது மிஸ்டுகால்கள்.... எல்லாமே நவீனுடன் இருந்த நண்பர்களிடமிருந்து. ஒரேயிரவில் எதற்காக இத்தனை கால்? என்ற சந்தேகத்துடன் குறுஞ்செய்திகளை பார்த்தேன்.

வந்திருந்த செய்திகளில் எங்கள் திருமண வாழ்த்துடன் உருவாக்கப்பட்டிருந்த க்ரூப்பைத்தான் முதலில் ஒப்பன் செய்தேன்.

அதிலிருந்து செய்தி என்னை உலுக்கியது. பைக் ரேஸில் ஈடுப்படிருந்தவர்களை போலீஸ் கைது செய்துவிட்டது. நம் க்ரூப்பிலிருந்து ஐந்து நபர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள் என்றது அந்த செய்தி.

தோழிகள் :

தோழிகள் :

தோழிக்கு போன் செய்தேன் போன் ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைக்கிற உனக்கு அறிவேயில்லையா நைட் எவ்ளோ நேரம் ட்ரை பண்ணோம் தெரியுமா?

இல்லப்பா.... சார்ஜ் என்று திக்கித் தடுமாறினேன்.

சரி இன்னும் பத்து நிமஷத்துல அங்கயிருப்பேன்.

ஏன்? எங்க போறோம்.... நவீன போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்கலா?

பதிலேதுமில்லை போனை கட் செய்து விட்டாள்.

வாழ்க்கையே ....

வாழ்க்கையே ....

எதுவும் பேசவில்லை என்னை வண்டியில் ஏற்றிக் கொண்டு நேராக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்குச் சென்றாள். இங்க எதுக்கு? நவீன் எங்க என்று எனது தொடர் கேள்விகள் எதற்குமே பதில் கிடைக்கவில்லை. அங்கே நண்பர்கள் சிலர் இருந்தார்கள்.

அவர்களும் சொல்லி வைத்தார் போல ஏன் நைட் போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ண... பாத்து சார்ஜ் போட்டு வைக்க மாட்டியா என்றார்கள்.

ஏய் என்னாச்சு..... ஏன் எல்லாரும் இங்க இருக்கீங்க க்ரூப்ல வேற பைக் ரேஸ்... போலீஸ் அரஸ்ட்டு அது இதுன்னு போட்ருந்தீங்க... நவீன் எங்க? அவன போலீஸ் அரஸ்ட் பண்ணியிருக்கா? ஜாமின் எடுத்திடலாம்ல... இது ஒண்ணும் பெரிய கேஸ் இல்லையே என்று படபடப்பாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றேன்.

ஏய்.... இரு ரிலாக்ஸ்... டென்ஷன் ஆகாத.. இத நீ தாங்கித்தான் ஆகணும். உனக்கு சப்போர்ட்டா நாங்க இருக்கோம் என்று ஒவ்வொருவரும் என் கையை பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்கிறார்கள்.

தைரியமிருந்தாள் உள்ளே போ.... :

தைரியமிருந்தாள் உள்ளே போ.... :

திருவிழாவில் தொலைந்து போன குழந்தைப் போல நவீன்....நவீன் என்று கத்தி அழ ஆரம்பித்தேன். எங்க அவன்... இப்பவே அவனப் பாக்கணும். போலீஸ் அரஸ்ட் பண்ணியிருந்தா அங்க கூட்டிட்டு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்திருக்க?

அவன போலீஸ் அடிச்சாங்களா? அடிப்பட்டிருகக என்று கேட்டேன். சுற்றியிருந்த நண்பர்கள் வாயைத் திறக்கவில்லை.

நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்த ஒருத்தி.

நவீன் நம்மல விட்டுப் போய்ட்டான். தலத்தனியா உடம்புத்தனியா உள்ள கிடக்கு தைரியமிருந்தா போய் பாரு என்று கத்தினாள்.

இது தான் நடந்தது :

இது தான் நடந்தது :

என்ன சொன்ன நவீனா? நவீன் இனி இல்லையா? நவீன் செத்துட்டானா என்று திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தேன். இனி அவன் இல்லை என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இல்ல அவன் சும்மா விளையாடுறான் நான் போய் எழுப்பினா எந்திருச்சுருவான் வா போய் பாக்கலாம் என்று இழுத்தேன். யாரும் வரவில்லை.

அவனின் நண்பர்களும் உடைந்து அழ ஆரம்பித்தாரக்ள்.

குடி போதையில் பைக் ரேஸ் சென்றிருக்கிறார்கள். அப்போது நிதானத்தை இழந்த ஒரு பைக் வழுக்கிச் சரிய.... அது இவர்கள் வண்டி போது மோதியிருக்கிறது.

இவர்களும் படு வேகமாக சென்று கொண்டிருந்ததால் வண்டியில் உட்கார்ந்திருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். மற்ற இருவரும் மணல் பகுதியில் விழ நவீன் தார் ரோட்டில் விழுந்திருக்கிறான்.

