For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமான இந்திய பெண்கள் கணவர்களிடம் பகிர்ந்து கொள்ள பயப்படும் விஷயங்கள்!

திருமணமான இந்திய பெண்கள் கணவர்களிடம் பகிர்ந்து கொள்ள பயப்படும் விஷயங்கள்!

By Staff
|

திருமணமாகும் முன் ஒருசில மாதத்தில் இருந்து, திருமணமான பிறகு ஒருசில மாதங்கள் வரை பல வகைகளில் புது கணவன், மனைவி இடையே சில அச்சங்கள் இருக்கும். அதிலும், புது மனைவியிடம் அதிகமாகவே இருக்கும். காரணம் புது வீடு, புதிய நபர்கள், புதிய சூழல் என பலவன அச்சங்களை ஏற்படுத்தும்.

இப்படி, திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பல வகையிலான அச்சங்களில் இரு பிரிவு இருக்கின்றன. ஒன்று, கணவன் - மனைவி உறவு, அதன் பல கட்டங்கள்... சில விஷயங்கள் குறித்த தயக்கங்கள் என கணவன் - மனைவி உறவுக்கு மத்தியில் ஏற்படும் பயம்.

மற்றொன்று, பிற உறவுகளால் ஏற்படும் தாக்கம் மற்றும், தனது பெற்றோருக்கு புது மனைவி உதவலாமா, கூடாதா? "தனது முன்னாள்" குறித்து எவற்றை எல்லாம் கூறலாம், எவற்றை எல்லாம் மறைக்கலாம். எவை எல்லாம், எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தும் என பெண்கள் கணவனிடம் கூட பயப்படும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதில், அவர்கள் முதன்மையாக பட்டியலிட்டு வைத்திருக்கும் ஐந்து விஷயங்கள் குறித்து நாம் இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சண்டை!

சண்டை!

காலம், காலமாக காணப்படும் தீர்வில்லாத ஒரு பிரச்சனை தான் இது. கணவரின் சகோதரிகள் அல்லது கணவரின் சகோதரர்களின் மனைவிக்கும் புதியதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை உண்டாகும். இதற்கு காரணம், எங்கே இதுநாள் வரை தங்களுக்கு மட்டும் கிடைத்த அந்த மரியாதை அல்லது மதிப்பு இனி இன்னொருத்தி அபகரித்துக் கொள்வாளோ என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

மேலும் சிலர்... சிறிய விஷயத்தை கூட பெரிதுப்படுத்தி சண்டை போடுவார்கள். இந்தியா போன்ற நாடுகளில் இது பரவலாக காணப்படும் பிரச்சனை. இதுக் குறித்து கணவனிடம் கூறினால், அவர் தன்னை எப்படி எடுத்துக் கொள்வார். புதியதாக வந்த தன்னை சந்தேகப்படுவாரோ என நிறைய அச்சம் கொள்கிறார்கள்.

சேமிப்பு!

சேமிப்பு!

ஆண்களை காட்டிலும் பெண்கள் மிகவும் சிக்கனமாக செலவு செய்வார்கள். பார்க்க தான் அவர்கள் நிறைய ஆடைகள், உபகரணங்கள் வாங்குவது போல இருக்கும். அவர்கள் ஆயிரம் ரூபாயில் மூன்று டாப் வாங்கிவிடுவார்கள். ஆனால், நாம் வாங்கும் ஒரு ஜீன் மற்றும் ஷர்ட் மட்டுமே இரண்டாயிரத்து ஐநூறில் இருந்து மூவாயிரம் வரை ஆகும். (ஆனால், அந்த ஒன்றை மட்டுமே நாம் வருடம் முழுக்க போட்டு தேய்த்து கிழிப்போம் என்பது வேறு கதை.)

பெண்கள் நிறைய பணம் சேமித்து வைப்பார்கள். ஆனால், அதுகுறித்து கணவனிடம் கூற மாட்டார்கள். அவசர தேவை என்று வரும் போது நிச்சயம் அதை கொடுத்து உதவுவார்கள் எனிலும், அவர்களுக்கு தெரியாமல் சேமித்து வைப்பதை நினைத்து அவர்கள் அச்சம் கொள்வதும் உண்டாம்.

முன்னாள்...

முன்னாள்...

பெரும்பாலும் அனைவரின் வாழ்விலும் ஒரு "முன்னாள்" இருக்கும். சிலரது வாழ்வில் அவர்களே இந்நாளிலும் இருப்பார்கள். பலரது வாழ்வில் அந்த கொடுப்பினை இருப்பது இல்லை. திடீரென ஏதாவது ஒரு காரணத்தால், சந்தர்ப்ப சூழலால் அந்த "முன்னாளை" காண வேண்டிய நிலை உண்டாகலாம்.

கணவனுக்கு முன்பே தெரிந்திருந்தாலும், தெரியாமல் போனாலும் கூட... அந்த "முன்னாளை" பார்தால், பேசினால்... அது கணவனுக்கு தேர்ந்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் வேறுவிதமாக சிந்திப்பார்களோ என்ற அச்சம் பெண்களுக்குள் இருக்கிறது.

செக்ஸ்!

செக்ஸ்!

உண்மையில் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நோ இது. ஆம்! செக்ஸ் என்பது ஒருவரின் விருப்பதின் பால் மட்டும் நடக்க வேண்டிய வேலை அல்ல. இருவரும் ஒருமனதாக சேர வேண்டிய நிலை செக்ஸ். ஒருவேளை கணவன் வேண்டும் போது, உங்கள் சூழல், மனநிலை அதற்கு ஏற்ப இல்லை எனில் கண்டிப்பாக நீங்கள் நோ கூறலாம். அதில் தவறே இல்லை.

ஆனால், இந்திய பெண்கள் கணவன் செக்ஸ் வேண்டி, தாம் முடியாது என்றால் அவர் கோபித்துக் கொள்வாரோ, தவறாக எடுத்துக் கொள்வாரோ என்ற மனதிற்குள் நினைத்துக் கொண்டு... வேண்டா வெறுப்பாக செக்ஸில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் மனவிருப்பம் இன்று உடலுறவில் ஈடுபடுவதால் தான் இல்லறத்தில் மனக்கசப்பு ஏற்படுகிறது. இதை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.

பணவுதவி!

பணவுதவி!

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் பயப்படுவது இந்த விஷயத்திற்காக தான். ஆம்! திருமணத்திற்கு பிறகு தங்கள் பெற்றோருக்கு பணவுதவி செய்வதை கணவன் ஏற்பாரா? மாட்டாரா? என்ற ஒரு சஞ்சலத்தில் பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இன்று படித்த மணமகன்கள் கூட பெண்களை அவர்கள் பெற்றோருக்கு பணவுதவி அளிக்க தடை போடுகிறார்கள் என்பது தான் வருத்தத்திற்குரியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Indian Married Women Afraid To Share With Their Husbands

These Are The Things Indian Married Women Afraid To Share With Their Husbands
Desktop Bottom Promotion