இவன் விழுந்த நேரத்தில் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த இன்னொரு பைக் ரேஸ் வண்டி இவன் கழுத்தில் ஏறிவிட்டிருக்கிறது.

ஸ்பாட் அவுட்.

நவீன் எனக்காக வருவான் :

நவீன் எனக்காக வருவான் :

விபத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸுக்கு தகவல் தர.... அவர்கள் தான் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். விஷயம் வெளியே கசிந்தால் பெரிய பிரச்சனையாகிடும் என்று சொல்லி பைக் ரேசில் ஈடுப்பட்ட பத்து பேரை கைது செய்திருக்கிறார்கள். அவற்றில் ஐந்து பேர் எங்களின் நண்பர்கள்.

என் புள்ளைய கொன்னுட்டியே டீ.... பாவி என்ற நவீனின் அம்மா என்னைப் கேட்ட கேள்வி என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது.

முகம் கூட பார்க்கமுடியாம பண்ணிட்டா.... இவளுக்காக எங்களையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு போனான் இப்போ பாரு பொணமா படுத்திருக்கான் அவன் அம்மா அடித்துக் கொண்டு அழுகிறார்.

இனி அவன் தான் எல்லாமே.... அவன் தான் என் வாழ்க்கையின் ஆதர்சம் என்று நம்பி வந்த நான் யார் மேல் பலி போடுவது.

மீண்டு வர வேண்டும் :

மீண்டு வர வேண்டும் :

அக்காவிற்கு விஷயம் தெரிந்து போன் செய்தாள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் பேச.... இப்போது வீட்டிற்குச் சென்றாள் அம்மா அப்பா என்னை எப்படி மன்னிப்பார்கள்.

இல்லை வேண்டாம். நான் என் வீட்டிற்கும் செல்லவில்லையே இங்கேயே இருக்கிறேன் என்று பிடிவாதமாய் இருந்தேன். அக்காவின் எந்த ஒரு போன் காலையும் எடுக்கவில்லை.

மருத்துவ சிகிச்சை பெறுமளவுக்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். இனி என் வாழ்க்கையே முடிந்தது.

நான் அதிர்ஷ்ட்டமில்லாதவள் என்று மட்டும் சொல்லிக் கொண்டு நடைபிணமாக இருந்த என்னை நண்பர்கள் தான் தேற்றினார்கள்.

ஒரு வருடம் கழித்து அப்பா போன் செய்து பேசினார். வீட்டிற்கு அழைத்தார். மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு வைத்துவிட்டேன், அங்கே செல்ல எனக்கு அப்போதும் விருப்பமிருக்கவில்லை.

தனிமையில்...

தனிமையில்...

இரண்டு வருடங்கள் உருண்டோடியது. சென்னையிலேயே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் நவீனின் இறப்பிற்கு நான் தான் காரணமோ அன்றைக்கு விடாப்பிடியாய் நீ செல்லக்கூடாது என்று தடுத்திருக்கலாமோ என்ற குற்றவுணர்ச்சி என்னை உலுக்கிக் கொண்டேயிருந்தது.

2008 ஆம் வருடத்திற்கு பின்னர் ஒவ்வொரு புத்தாண்டின் போதும். நான் கண்டிப்பாக பெசண்ட் நகர் பீச்சில் இருப்பேன். அன்னக்கி இங்க தான் நவீன் இருந்தானென்ற நினைப்பில் தான் எனக்கு புத்தாண்டு பிறக்கும்.

ஆம், இனி என் வாழ்க்கையில் நவீனைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்ற முடிவுடன் ஐந்து வருடங்கள் திருமணம் செய்யாமலேயே கடந்து விட்டேன். நண்பர்கள் ஒவ்வொருவரும் க்ரூப்பில் மட்டும் அட்டெண்டென்ஸ் போடுபவர்களாக வாழ்க்கை அவர்களை இறுக்கியது. மீண்டும் ஓர் தனிமை.

குழந்தையாய் அவன் :

குழந்தையாய் அவன் :

மருத்துவ ஆலோசனைப் பெற்று. ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்கலாம் என்று முடிவெத்தேன். எழுதிக் கொடுத்து இரண்டாண்டுகள் கழித்து ஒர் இல்லத்திலிருந்து அழைத்து இவனைக் கொடுத்தார்கள். ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து அன்று மதியம் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

அலுவலகத்தில் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு சொல்லிவிட்டேன். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னுள்ளேயும் என்னைச் சுற்றியும் மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்திருந்தது. அவனால் தான் எல்லாமே..... ஆம், குழந்தைக்கு நவீன் என்றே பெயர் வைத்திருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This New Year Celebration Will Change Your Life

This New Year Celebration Will Change Your Life
Desktop Bottom Promotion